புதன்கிழமை, 18 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும்.சங்கீதம் 112:2 உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிக் கவலைப்படுகிறீர்களா? நீங்கள் அவர்களுக்கு நிலையான சொத்தை விட்டுச் செல்ல முடியாமல் ஏமாற்றமடைகிறீர்களா? பெற்றோர்களாக, இந்தக் கவலைகள் இயல்பானவையே. ஆனால், கவலையாயிருப்பது நிலைமையை மேம்படுத்தாமல் உங்கள் ஆரோக்கியத்திற்கு மட்டுமே தீங்கு விளைவிக்கும். கவலைப்படுவதற்குப் பதிலாய்ப் பின்வருவனவற்றில் கவனம் செலுத்துங்கள்:1. உங்கள் பிள்ளைகளையும் அவர்களின் எதிர்காலத்தையும் தேவனிடம் ஒப்படையுங்கள்.2. தேவ வழிகளைப் பின்பற்ற, அவர்களுக்கு வழிகாட்டவும், அவர்களைத் தகுதிப்படுத்தவும் உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள்.3. தேவபக்தியுள்ள நடத்தைக்கு உயிருள்ள முன்மாதிரியாயிருங்கள். அதனால், உங்கள் பிள்ளைகள் உங்களிடமிருந்து கற்றுக்கொண்டு அவற்றை வெளிப்படுத்த முடியும். நீங்கள் நேர்மையான வாழ்க்கை வாழும்போது, தேவன் உங்கள் நற்குணத்தைக் கண்டு உங்கள் பிள்ளைகளை ஆசீர்வதிப்பார். உங்கள் நீதியான வாழ்க்கை உங்கள் பிள்ளைகளுக்கு ஓர் சிறப்பான முதலீடாயும், சொத்தாயும் இருக்கும். அவர்கள் உங்கள் பந்தியைச் சுற்றிலும் ஒலிவ மரக் கன்றுகளைப்போலச் செழிப்பார்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீதியான வாழ்க்கையை வாழ எனக்கு உதவி செய்யும். ஆமென்.
செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும்.
“புதன்கிழமை, 18 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும்.சங்கீதம் 112:2 உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிக் கவலைப்படுகிறீர்களா? நீங்கள் அவர்களுக்கு நிலையான சொத்தை விட்டுச் செல்ல முடியாமல் ஏமாற்றமடைகிறீர்களா? பெற்றோர்களாக, இந்தக் கவலைகள் இயல்பானவையே. ஆனால், கவலையாயிருப்பது நிலைமையை மேம்படுத்தாமல் உங்கள் ஆரோக்கியத்திற்கு மட்டுமே தீங்கு விளைவிக்கும். கவலைப்படுவதற்குப் பதிலாய்ப் பின்வருவனவற்றில் கவனம் செலுத்துங்கள்:1. உங்கள் பிள்ளைகளையும் அவர்களின் எதிர்காலத்தையும் தேவனிடம் ஒப்படையுங்கள்.2. தேவ வழிகளைப் பின்பற்ற, அவர்களுக்கு வழிகாட்டவும், அவர்களைத் தகுதிப்படுத்தவும் உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள்.3. தேவபக்தியுள்ள நடத்தைக்கு உயிருள்ள முன்மாதிரியாயிருங்கள். அதனால், உங்கள் பிள்ளைகள் உங்களிடமிருந்து கற்றுக்கொண்டு அவற்றை வெளிப்படுத்த முடியும். நீங்கள் நேர்மையான வாழ்க்கை வாழும்போது, தேவன் உங்கள் நற்குணத்தைக் கண்டு உங்கள் பிள்ளைகளை ஆசீர்வதிப்பார். உங்கள் நீதியான வாழ்க்கை உங்கள் பிள்ளைகளுக்கு ஓர் சிறப்பான முதலீடாயும், சொத்தாயும் இருக்கும். அவர்கள் உங்கள் பந்தியைச் சுற்றிலும் ஒலிவ மரக் கன்றுகளைப்போலச் செழிப்பார்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீதியான வாழ்க்கையை வாழ எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

