வெள்ளிக்கிழமை, 2 பிப்ரவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள். எபேசியர் 1:13 அன்பு தேவ பிள்ளையே, நம் அன்றாட வாழ்வில் நாம் அடிக்கடி மறந்து போகும் உண்மையிலேயே முக்கியமான ஒன்றை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் வாசமாயிருக்கிறார் என்றும் நீங்கள் அவருடைய ஆலயமாயிருக்கிறீர்கள் என்றும் அறிவீர்களா? ஆம். நீங்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு முன்குறிக்கப்பட்டீர்கள், இரட்சிப்பின் நாளுக்காகவும் அவருடைய நித்திய மகிமைக்காகவும் முத்திரையிடப்பட்டீர்கள். இந்த முத்திரை உடைக்க முடியாதது. சாத்தானின் வல்லமையோ அல்லது இவ்வுலகில் உள்ள வேறெந்தச் சக்தியோ அதை உடைக்க முடியாது. கிறிஸ்துவின் இரத்தம் உங்களை மூடுகிறது, நீங்கள் அவருடைய கைகளில் பாதுகாப்பாயிருக்கிறீர்கள். நீங்கள் அவருக்குப் பிரியமான பிள்ளையாய் இருப்பதால் அவருடைய பிடியிலிருந்து எதுவும் உங்களைப் பிரிக்க முடியாது. இந்த உண்மையை நினைவில் வைத்துக்கொண்டு, நீங்கள் தேவனால் பாதுகாக்கப்படுகிறீர்கள் என்பதையறிந்து மகிழ்ச்சியான நம்பிக்கையுடன் வாழுங்கள். கர்த்தரைப் பிரியப்படுத்தும் வாழ்க்கை வாழ்வதில் நாம் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும். எப்பொழுதும் நம் விசுவாசத்தில் வளரவும், அவருடைய சித்தத்தைச் செய்யவும் முயற்சிச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், இந்தத் தெய்வீகப் பாதுகாப்பை நாம் தக்க வைத்துக்கொள்ளலாம், அதுமட்டுமல்லாது, நமது தேவனும் இரட்சகருமானவரோடு இன்னும் நெருக்கமாய் வளரலாம். நீங்கள் பெற்ற இரட்சிப்பின் நம்பமுடியாத ஈவைப் பற்றிச் சிந்தித்துத் தேவனைப் பிரியப்படுத்தும் வாழ்க்கை வாழ உறுதியாயிருங்கள். ஜெபம்: பரலோகத் தகப்பனே, இரட்சிப்பின் வரத்திற்காகவும், பரிசுத்த ஆவியால் என்னை முத்திரையிட்டதற்காகவும் நன்றிசெலுத்துகிறேன். இந்த உண்மையை நினைவில் வைத்துக் கொள்ளவும், நம்பிக்கையின் களிகூறுதலுடன் வாழவும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள்...
“் 1:13 அன்பு தேவ பிள்ளையே, நம் அன்றாட வாழ்வில் நாம் அடிக்கடி மறந்து போகும் உண்மையிலேயே முக்கியமான ஒன்றை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் வாசமாயிருக்கிறார் என்றும் நீங்கள் அவருடைய ஆலயமாயிருக்கிறீர்கள் என்றும் அறிவீர்களா? ஆம். நீங்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு முன்குறிக்கப்பட்டீர்கள், இரட்சிப்பின் நாளுக்காகவும் அவருடைய நித்திய மகிமைக்காகவும் முத்திரையிடப்பட்டீர்கள். இந்த முத்திரை உடைக்க முடியாதது. சாத்தானின் வல்லமையோ அல்லது இவ்வுலகில் உள்ள வேறெந்தச் சக்தியோ அதை உடைக்க முடியாது. கிறிஸ்துவின் இரத்தம் உங்களை மூடுகிறது, நீங்கள் அவருடைய கைகளில் பாதுகாப்பாயிருக்கிறீர்கள். நீங்கள் அவருக்குப் பிரியமான பிள்ளையாய் இருப்பதால் அவருடைய பிடியிலிருந்து எதுவும் உங்களைப் பிரிக்க முடியாது. இந்த உண்மையை நினைவில் வைத்துக்கொண்டு, நீங்கள் தேவனால் பாதுகாக்கப்படுகிறீர்கள் என்பதையறிந்து மகிழ்ச்சியான நம்பிக்கையுடன் வாழுங்கள். கர்த்தரைப் பிரியப்படுத்தும் வாழ்க்கை வாழ்வதில் நாம் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும். எப்பொழுதும் நம் விசுவாசத்தில் வளரவும், அவருடைய சித்தத்தைச் செய்யவும் முயற்சிச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், இந்தத் தெய்வீகப் பாதுகாப்பை நாம் தக்க வைத்துக்கொள்ளலாம், அதுமட்டுமல்லாது, நமது தேவனும் இரட்சகருமானவரோடு இன்னும் நெருக்கமாய் வளரலாம். நீங்கள் பெற்ற இரட்சிப்பின் நம்பமுடியாத ஈவைப் பற்றிச் சிந்தித்துத் தேவனைப் பிரியப்படுத்தும் வாழ்க்கை வாழ உறுதியாயிருங்கள். ஜெபம்: பரலோகத் தகப்பனே, இரட்சிப்பின் வரத்திற்காகவும், பரிசுத்த ஆவியால் என்னை முத்திரையிட்டதற்காகவும் நன்றிசெலுத்துகிறேன். இந்த உண்மையை நினைவில் வைத்துக் கொள்ளவும், நம்பிக்கையின் களிகூறுதலுடன் வாழவும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

