வியாழன், 1 பிப்ரவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உன்னை அசட்டைபண்ணின யாவரும் உன் காலடியில் பணிந்து, உன்னைக் கர்த்தருடைய நகரம் என்றும், இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் சீயோன் என்றும் சொல்வார்கள்.ஏசாயா 60:14 - உங்கள் சொந்தக் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சகாக்களால் வெறுக்கப்படுவது சந்தேகத்திற்கிடமின்றி கடினமானதும் வேதனையானதுமான ஒரு அனுபவமாகும். - வாழ்க்கையில் இது போன்ற சவாலான காலகட்டங்களை நீங்கள் கடந்து செல்கிறீர்களா?- நீங்கள் உதவியைத் தேடுகிறீர்களா, அல்லது உங்கள் உணர்வுகளைப் புரிந்துகொண்டு நீங்கள் யார் என்று உங்களை மதிக்கும் ஒருவரைத் தேடுகிறீர்களா? - நற்செய்தி என்னவென்றால், இயேசு உங்களை நேசிக்கிறார். உங்களை மதித்துக் கனம்பண்ணுகிறார்.- அவருக்கு மாணிக்கத்தைவிட நீங்கள் விலையேறப்பெற்றவர்கள்.- அவமதிக்கப்பட்ட அல்லது தவறான தருணங்களைப் பற்றி நீங்கள் வருத்தப்படும்போதெல்லாம் தேவனிடம் அடைக்கலம் தேடுங்கள்.- உங்கள் எதிர்மறை உணர்வுகளை மேற்கொள்ளத் தேவன் உங்களுக்கு உதவிச் செய்து, பிரகாசமான எதிர்காலத்திற்கான நம்பிக்கையினாலும் விசுவாசத்தினாலும் உங்களை நிரப்புவார். - நம்புவது கடினமாயிருக்கலாம். ஆனால் குறுகிய காலத்தில், முழுச் சூழ்நிலையும் உங்களுக்குச் சாதகமாய் மாறுவதை நீங்கள் காண்பீர்கள்.- உங்களிடமிருந்து விலகியவர்கள், தேவனுடைய தயவால் நிரப்பப்பட்ட தேவ பிள்ளையாய் உங்களை அங்கீகரிப்பார்கள்.- நீங்கள் தேவனுடைய நகரமாகக் கருதப்படுவீர்கள், உங்களை மதிக்கத் தொடங்குவார்கள்.- இந்த மாற்றம் எதிர்பாராத வழிகளில் வரலாம், ஆனால் அது நடக்கும் என்று நம்புங்கள். - அது இப்பொழுது உங்கள் கண்களுக்குத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் கர்த்தர் உங்களுக்காக ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார்.- எனவே, அவரை நம்பி, அவருடைய நேரத்திற்காகக் காத்திருங்கள். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, என்னைப் பரியாசம் செய்யும் எல்லோருக்கும் முன்பாக என்னை ஆசீர்வதியும். இந்தச் சூழ்நிலையைச் சமாளிப்பதற்கும், எனக்கான உமது திட்டத்தில் நம்பிக்கை வைப்பதற்கும் எனக்குக் கிருபைத் தாரும். ஆமென்.
உங்களை அசட்டைபண்ணின யாவரும் உங்கள் காலடியில் பணிந்து,...
“வியாழன், 1 பிப்ரவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உன்னை அசட்டைபண்ணின யாவரும் உன் காலடியில் பணிந்து, உன்னைக் கர்த்தருடைய நகரம் என்றும், இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் சீயோன் என்றும் சொல்வார்கள்.ஏசாயா 60:14 - உங்கள் சொந்தக் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சகாக்களால் வெறுக்கப்படுவது சந்தேகத்திற்கிடமின்றி கடினமானதும் வேதனையானதுமான ஒரு அனுபவமாகும். - வாழ்க்கையில் இது போன்ற சவாலான காலகட்டங்களை நீங்கள் கடந்து செல்கிறீர்களா?- நீங்கள் உதவியைத் தேடுகிறீர்களா, அல்லது உங்கள் உணர்வுகளைப் புரிந்துகொண்டு நீங்கள் யார் என்று உங்களை மதிக்கும் ஒருவரைத் தேடுகிறீர்களா? - நற்செய்தி என்னவென்றால், இயேசு உங்களை நேசிக்கிறார். உங்களை மதித்துக் கனம்பண்ணுகிறார்.- அவருக்கு மாணிக்கத்தைவிட நீங்கள் விலையேறப்பெற்றவர்கள்.- அவமதிக்கப்பட்ட அல்லது தவறான தருணங்களைப் பற்றி நீங்கள் வருத்தப்படும்போதெல்லாம் தேவனிடம் அடைக்கலம் தேடுங்கள்.- உங்கள் எதிர்மறை உணர்வுகளை மேற்கொள்ளத் தேவன் உங்களுக்கு உதவிச் செய்து, பிரகாசமான எதிர்காலத்திற்கான நம்பிக்கையினாலும் விசுவாசத்தினாலும் உங்களை நிரப்புவார். - நம்புவது கடினமாயிருக்கலாம். ஆனால் குறுகிய காலத்தில், முழுச் சூழ்நிலையும் உங்களுக்குச் சாதகமாய் மாறுவதை நீங்கள் காண்பீர்கள்.- உங்களிடமிருந்து விலகியவர்கள், தேவனுடைய தயவால் நிரப்பப்பட்ட தேவ பிள்ளையாய் உங்களை அங்கீகரிப்பார்கள்.- நீங்கள் தேவனுடைய நகரமாகக் கருதப்படுவீர்கள், உங்களை மதிக்கத் தொடங்குவார்கள்.- இந்த மாற்றம் எதிர்பாராத வழிகளில் வரலாம், ஆனால் அது நடக்கும் என்று நம்புங்கள். - அது இப்பொழுது உங்கள் கண்களுக்குத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் கர்த்தர் உங்களுக்காக ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார்.- எனவே, அவரை நம்பி, அவருடைய நேரத்திற்காகக் காத்திருங்கள். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, என்னைப் பரியாசம் செய்யும் எல்லோருக்கும் முன்பாக என்னை ஆசீர்வதியும். இந்தச் சூழ்நிலையைச் சமாளிப்பதற்கும், எனக்கான உமது திட்டத்தில் நம்பிக்கை வைப்பதற்கும் எனக்குக் கிருபைத் தாரும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

