ஞாயிறு, 12 மே 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குள்ளே இருக்கிறார், அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன். உபாகமம் 7:21 நம்முடைய தேவன் உண்மையில் நம் புரிதலுக்கு அப்பாற்பட்டவர். இரவு வானத்தில் மின்னும் எண்ணற்ற நட்சத்திரங்களைக் கொண்ட பிரபஞ்சத்தின் பரந்த தன்மையில் அவருடைய மகத்துவமும் சக்தியும் தெளிவாய்த் தெரிகிறது. கடலின் ஆழம், வாழ்க்கை மற்றும் அதிசயம் நிறைந்த உலகம், அவரது சிருஷ்டிப்பை வெளிப்படுத்துகிறது. மற்றும் விலங்கினத்தில், பிரம்மாண்டத் திமிங்கலம் முதல் நுண்ணிய உயிரினம் வரை, ஒவ்வொன்றும் ஒரு தலைசிறந்த வடிவமைப்பாய் அவரது நுணுக்கமான வேலையைக் காட்டுகிறது. இவற்றையெல்லாம் தேவன் படைத்தார் என்பது நம்பமுடிகிறதா? இதன் மத்தியிலும், தேவன் இன்னும் நம் ஒவ்வொருவரையும் நினைவில் வைத்து, நம்மைப் பெயர்சொல்லி அறிந்திருக்கிறார். நாம் அவருக்கு மிகவும் விசேஷமானவர்கள் ஆகையால் அவர் நம்மீது ஆழ்ந்த அக்கறை கொண்டவராய் இருக்கிறார். இந்த அற்புதமான தேவனைப் புகழ்வதற்கு ஏன் சிறிது நேரம் ஒதுக்கக்கூடாது? ஆராதனையில் நமது சத்தத்தை உயர்த்தி, அவர் செய்த அனைத்திற்காகவும் அவரைப் போற்றுவோம். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நாங்கள் உம்மைப் போற்றி தொழுது கொள்கிறோம். நீர் ஒரு மகத்துவமான தேவன். உமது நாமம் உயர்ந்து எங்கள் வாழ்வில் மகிமைப்படட்டும். ஆமென்.
நம்முடைய தேவன் மகத்துவமானவர்.
“ஞாயிறு, 12 மே 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குள்ளே இருக்கிறார், அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன். உபாகமம் 7:21 நம்முடைய தேவன் உண்மையில் நம் புரிதலுக்கு அப்பாற்பட்டவர். இரவு வானத்தில் மின்னும் எண்ணற்ற நட்சத்திரங்களைக் கொண்ட பிரபஞ்சத்தின் பரந்த தன்மையில் அவருடைய மகத்துவமும் சக்தியும் தெளிவாய்த் தெரிகிறது. கடலின் ஆழம், வாழ்க்கை மற்றும் அதிசயம் நிறைந்த உலகம், அவரது சிருஷ்டிப்பை வெளிப்படுத்துகிறது. மற்றும் விலங்கினத்தில், பிரம்மாண்டத் திமிங்கலம் முதல் நுண்ணிய உயிரினம் வரை, ஒவ்வொன்றும் ஒரு தலைசிறந்த வடிவமைப்பாய் அவரது நுணுக்கமான வேலையைக் காட்டுகிறது. இவற்றையெல்லாம் தேவன் படைத்தார் என்பது நம்பமுடிகிறதா? இதன் மத்தியிலும், தேவன் இன்னும் நம் ஒவ்வொருவரையும் நினைவில் வைத்து, நம்மைப் பெயர்சொல்லி அறிந்திருக்கிறார். நாம் அவருக்கு மிகவும் விசேஷமானவர்கள் ஆகையால் அவர் நம்மீது ஆழ்ந்த அக்கறை கொண்டவராய் இருக்கிறார். இந்த அற்புதமான தேவனைப் புகழ்வதற்கு ஏன் சிறிது நேரம் ஒதுக்கக்கூடாது? ஆராதனையில் நமது சத்தத்தை உயர்த்தி, அவர் செய்த அனைத்திற்காகவும் அவரைப் போற்றுவோம். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நாங்கள் உம்மைப் போற்றி தொழுது கொள்கிறோம். நீர் ஒரு மகத்துவமான தேவன். உமது நாமம் உயர்ந்து எங்கள் வாழ்வில் மகிமைப்படட்டும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

