← செய்திகளுக்குத் திரும்பு
உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக
படத்தைப் பதிவிறக்கு

உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய...

“1 கொரிந்தியர் 15:58 வாழ்க்கையின் எந்தவொரு பகுதியிலும், குறிப்பாக விசுவாச வாழ்க்கையில் நிலைத்தன்மை என்பது முக்கியமானதோர் நற்பண்பு ஆகும். பூலோக வாழ்க்கை, சூழ்நிலைகளைப் பொறுத்து ஏற்ற தாழ்வுகளைக் கொண்டிருக்கும்.ஆனால், தேவன் மீதான நமது நம்பிக்கை நிலையானதாகவும் உறுதியானதாகவும் இருக்க வேண்டும். நமது நம்பிக்கைகளிலும் செயல்களிலும் நாம் நிலையாயிருக்கும்போது, ​​தேவனிடத்தில் நமது அர்ப்பணிப்பையும் அவருடைய கொள்கைகளின்படி வாழ்வதற்கான உறுதியையும் காட்டுகிறோம். ஆதிச் சீஷர்கள் மற்றும் அப்போஸ்தலரின் வாழ்க்கையைப் பார்த்தால், அவர்கள் துன்புறுத்தப்பட்ட போதிலும் தங்கள் விசுவாசத்தில் உறுதியாயிருந்தார்கள். அவர்கள் இயேசு கிறிஸ்துவுக்காய்த் தொடர்ந்து ஓடினர். 1. உங்கள் விசுவாச வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவு சீராயிருக்கிறீர்கள்?2. உங்கள் விசுவாசமானது அன்றாட நிலைமைகள், ஆசீர்வாதங்களைப் பொறுத்ததா அல்லது இயேசுவுடனான உங்கள் தனிப்பட்ட உறவைப் பொறுத்ததா? உணர்வுகள் மற்றும் சூழ்நிலைகளைச் சார்ந்து உங்கள் விசுவாசம் இருந்தால் அது உடையக்கூடியதாகவும், ஆழமற்றதாகவும் இருக்கும். மாறாக, இயேசுவோடு ஆழமான உறவைக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்துங்கள். அவரை நெருக்கமாகவும் ஆழமாகவும் தெரிந்துகொள்ள உங்கள் நேரத்தை செலவிடுங்கள். அப்பொழுது, ​​உங்கள் விசுவாசம் மேலும் உறுதியானதாகவும் நிலையானதாகவும் இருப்பதைக் காண்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்முடன் நெருங்கி வளரவும், தொடர்ந்து உம்மை விசுவாசிக்கவும் எனக்கு உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய், 17 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக. 1 கொரிந்தியர் 15:58 வாழ்க்கையின் எந்தவொரு பகுதியிலும், குறிப்பாக விசுவாச வாழ்க்கையில் நிலைத்தன்மை என்பது முக்கியமானதோர் நற்பண்பு ஆகும். பூலோக வாழ்க்கை, சூழ்நிலைகளைப் பொறுத்து ஏற்ற தாழ்வுகளைக் கொண்டிருக்கும்.ஆனால், தேவன் மீதான நமது நம்பிக்கை நிலையானதாகவும் உறுதியானதாகவும் இருக்க வேண்டும். நமது நம்பிக்கைகளிலும் செயல்களிலும் நாம் நிலையாயிருக்கும்போது, ​​தேவனிடத்தில் நமது அர்ப்பணிப்பையும் அவருடைய கொள்கைகளின்படி வாழ்வதற்கான உறுதியையும் காட்டுகிறோம். ஆதிச் சீஷர்கள் மற்றும் அப்போஸ்தலரின் வாழ்க்கையைப் பார்த்தால், அவர்கள் துன்புறுத்தப்பட்ட போதிலும் தங்கள் விசுவாசத்தில் உறுதியாயிருந்தார்கள். அவர்கள் இயேசு கிறிஸ்துவுக்காய்த் தொடர்ந்து ஓடினர். 1. உங்கள் விசுவாச வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவு சீராயிருக்கிறீர்கள்?2. உங்கள் விசுவாசமானது அன்றாட நிலைமைகள், ஆசீர்வாதங்களைப் பொறுத்ததா அல்லது இயேசுவுடனான உங்கள் தனிப்பட்ட உறவைப் பொறுத்ததா? உணர்வுகள் மற்றும் சூழ்நிலைகளைச் சார்ந்து உங்கள் விசுவாசம் இருந்தால் அது உடையக்கூடியதாகவும், ஆழமற்றதாகவும் இருக்கும். மாறாக, இயேசுவோடு ஆழமான உறவைக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்துங்கள். அவரை நெருக்கமாகவும் ஆழமாகவும் தெரிந்துகொள்ள உங்கள் நேரத்தை செலவிடுங்கள். அப்பொழுது, ​​உங்கள் விசுவாசம் மேலும் உறுதியானதாகவும் நிலையானதாகவும் இருப்பதைக் காண்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்முடன் நெருங்கி வளரவும், தொடர்ந்து உம்மை விசுவாசிக்கவும் எனக்கு உதவி செய்யும். ஆமென்.