வியாழன், 26 டிசம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது. நீதிமொழிகள் 20:27 மனிதர்களாகிய நாம் மாம்சத்தால் ஆனவர்களும், நமக்குள் ஓர் ஆவியைக் கொண்டோராயும் இருக்கிறோம். இந்த ஆவி தேவனிடமிருந்து வந்த பரிசாயும், அது நம் உணர்ச்சிகளுடன் நெருக்கமாய் இணைக்கப்பட்டுள்ளதாயும் இருக்கிறது. நமது ஆவி நம் உடலை விட்டுப் பிரியும்போது, நாம் மரித்துப்போனதாய் அறிவிக்கப்படுகிறோம். வேதத்தின்படி, நாம் இயேசுவை நம் இரட்சகராய் ஏற்றுக்கொள்ளும்போது, அவர் நமக்குள் ஒரு ஆவியாக வாழ்கிறார், மேலும் நம் உள்ளார்ந்த சுபாவத்தை மாற்றும்படி கிரியை செய்கிறார். இந்த ஆவிக்குரிய மாற்றம் நம் அன்றாட வாழ்க்கையில் தெய்வீகக் குணங்களைக் காட்ட உதவுகிறது. இது நம் செயல்களில் நம்மை வழிநடத்தி நாம் வளர வேண்டிய பகுதிகளை அடையாளம் காண உதவுகிறது. உங்கள் சரீர வாழ்வில் நல்ல ஆரோக்கியத்தையும் வெற்றியின் நன்மைகளையும் அனுபவிக்க உங்கள் ஆவிக்குரிய நல்வாழ்வை முன்னுரிமைப்படுத்துங்கள். உங்கள் உள்ளார்ந்த மாற்றத்திற்குத் தேவனுடன் தரமான நேரத்தைச் செலவிடுவது அவசியம். ஜெபம்: அன்புள்ள ஆண்டவராகிய இயேசுவே, தயவுகூர்ந்து உம்முடன் அதிக நேரம் செலவிடவும் உம்முடைய சாயலாய் மாற்றப்படவும் எனக்கு உதவும். ஆமென்.
ஒரு மனிதனின் ஆவி கர்த்தருடைய தீபமாயிருக்கிறது
“வியாழன், 26 டிசம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது. நீதிமொழிகள் 20:27 மனிதர்களாகிய நாம் மாம்சத்தால் ஆனவர்களும், நமக்குள் ஓர் ஆவியைக் கொண்டோராயும் இருக்கிறோம். இந்த ஆவி தேவனிடமிருந்து வந்த பரிசாயும், அது நம் உணர்ச்சிகளுடன் நெருக்கமாய் இணைக்கப்பட்டுள்ளதாயும் இருக்கிறது. நமது ஆவி நம் உடலை விட்டுப் பிரியும்போது, நாம் மரித்துப்போனதாய் அறிவிக்கப்படுகிறோம். வேதத்தின்படி, நாம் இயேசுவை நம் இரட்சகராய் ஏற்றுக்கொள்ளும்போது, அவர் நமக்குள் ஒரு ஆவியாக வாழ்கிறார், மேலும் நம் உள்ளார்ந்த சுபாவத்தை மாற்றும்படி கிரியை செய்கிறார். இந்த ஆவிக்குரிய மாற்றம் நம் அன்றாட வாழ்க்கையில் தெய்வீகக் குணங்களைக் காட்ட உதவுகிறது. இது நம் செயல்களில் நம்மை வழிநடத்தி நாம் வளர வேண்டிய பகுதிகளை அடையாளம் காண உதவுகிறது. உங்கள் சரீர வாழ்வில் நல்ல ஆரோக்கியத்தையும் வெற்றியின் நன்மைகளையும் அனுபவிக்க உங்கள் ஆவிக்குரிய நல்வாழ்வை முன்னுரிமைப்படுத்துங்கள். உங்கள் உள்ளார்ந்த மாற்றத்திற்குத் தேவனுடன் தரமான நேரத்தைச் செலவிடுவது அவசியம். ஜெபம்: அன்புள்ள ஆண்டவராகிய இயேசுவே, தயவுகூர்ந்து உம்முடன் அதிக நேரம் செலவிடவும் உம்முடைய சாயலாய் மாற்றப்படவும் எனக்கு உதவும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

