வெள்ளிக்கிழமை, 27 டிசம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப் போவதில்லை. சங்கீதம் 9:18 தேவன் இந்த உலகத்தைப் படைத்தவரும் மற்றும் நம்மை விசாரிப்பவருமாய் இருக்கிறார். இருப்பினும், சில நேரங்களில் நாம் புறக்கணிப்பையும் பற்றாக்குறையையும் அனுபவிக்கும் நேரங்கள் உள்ளன. உலக வளங்கள் குறைந்து அல்லது தீர்ந்து போகும்போது, யாரும் நம்மைப் பற்றி உண்மையிலேயே அக்கறை கொள்ளாத அவநம்பிக்கையான சூழ்நிலைகளில் நாம் நம்மைக் காணலாம். இதுபோன்ற சூழலிலும் நம்பிக்கையை விட்டுவிடாதீர்கள். உங்களுக்கான உதவி நீங்கள் நினைப்பதை விடச் சமீபமாய் உள்ளது. தேவன் நிச்சயமாய் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வார். நீங்கள் என்றைக்கும் புறக்கணிக்கப்படுவதில்லை. ஏழைகளின் நம்பிக்கையாகிய அவர் உங்களைத் தனியே விடமாட்டார். அவர் யெகோவா யீரேவாய் உங்களை விசாரிக்கிறார். அவர் உங்கள் தேவைகளைச் சரியான நேரத்தில் பூர்த்தி செய்வார். அவரை நம்புங்கள். நீங்கள் ஒருபொழுதும் ஏமாற்றமடைய மாட்டீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எல்லாச் சூழ்நிலைகளிலும் உம்மை நம்ப எனக்கு உதவி செய்யும். ஆமென்.
யெஹோவா யீரே: கர்த்தர் பார்த்துக்கொள்வார்
“வெள்ளிக்கிழமை, 27 டிசம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப் போவதில்லை. சங்கீதம் 9:18 தேவன் இந்த உலகத்தைப் படைத்தவரும் மற்றும் நம்மை விசாரிப்பவருமாய் இருக்கிறார். இருப்பினும், சில நேரங்களில் நாம் புறக்கணிப்பையும் பற்றாக்குறையையும் அனுபவிக்கும் நேரங்கள் உள்ளன. உலக வளங்கள் குறைந்து அல்லது தீர்ந்து போகும்போது, யாரும் நம்மைப் பற்றி உண்மையிலேயே அக்கறை கொள்ளாத அவநம்பிக்கையான சூழ்நிலைகளில் நாம் நம்மைக் காணலாம். இதுபோன்ற சூழலிலும் நம்பிக்கையை விட்டுவிடாதீர்கள். உங்களுக்கான உதவி நீங்கள் நினைப்பதை விடச் சமீபமாய் உள்ளது. தேவன் நிச்சயமாய் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வார். நீங்கள் என்றைக்கும் புறக்கணிக்கப்படுவதில்லை. ஏழைகளின் நம்பிக்கையாகிய அவர் உங்களைத் தனியே விடமாட்டார். அவர் யெகோவா யீரேவாய் உங்களை விசாரிக்கிறார். அவர் உங்கள் தேவைகளைச் சரியான நேரத்தில் பூர்த்தி செய்வார். அவரை நம்புங்கள். நீங்கள் ஒருபொழுதும் ஏமாற்றமடைய மாட்டீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எல்லாச் சூழ்நிலைகளிலும் உம்மை நம்ப எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

