← செய்திகளுக்குத் திரும்பு
மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கிறது.
படத்தைப் பதிவிறக்கு

மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கிறது.

“அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.நீதிமொழிகள் 18:21 நம் வார்த்தைகளும், அறிக்கைகளும் உண்மையாய் மாறுவது விதியினாலோ அல்லது கறுநாக்கினாலோ அல்ல, மாறாக, மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்தில் இருப்பதினாலேயே. அதனால்தான் நாம் என்ன சொல்கிறோம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். நாம் கோபமாகவோ அல்லது விரக்தியாகவோ இருக்கும்போது, நம்மையோ, நம் குழந்தைகளையோ அல்லது பிறரையோ சபிக்காமல் கவனமாயிருக்க வேண்டும். நமது வார்த்தைகள் நம் வாழ்விலும் நம்மைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். நாம் நம் வார்த்தைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நம் மனதையும், நாவையும் கட்டுப்படுத்தப் பயத்துக்கும் சாத்தானுக்கும் இடம் கொடுக்கக் கூடாது. நாம் கவலைப்படும்போதோ அல்லது பயப்படும்போதோ, தேவனுடைய வார்த்தையை அறிக்கை செய்ய வேண்டும். அப்பொழுது சாத்தானின் அரண்கள் தகர்க்கப்படுவதைக் காண்போம். நாம் நமது வார்த்தைகளை தேவ ஆசீர்வாதத்தின் வாய்க்காலாய்ப் பயன்படுத்த வேண்டும். பிறருக்கும் நம் குடும்பங்களுக்கும் ஜீவன் தரும் வார்த்தைகளைப் பேச வேண்டும். இதைச் செய்யும்போது, நம் நாவின் பலனை நாம் அனுபவிப்போம். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வார்த்தைகளைக் கவனத்தில் கொள்ளவும் எப்பொழுதும் ஜீவனும் கிருபையுமுள்ள வார்த்தைகளைப் பேசவும் உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

திங்கட்கிழமை, 6 மே 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.நீதிமொழிகள் 18:21 நம் வார்த்தைகளும், அறிக்கைகளும் உண்மையாய் மாறுவது விதியினாலோ அல்லது கறுநாக்கினாலோ அல்ல, மாறாக, மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்தில் இருப்பதினாலேயே. அதனால்தான் நாம் என்ன சொல்கிறோம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். நாம் கோபமாகவோ அல்லது விரக்தியாகவோ இருக்கும்போது, நம்மையோ, நம் குழந்தைகளையோ அல்லது பிறரையோ சபிக்காமல் கவனமாயிருக்க வேண்டும். நமது வார்த்தைகள் நம் வாழ்விலும் நம்மைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். நாம் நம் வார்த்தைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நம் மனதையும், நாவையும் கட்டுப்படுத்தப் பயத்துக்கும் சாத்தானுக்கும் இடம் கொடுக்கக் கூடாது. நாம் கவலைப்படும்போதோ அல்லது பயப்படும்போதோ, தேவனுடைய வார்த்தையை அறிக்கை செய்ய வேண்டும். அப்பொழுது சாத்தானின் அரண்கள் தகர்க்கப்படுவதைக் காண்போம். நாம் நமது வார்த்தைகளை தேவ ஆசீர்வாதத்தின் வாய்க்காலாய்ப் பயன்படுத்த வேண்டும். பிறருக்கும் நம் குடும்பங்களுக்கும் ஜீவன் தரும் வார்த்தைகளைப் பேச வேண்டும். இதைச் செய்யும்போது, நம் நாவின் பலனை நாம் அனுபவிப்போம். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வார்த்தைகளைக் கவனத்தில் கொள்ளவும் எப்பொழுதும் ஜீவனும் கிருபையுமுள்ள வார்த்தைகளைப் பேசவும் உதவி செய்யும். ஆமென்.