← செய்திகளுக்குத் திரும்பு
இயேசுவானவர் நமக்குத் தேவன் அளித்த அன்பின் விலையேறப்பெற்ற ஈவு
படத்தைப் பதிவிறக்கு

இயேசுவானவர் நமக்குத் தேவன் அளித்த அன்பின் விலையேறப்பெற்ற ஈவு

“செவ்வாய், 25 டிசம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன்எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனைஅடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய்உலகத்தில் அன்பு கூர்ந்தார்.யோவான் 3:16 இயேசுவே மனிதகுலத்தின் மீதான தேவ அன்பின் இறுதி வெளிப்பாடு. உலகில் அவரது வருகை, மனுக்குலத்தைத் தேவனுடன் ஒப்புரவாக்கும் நோக்கம் கொண்ட ஓர் ஈடற்ற பரிசாகும். இயேசு தமது ஜீவனை ஓர் பலியாய்க் கொடுத்ததன் மூலம் மீட்பு மற்றும் மன்னிப்புக்கான பாதையை உருவாக்கினார்; தேவ அன்பு மற்றும் இரக்கத்தின் ஆழத்தை நிரூபித்தார். அவர் ஒதுக்கப்பட்டவர்களையும் துன்பப்படுவோரையும் நோக்கிப்பார்த்து தேவனுடைய இருதயத்தைப் பிரதிபலித்தார். அவரது வாழ்க்கையும் தியாகமும் தேவன் ஒவ்வொரு மனிதனையும் மதிக்கிறார் என்பதையும் ஒவ்வொருவரையும் அரவணைக்கிறார் என்பதையும் உறுதிப்படுத்தி, நிபந்தனையற்ற நித்திய அன்பை உருவகப்படுத்துகிறது. இந்த அன்பின் பரிசு வாழ்க்கையை மாற்றி, அந்த அன்பைப் பிறருடன் பகிர்ந்துகொள்ள நம்மை அழைக்கிறது. உலகில் இரக்கம் மற்றும் மனதுருக்கத்தின் அலைகளை உருவாக்குகிறது. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய அன்பின் ஈவுக்கு மிகுந்த நன்றி. இந்த அன்பைப் பற்றி அறியாதவர்களுடன் பகிர்ந்து கொள்ள எனக்கு உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய், 25 டிசம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன்எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனைஅடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய்உலகத்தில் அன்பு கூர்ந்தார்.யோவான் 3:16 இயேசுவே மனிதகுலத்தின் மீதான தேவ அன்பின் இறுதி வெளிப்பாடு. உலகில் அவரது வருகை, மனுக்குலத்தைத் தேவனுடன் ஒப்புரவாக்கும் நோக்கம் கொண்ட ஓர் ஈடற்ற பரிசாகும். இயேசு தமது ஜீவனை ஓர் பலியாய்க் கொடுத்ததன் மூலம் மீட்பு மற்றும் மன்னிப்புக்கான பாதையை உருவாக்கினார்; தேவ அன்பு மற்றும் இரக்கத்தின் ஆழத்தை நிரூபித்தார். அவர் ஒதுக்கப்பட்டவர்களையும் துன்பப்படுவோரையும் நோக்கிப்பார்த்து தேவனுடைய இருதயத்தைப் பிரதிபலித்தார். அவரது வாழ்க்கையும் தியாகமும் தேவன் ஒவ்வொரு மனிதனையும் மதிக்கிறார் என்பதையும் ஒவ்வொருவரையும் அரவணைக்கிறார் என்பதையும் உறுதிப்படுத்தி, நிபந்தனையற்ற நித்திய அன்பை உருவகப்படுத்துகிறது. இந்த அன்பின் பரிசு வாழ்க்கையை மாற்றி, அந்த அன்பைப் பிறருடன் பகிர்ந்துகொள்ள நம்மை அழைக்கிறது. உலகில் இரக்கம் மற்றும் மனதுருக்கத்தின் அலைகளை உருவாக்குகிறது. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய அன்பின் ஈவுக்கு மிகுந்த நன்றி. இந்த அன்பைப் பற்றி அறியாதவர்களுடன் பகிர்ந்து கொள்ள எனக்கு உதவி செய்யும். ஆமென்.