← செய்திகளுக்குத் திரும்பு
அன்பு மாயமற்றதாயிருப்பதாக, மற்றவர்களை உண்மையாய் நேசியுங்கள்.
படத்தைப் பதிவிறக்கு

அன்பு மாயமற்றதாயிருப்பதாக, மற்றவர்களை உண்மையாய் நேசியுங்கள்.

“ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக; தீமையை வெறுத்து, நன்மையைப் பற்றிக்கொண்டிருங்கள். ரோமர் 12:9 மற்றவர்களை உண்மையாய் நேசிப்போரைக் கண்டுபிடிப்பது மிகக் கடினமாகி வருகிறது. சுயநலத்திற்காக ஏமாற்றுவது எல்லா இடங்களிலும் அதிகரித்து வருகிறது. இன்று, எல்லா வயதினரும், குறிப்பாக இளைஞர்கள், உடைந்த உறவுகளால் மனச்சோர்வடைந்தவர்களாகவும் புண்படுத்தப்படுவதையும் பார்ப்பது பரவலாகிவிட்டது. வணிகத்தை அதிகரிக்க உறவுகளைச் சுற்றி எல்லைமீறி விளம்பரம் செய்வது ஏற்றுக்கொள்ளக்கூடிய வியாபார உத்தியாய் மாறியுள்ளது. பாதிக்கப்படக்கூடிய மக்கள் பெரும்பாலும் உணர்ச்சித் தூண்டுதலுக்கு ஆளாகி அதற்கு இரையாகிறார்கள். இது அவர்களின் வாழ்க்கையை அழிக்கக்கூடும். இந்தச் சூழ்நிலையை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்? உங்களை நேசிப்பவர்களிடமும் நீங்கள் விரும்புகிறவர்களிடமும் உண்மையாய் இருக்க ஒரு உறுதி எடுக்க முடியுமா? காம மற்றும் தற்காலிக உணர்ச்சித் தூண்டல்களுக்கு அப்பாற்பட்ட தூய்மையான இயேசுவின் அன்பால் உங்களை நிரப்புங்கள். உங்களைச் சுற்றியுள்ள அனைவருக்கும் இந்த உண்மையான அன்பை நிரூபிக்க முன்மாதிரியாய் வாழுங்கள். நன்மை தீமை இன்னது என்பதைப் பகுத்தறிவதன் முக்கியத்துவத்தைப் பற்றி உங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிக்க நேரம் ஒதுக்குங்கள். இயேசுவின் அன்பு உங்கள் வார்த்தைகளிலும் வாழ்விலும் காணப்படட்டும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீதியான வாழ்க்கை வாழவும், உண்மையான அன்பைப் பிறர்க்குக் காட்டவும் எனக்கு உதவி செய்யும். நன்மைக்காக நிற்கவும், தவறான அனைத்தையும் வெறுக்கவும் எனக்கு கிருபை தாரும்.. ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக; தீமையை வெறுத்து, நன்மையைப் பற்றிக்கொண்டிருங்கள். ரோமர் 12:9 மற்றவர்களை உண்மையாய் நேசிப்போரைக் கண்டுபிடிப்பது மிகக் கடினமாகி வருகிறது. சுயநலத்திற்காக ஏமாற்றுவது எல்லா இடங்களிலும் அதிகரித்து வருகிறது. இன்று, எல்லா வயதினரும், குறிப்பாக இளைஞர்கள், உடைந்த உறவுகளால் மனச்சோர்வடைந்தவர்களாகவும் புண்படுத்தப்படுவதையும் பார்ப்பது பரவலாகிவிட்டது. வணிகத்தை அதிகரிக்க உறவுகளைச் சுற்றி எல்லைமீறி விளம்பரம் செய்வது ஏற்றுக்கொள்ளக்கூடிய வியாபார உத்தியாய் மாறியுள்ளது. பாதிக்கப்படக்கூடிய மக்கள் பெரும்பாலும் உணர்ச்சித் தூண்டுதலுக்கு ஆளாகி அதற்கு இரையாகிறார்கள். இது அவர்களின் வாழ்க்கையை அழிக்கக்கூடும். இந்தச் சூழ்நிலையை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்? உங்களை நேசிப்பவர்களிடமும் நீங்கள் விரும்புகிறவர்களிடமும் உண்மையாய் இருக்க ஒரு உறுதி எடுக்க முடியுமா? காம மற்றும் தற்காலிக உணர்ச்சித் தூண்டல்களுக்கு அப்பாற்பட்ட தூய்மையான இயேசுவின் அன்பால் உங்களை நிரப்புங்கள். உங்களைச் சுற்றியுள்ள அனைவருக்கும் இந்த உண்மையான அன்பை நிரூபிக்க முன்மாதிரியாய் வாழுங்கள். நன்மை தீமை இன்னது என்பதைப் பகுத்தறிவதன் முக்கியத்துவத்தைப் பற்றி உங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிக்க நேரம் ஒதுக்குங்கள். இயேசுவின் அன்பு உங்கள் வார்த்தைகளிலும் வாழ்விலும் காணப்படட்டும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீதியான வாழ்க்கை வாழவும், உண்மையான அன்பைப் பிறர்க்குக் காட்டவும் எனக்கு உதவி செய்யும். நன்மைக்காக நிற்கவும், தவறான அனைத்தையும் வெறுக்கவும் எனக்கு கிருபை தாரும்.. ஆமென்.