ஞாயிற்றுக்கிழமை, 22 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:பிரியமானவர்களே, இந்தப்படியே கர்த்தருக்குள் நிலைத்திருங்கள். பிலிப்பியர் 4:1 நாம் நேர்மையான ஜனங்களாய் இருக்க வேண்டும். உண்மையாயிருப்பது என்பது, நமது அன்றாட வாழ்வில் வழிகாட்டும் கொள்கையாயிருக்க வேண்டும். தேவன் எப்பொழுதும் நம்மைக் கவனித்துக் கொண்டிருப்பதால், நாம் மற்றவர்களுக்கு முன்பாகவும், அவர்களின் முதுகுக்குப் பின்னாலும் நேர்மையாய் இருப்பது முக்கியம். பெரும்பாலும், நாம் தேவனுக்கு வாக்குறுதிகளை அளித்து அவற்றைக் கடைப்பிடிக்கத் தவறுகிறோம். அது உண்மையில்லாமை ஆகும். உலக ஆதாயங்களுக்காகத் தெய்வீக தன்மைகள் மற்றும் கொள்கைகளை விட்டுக்கொடுப்பது, வேண்டுமென்றே தவறு செய்வது அல்லது தேவனின் கிருபையை அற்பமாய் எடுத்துக்கொள்வது ஆகியவையெல்லாம் நாம் தேவனுக்கு உண்மையாய் இல்லை என்பதன் எடுத்துக்காட்டுகள். தேவனிடமிருந்து எதையும் மறைக்க முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொண்டு, அவருக்குப் பிரியமான வாழ்க்கை வாழ உறுதிபூண்டால், இயற்கையாகவே நாம் எல்லாப் பகுதிகளிலும் உண்மையுள்ளவர்களாய் இருப்போம். நமது குறைகளை சரிசெய்து இறுதிவரை தேவனுக்கு உண்மையாயிருக்க முயற்சிப்போம். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்வின் இறுதிவரை உமக்கு உண்மையாக இருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.
கர்த்தருக்கு உண்மையாய் இருங்கள்
“ஞாயிற்றுக்கிழமை, 22 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:பிரியமானவர்களே, இந்தப்படியே கர்த்தருக்குள் நிலைத்திருங்கள். பிலிப்பியர் 4:1 நாம் நேர்மையான ஜனங்களாய் இருக்க வேண்டும். உண்மையாயிருப்பது என்பது, நமது அன்றாட வாழ்வில் வழிகாட்டும் கொள்கையாயிருக்க வேண்டும். தேவன் எப்பொழுதும் நம்மைக் கவனித்துக் கொண்டிருப்பதால், நாம் மற்றவர்களுக்கு முன்பாகவும், அவர்களின் முதுகுக்குப் பின்னாலும் நேர்மையாய் இருப்பது முக்கியம். பெரும்பாலும், நாம் தேவனுக்கு வாக்குறுதிகளை அளித்து அவற்றைக் கடைப்பிடிக்கத் தவறுகிறோம். அது உண்மையில்லாமை ஆகும். உலக ஆதாயங்களுக்காகத் தெய்வீக தன்மைகள் மற்றும் கொள்கைகளை விட்டுக்கொடுப்பது, வேண்டுமென்றே தவறு செய்வது அல்லது தேவனின் கிருபையை அற்பமாய் எடுத்துக்கொள்வது ஆகியவையெல்லாம் நாம் தேவனுக்கு உண்மையாய் இல்லை என்பதன் எடுத்துக்காட்டுகள். தேவனிடமிருந்து எதையும் மறைக்க முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொண்டு, அவருக்குப் பிரியமான வாழ்க்கை வாழ உறுதிபூண்டால், இயற்கையாகவே நாம் எல்லாப் பகுதிகளிலும் உண்மையுள்ளவர்களாய் இருப்போம். நமது குறைகளை சரிசெய்து இறுதிவரை தேவனுக்கு உண்மையாயிருக்க முயற்சிப்போம். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்வின் இறுதிவரை உமக்கு உண்மையாக இருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

