← செய்திகளுக்குத் திரும்பு
நீங்கள் இயேசுவுடன் அவருடைய சிங்காசனத்தில் அவரோடுகூட உட்காரும்படி செய்வார்.
படத்தைப் பதிவிறக்கு

நீங்கள் இயேசுவுடன் அவருடைய சிங்காசனத்தில் அவரோடுகூட...

“புதன், 19 ஜூன் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன். வெளிப்படுத்துதல் 3:21 - உங்களை பாராட்டி தம்முடைய ஆசீர்வாதங்களை உங்கள்மேல் பொழிபவர் தேவன் மட்டுமே.- இந்த உலகில் உங்களிடம் உள்ள யாவும் தேவனுடைய ஈவு என்பதை நினைவில் கொள்ளுங்கள். - நமக்கான தேவ திட்டத்தை நிறைவேற்றுவதினின்று நம்முடைய கவனத்தையும் முன்னுரிமைகளையும் திசைதிருப்பும்படி, நமது எதிரியான பிசாசானவன் தொடர்ந்து நமக்கெதிராகச் செயல்படுகிறான் என்பதை அறிந்திருப்பது அவசியம்.- இதினிமித்தமே வாழ்க்கை என்பது பெரும்பாலும் ஒரு போராட்டம் என்று குறிப்பிடப்படுகிறது. - சத்துருவின் பொல்லாத திட்டங்களைப் புரிந்துகொள்ள விவேகத்தோடும், விழிப்போடும் இருக்க வேண்டும். மேலும் பிசாசுக்கு எதிர்த்து நிற்க வேண்டும்.- தீமையை விட்டு விலகிப் பரிசுத்த ஆவியின் உதவியுடன் உங்கள் பரிசுத்தத்தைப் பாதுகாக்க தொடர்ந்து போராடுங்கள்.- பாதுகாப்பும் பரிசுத்தமுமாய் இருக்கத் தேவ ஞானத்தையும் பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதலையும் சார்ந்துகொள்ளுங்கள். - உங்கள் வாழ்வை ஜெயத்துடன் முடிப்பதே உங்கள் முதன்மையும் முக்கியமுமான முன்னுரிமை ஆகும்.- தேவன் உங்களைத் தம்முடைய சிங்காசனத்தில் அவருடன் உட்கார வைத்து உங்களைக் கனப்படுத்துவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, பரிசுத்தமும் வெற்றியுமுள்ள வாழ்க்கை வாழ எனக்கு உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

புதன், 19 ஜூன் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன். வெளிப்படுத்துதல் 3:21 - உங்களை பாராட்டி தம்முடைய ஆசீர்வாதங்களை உங்கள்மேல் பொழிபவர் தேவன் மட்டுமே.- இந்த உலகில் உங்களிடம் உள்ள யாவும் தேவனுடைய ஈவு என்பதை நினைவில் கொள்ளுங்கள். - நமக்கான தேவ திட்டத்தை நிறைவேற்றுவதினின்று நம்முடைய கவனத்தையும் முன்னுரிமைகளையும் திசைதிருப்பும்படி, நமது எதிரியான பிசாசானவன் தொடர்ந்து நமக்கெதிராகச் செயல்படுகிறான் என்பதை அறிந்திருப்பது அவசியம்.- இதினிமித்தமே வாழ்க்கை என்பது பெரும்பாலும் ஒரு போராட்டம் என்று குறிப்பிடப்படுகிறது. - சத்துருவின் பொல்லாத திட்டங்களைப் புரிந்துகொள்ள விவேகத்தோடும், விழிப்போடும் இருக்க வேண்டும். மேலும் பிசாசுக்கு எதிர்த்து நிற்க வேண்டும்.- தீமையை விட்டு விலகிப் பரிசுத்த ஆவியின் உதவியுடன் உங்கள் பரிசுத்தத்தைப் பாதுகாக்க தொடர்ந்து போராடுங்கள்.- பாதுகாப்பும் பரிசுத்தமுமாய் இருக்கத் தேவ ஞானத்தையும் பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதலையும் சார்ந்துகொள்ளுங்கள். - உங்கள் வாழ்வை ஜெயத்துடன் முடிப்பதே உங்கள் முதன்மையும் முக்கியமுமான முன்னுரிமை ஆகும்.- தேவன் உங்களைத் தம்முடைய சிங்காசனத்தில் அவருடன் உட்கார வைத்து உங்களைக் கனப்படுத்துவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, பரிசுத்தமும் வெற்றியுமுள்ள வாழ்க்கை வாழ எனக்கு உதவி செய்யும். ஆமென்.