← செய்திகளுக்குத் திரும்பு
சத்துருக்களோடு யுத்தம் செய்வது வாழ்வின் ஒரு பகுதி. அஞ்சாமல் அவர்களை எதிர்கொள்ளுங்கள்.
படத்தைப் பதிவிறக்கு

சத்துருக்களோடு யுத்தம் செய்வது வாழ்வின் ஒரு பகுதி.

“புதன், 29 நவம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இஸ்ரவேலரே, கேளுங்கள்: இன்று உங்கள் சத்துருக்களுடன் யுத்தஞ்செய்யப் போகிறீர்கள்; உங்கள் இருதயம் துவள வேண்டாம்; நீங்கள் அவர்களைப் பார்த்துப் பயப்படவும் கலங்கவும் தத்தளிக்கவும் வேண்டாம். உபாகமம் 20:3 வாழ்க்கை ஓர் யுத்தம் அல்லது போராட்டம். வாழ்வதற்கும் வளர்வதற்கும், ஒவ்வொருநாளும், எதிர்மறையான எண்ணங்கள், ஆரோக்கியமற்ற உறவுகள், விமர்சனங்கள், பாதகமான சூழ்நிலைகள் ஆகியவற்றையெல்லாம் நாம் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் இதில் ஏதோ ஒன்றோ, அல்லது எல்லாப் பிரச்சனைகளுமோ கூட மாறுபட்ட அளவுகளில் இருக்கும். எப்படியாவது தேவனுடைய ஜனங்கள் தேவ சித்தத்தைச் செய்யாதபடிக்கும் அவர்களைப் பாவத்தில் சிக்க வைக்கும்படிக்கும் பிசாசு அநேகத் திட்டங்களைத் தீட்டுகிறான். 1. ஏதோ ஒரு பாவத்தில் அல்லது அடிமைத்தனங்களில் சிக்குண்டிருக்கிறீர்களா?2. உங்கள் பணியில் அல்லது ஊழியத்தில் வரும் எதிர்ப்புகளைச் சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறீர்களா? # திடன்கொண்டு தைரியமாய் இருங்கள்.# வாழ்வின் பல்வேறு துன்பங்களையும் எதிர்ப்புகளையும் நீங்கள் கடந்து சென்றே ஆக வேண்டும்# உங்கள் ஜென்ம சுபாவத்தோடுகூட அநேக யுத்தங்களை நீங்கள் சந்தித்தாக வேண்டும்.# ஆகிலும் நற்செய்தி என்னவெனில் இந்த யுத்தத்தில் நீங்கள் தனிமையாயில்லை. # பரிசுத்த ஆவியின் மூலம் இயேசு உங்களுக்குள் இருந்து, யுத்தத்திற்கு உங்களைப் பழக்குவிக்கிறார். உங்களைப் பெலப்படுத்தி, திட்டங்கள் தந்து வழிநடத்தி, உன்னதத்திலிருந்து உதவியைக் கட்டளையிடுகிறார்.# ஆகவே யுத்தத்திலிருந்து பின்வாங்காதிருங்கள்.# ஜெயம் உங்களுடையது, சீக்கிரத்தில் தேவன் உங்களுக்குப் பலனளிப்பார். ஜெபம்:கர்த்தராகிய இயேசுவே, எனது சத்துருக்களோடு யுத்தம் செய்யும்போது திடமாயிருந்து யுத்தத்தில் ஈடுபட எனக்கு உதவும். ஜெயங்கொண்டு வெற்றிபெற எனக்குதவும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

புதன், 29 நவம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இஸ்ரவேலரே, கேளுங்கள்: இன்று உங்கள் சத்துருக்களுடன் யுத்தஞ்செய்யப் போகிறீர்கள்; உங்கள் இருதயம் துவள வேண்டாம்; நீங்கள் அவர்களைப் பார்த்துப் பயப்படவும் கலங்கவும் தத்தளிக்கவும் வேண்டாம். உபாகமம் 20:3 வாழ்க்கை ஓர் யுத்தம் அல்லது போராட்டம். வாழ்வதற்கும் வளர்வதற்கும், ஒவ்வொருநாளும், எதிர்மறையான எண்ணங்கள், ஆரோக்கியமற்ற உறவுகள், விமர்சனங்கள், பாதகமான சூழ்நிலைகள் ஆகியவற்றையெல்லாம் நாம் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் இதில் ஏதோ ஒன்றோ, அல்லது எல்லாப் பிரச்சனைகளுமோ கூட மாறுபட்ட அளவுகளில் இருக்கும். எப்படியாவது தேவனுடைய ஜனங்கள் தேவ சித்தத்தைச் செய்யாதபடிக்கும் அவர்களைப் பாவத்தில் சிக்க வைக்கும்படிக்கும் பிசாசு அநேகத் திட்டங்களைத் தீட்டுகிறான். 1. ஏதோ ஒரு பாவத்தில் அல்லது அடிமைத்தனங்களில் சிக்குண்டிருக்கிறீர்களா?2. உங்கள் பணியில் அல்லது ஊழியத்தில் வரும் எதிர்ப்புகளைச் சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறீர்களா? # திடன்கொண்டு தைரியமாய் இருங்கள்.# வாழ்வின் பல்வேறு துன்பங்களையும் எதிர்ப்புகளையும் நீங்கள் கடந்து சென்றே ஆக வேண்டும்# உங்கள் ஜென்ம சுபாவத்தோடுகூட அநேக யுத்தங்களை நீங்கள் சந்தித்தாக வேண்டும்.# ஆகிலும் நற்செய்தி என்னவெனில் இந்த யுத்தத்தில் நீங்கள் தனிமையாயில்லை. # பரிசுத்த ஆவியின் மூலம் இயேசு உங்களுக்குள் இருந்து, யுத்தத்திற்கு உங்களைப் பழக்குவிக்கிறார். உங்களைப் பெலப்படுத்தி, திட்டங்கள் தந்து வழிநடத்தி, உன்னதத்திலிருந்து உதவியைக் கட்டளையிடுகிறார்.# ஆகவே யுத்தத்திலிருந்து பின்வாங்காதிருங்கள்.# ஜெயம் உங்களுடையது, சீக்கிரத்தில் தேவன் உங்களுக்குப் பலனளிப்பார். ஜெபம்:கர்த்தராகிய இயேசுவே, எனது சத்துருக்களோடு யுத்தம் செய்யும்போது திடமாயிருந்து யுத்தத்தில் ஈடுபட எனக்கு உதவும். ஜெயங்கொண்டு வெற்றிபெற எனக்குதவும். ஆமென்.