திங்கட்கிழமை, 20 நவம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக. 1 கொரிந்தியர் 15:58 வாழ்க்கையின் எந்தவொரு அம்சத்திலும், குறிப்பாக விசுவாச வாழ்வில் சீராக இருப்பது என்பது ஒரு முக்கியமான நற்பண்பு. பூமியில் வாழ்க்கை சூழ்நிலைகளைப் பொறுத்து ஏற்ற தாழ்வுகள் இருக்கும். என்றாலும், கர்த்தர் மீதான நமது நம்பிக்கை சீரானதாகவும் உறுதியானதாகவும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த உலக வாழ்க்கையின் சவால்களை நாம் கடந்து செல்ல முடியும். நமது நம்பிக்கை மற்றும் செயல்களில் நாம் சீராக இருக்கும்போது, கர்த்தருக்கான நமது அர்ப்பணிப்பையும், அவருடைய கொள்கைகளின்படி வாழ்வதற்கான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறோம். தங்களுடைய அசைக்க முடியாத விசுவாசத்தை சீராக வெளிப்படுத்தி, நாம் பின்பற்றுவதற்கு முன்மாதிரியாகச் செயல்படும் நபர்களின் எண்ணற்ற உதாரணங்களை வேதாகமத்தில் பார்க்கிறோம். ஆரம்பகால சீஷர்கள் மற்றும் அப்போஸ்தலர்களின் வாழ்க்கையை நாம் ஆராய்ந்துப் பார்த்தால், அவர்கள் துன்புறுத்தப்பட்ட போதிலும் தங்கள் விசுவாசத்தில் உறுதியாக இருந்தார்கள். அவர்கள் இயேசு கிறிஸ்துவுக்காக தொடர்ந்து ஓடினார்கள். 1. உங்கள் விசுவாச வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவு சீராக இருக்கிறீர்கள்?2. உங்கள் விசுவாசம், அன்றாட நிலைமையையும், ஆசீர்வாதங்களையும் சார்ந்திருக்கிறதா அல்லது இயேசுவுடனான உங்கள் தனிப்பட்ட உறவைச் சார்ந்திருக்கிறதா? # உணர்வுகள் மற்றும் சூழ்நிலைகளை சார்ந்து இருந்தால் நம்பிக்கை உடையக்கூடியதாகவும் ஆழமற்றதாகவும் இருக்கும்.# மாறாக, இயேசுவோடு ஆழமான உறவைக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்துங்கள்.# அவரை நெருக்கமாகவும், ஆழமாகவும் தெரிந்துகொள்ள உங்கள் நேரத்தை செலவிடுங்கள்.# அப்போது, உங்கள் விசுவாசம் மேலும் உறுதியானதாகவும், சீரானதாகவும் இருப்பதைக் காண்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்மோடு நெருங்கி வளரவும், உம்மில் சீரான விசுவாசத்தை வைத்திருக்கவும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய...
“களாக. 1 கொரிந்தியர் 15:58 வாழ்க்கையின் எந்தவொரு அம்சத்திலும், குறிப்பாக விசுவாச வாழ்வில் சீராக இருப்பது என்பது ஒரு முக்கியமான நற்பண்பு. பூமியில் வாழ்க்கை சூழ்நிலைகளைப் பொறுத்து ஏற்ற தாழ்வுகள் இருக்கும். என்றாலும், கர்த்தர் மீதான நமது நம்பிக்கை சீரானதாகவும் உறுதியானதாகவும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த உலக வாழ்க்கையின் சவால்களை நாம் கடந்து செல்ல முடியும். நமது நம்பிக்கை மற்றும் செயல்களில் நாம் சீராக இருக்கும்போது, கர்த்தருக்கான நமது அர்ப்பணிப்பையும், அவருடைய கொள்கைகளின்படி வாழ்வதற்கான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறோம். தங்களுடைய அசைக்க முடியாத விசுவாசத்தை சீராக வெளிப்படுத்தி, நாம் பின்பற்றுவதற்கு முன்மாதிரியாகச் செயல்படும் நபர்களின் எண்ணற்ற உதாரணங்களை வேதாகமத்தில் பார்க்கிறோம். ஆரம்பகால சீஷர்கள் மற்றும் அப்போஸ்தலர்களின் வாழ்க்கையை நாம் ஆராய்ந்துப் பார்த்தால், அவர்கள் துன்புறுத்தப்பட்ட போதிலும் தங்கள் விசுவாசத்தில் உறுதியாக இருந்தார்கள். அவர்கள் இயேசு கிறிஸ்துவுக்காக தொடர்ந்து ஓடினார்கள். 1. உங்கள் விசுவாச வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவு சீராக இருக்கிறீர்கள்?2. உங்கள் விசுவாசம், அன்றாட நிலைமையையும், ஆசீர்வாதங்களையும் சார்ந்திருக்கிறதா அல்லது இயேசுவுடனான உங்கள் தனிப்பட்ட உறவைச் சார்ந்திருக்கிறதா? # உணர்வுகள் மற்றும் சூழ்நிலைகளை சார்ந்து இருந்தால் நம்பிக்கை உடையக்கூடியதாகவும் ஆழமற்றதாகவும் இருக்கும்.# மாறாக, இயேசுவோடு ஆழமான உறவைக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்துங்கள்.# அவரை நெருக்கமாகவும், ஆழமாகவும் தெரிந்துகொள்ள உங்கள் நேரத்தை செலவிடுங்கள்.# அப்போது, உங்கள் விசுவாசம் மேலும் உறுதியானதாகவும், சீரானதாகவும் இருப்பதைக் காண்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்மோடு நெருங்கி வளரவும், உம்மில் சீரான விசுவாசத்தை வைத்திருக்கவும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

