← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தருடைய மகிமை உங்களைப் பின்னாலே காக்கும்.
படத்தைப் பதிவிறக்கு

கர்த்தருடைய மகிமை உங்களைப் பின்னாலே காக்கும்.

“புதன், 26 ஜூன் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும். ஏசாயா 58:8b நம்முடைய தேவன் நீதியுள்ளவர், அன்பானவர். உங்களிடத்தில் அக்கறையாயிருக்கிறார்.அவர் தம்முடைய தூதர்களை உங்களுக்காகக் கட்டளையிட்டு, இந்த வாழ்க்கைப் பயணத்தில் உங்களைப் பராமரிக்கிறார்.தேவனுடைய முகத்தின் ஒளி உங்கள் பாதையை ஒளிரச் செய்யும்.அவருடைய நீதியே உங்களுக்குக் பாதுகாவலாயும், கேடகமாயும் இருக்கும். இரவின் பயங்கரங்களுக்கும் பகலில் பறக்கும் அம்புகளுக்கும் நீங்கள் பயப்பட வேண்டாம்.சர்வவல்லமையுள்ளவர் உங்கள் அடைக்கலமும் பெலனுமாயிருக்கிறார். உறுதியான அன்புடனும் உண்மையுடனும் அவர் உங்களைக் கண்காணிக்கும்போது அவருடைய செட்டைகளின் நிழலின் கீழ் நீங்கள் பாதுகாப்பையும் இளைப்பாறுதலையும் காண்பீர்கள். அவர்மீது நம்பிக்கை வையுங்கள். அவர் உங்களை வழிநடத்துவார், ஊடுருவ முடியாக் கேடகத்தைப் போல் உங்களைச் சூழ்ந்துகொள்வார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, பின்னாலே இருந்து என்னைக் காக்கும்படி உமது மகிமையை வாக்குப்பண்ணினதற்கு உமக்கு நன்றி. தைரியமாயிருந்து, நம்பிக்கையுடன் முன்னேற எனக்கு உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

புதன், 26 ஜூன் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும். ஏசாயா 58:8b நம்முடைய தேவன் நீதியுள்ளவர், அன்பானவர். உங்களிடத்தில் அக்கறையாயிருக்கிறார்.அவர் தம்முடைய தூதர்களை உங்களுக்காகக் கட்டளையிட்டு, இந்த வாழ்க்கைப் பயணத்தில் உங்களைப் பராமரிக்கிறார்.தேவனுடைய முகத்தின் ஒளி உங்கள் பாதையை ஒளிரச் செய்யும்.அவருடைய நீதியே உங்களுக்குக் பாதுகாவலாயும், கேடகமாயும் இருக்கும். இரவின் பயங்கரங்களுக்கும் பகலில் பறக்கும் அம்புகளுக்கும் நீங்கள் பயப்பட வேண்டாம்.சர்வவல்லமையுள்ளவர் உங்கள் அடைக்கலமும் பெலனுமாயிருக்கிறார். உறுதியான அன்புடனும் உண்மையுடனும் அவர் உங்களைக் கண்காணிக்கும்போது அவருடைய செட்டைகளின் நிழலின் கீழ் நீங்கள் பாதுகாப்பையும் இளைப்பாறுதலையும் காண்பீர்கள். அவர்மீது நம்பிக்கை வையுங்கள். அவர் உங்களை வழிநடத்துவார், ஊடுருவ முடியாக் கேடகத்தைப் போல் உங்களைச் சூழ்ந்துகொள்வார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, பின்னாலே இருந்து என்னைக் காக்கும்படி உமது மகிமையை வாக்குப்பண்ணினதற்கு உமக்கு நன்றி. தைரியமாயிருந்து, நம்பிக்கையுடன் முன்னேற எனக்கு உதவி செய்யும். ஆமென்.