← செய்திகளுக்குத் திரும்பு
பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.
படத்தைப் பதிவிறக்கு

பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய்...

“நீதிமொழிகள் 12:22 - நீங்கள் எப்பொழுதாவது பொய் பேசுகிறீர்களா?- தேவன் உண்மையாய் இருப்பதாலும், அவர் பிள்ளைகள் அவருடைய இயல்பைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதாலும், சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல் எப்பொழுதும் உண்மையைப் பேசுவதும் பொய்களைத் தவிர்ப்பதும் அவசியம்.- பரிசுத்த வேதாகமத்தின்படி, பொய்யர்கள் நரகத்திற்குச் செல்வார்கள். எனவே, பொய் சொல்வதை நாம் நிறுத்த வேண்டும். - நேர்மையுடனும், உண்மையுடனும் செயல்படுவது தேவனால் மிகவும் மதிக்கப்படுகிறது.- உங்கள் வார்த்தை நம்பகமானதாகவும் துல்லியமாகவும் இருக்க வேண்டும். ஏனெனில், அது உங்கள் குணாதிசயத்தையும் மதிப்பையும் பிரதிபலிக்கிறது.- வாக்குறுதிகளைக் கடைப்பிடிப்பதும் ஒப்பந்தங்களை மதிப்பதும், நற்குணம் மற்றும் நேர்மையின் அடையாளமாய் உங்கள் நம்பகத்தன்மையையும் உண்மைத்தன்மையையும் வெளிப்படுத்துகிறது. - பிசாசு ஒரு வஞ்சகனும் பொய்களுக்கெல்லாம் பிதாவுமாயிருக்கிறான்.- எனவே, தேவன் பொய் உதடுகளை வெறுக்கிறார். ஆனால் உண்மையைப் பேசுவோர்மீதும் தங்கள் சூழ்நிலைகளையும் சவால்களையும் பொருட்படுத்தாமல் நேர்மையை வெளிப்படுத்துவோர் மீதும் மகிழ்ச்சியடைகிறார்.- நேர்மையான வாழ்க்கை வாழ்வதில் உறுதியாய் இருப்பது ஒருவரின் தனிப்பட்ட முடிவாகும்.- நீங்கள் அத்தகைய நபராயிருப்பீர்களா? ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் சூழ்நிலைகள் மற்றும் சவால்களைப் பொருட்படுத்தாமல், எப்பொழுதும் உண்மையைப் பேசவும், நேர்மையுடன் செயல்படவும் என் கடமைகளைச் செய்யவும் எனக்குக் கிருபை புரியும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

சனிக்கிழமை, 3 பிப்ரவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம். நீதிமொழிகள் 12:22 - நீங்கள் எப்பொழுதாவது பொய் பேசுகிறீர்களா?- தேவன் உண்மையாய் இருப்பதாலும், அவர் பிள்ளைகள் அவருடைய இயல்பைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதாலும், சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல் எப்பொழுதும் உண்மையைப் பேசுவதும் பொய்களைத் தவிர்ப்பதும் அவசியம்.- பரிசுத்த வேதாகமத்தின்படி, பொய்யர்கள் நரகத்திற்குச் செல்வார்கள். எனவே, பொய் சொல்வதை நாம் நிறுத்த வேண்டும். - நேர்மையுடனும், உண்மையுடனும் செயல்படுவது தேவனால் மிகவும் மதிக்கப்படுகிறது.- உங்கள் வார்த்தை நம்பகமானதாகவும் துல்லியமாகவும் இருக்க வேண்டும். ஏனெனில், அது உங்கள் குணாதிசயத்தையும் மதிப்பையும் பிரதிபலிக்கிறது.- வாக்குறுதிகளைக் கடைப்பிடிப்பதும் ஒப்பந்தங்களை மதிப்பதும், நற்குணம் மற்றும் நேர்மையின் அடையாளமாய் உங்கள் நம்பகத்தன்மையையும் உண்மைத்தன்மையையும் வெளிப்படுத்துகிறது. - பிசாசு ஒரு வஞ்சகனும் பொய்களுக்கெல்லாம் பிதாவுமாயிருக்கிறான்.- எனவே, தேவன் பொய் உதடுகளை வெறுக்கிறார். ஆனால் உண்மையைப் பேசுவோர்மீதும் தங்கள் சூழ்நிலைகளையும் சவால்களையும் பொருட்படுத்தாமல் நேர்மையை வெளிப்படுத்துவோர் மீதும் மகிழ்ச்சியடைகிறார்.- நேர்மையான வாழ்க்கை வாழ்வதில் உறுதியாய் இருப்பது ஒருவரின் தனிப்பட்ட முடிவாகும்.- நீங்கள் அத்தகைய நபராயிருப்பீர்களா? ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் சூழ்நிலைகள் மற்றும் சவால்களைப் பொருட்படுத்தாமல், எப்பொழுதும் உண்மையைப் பேசவும், நேர்மையுடன் செயல்படவும் என் கடமைகளைச் செய்யவும் எனக்குக் கிருபை புரியும். ஆமென்.