← செய்திகளுக்குத் திரும்பு
எல்லாக் காரியங்களிலும், தேவன் உங்கள் நன்மைக்காகக் கிரியை செய்கிறார்.
படத்தைப் பதிவிறக்கு

எல்லாக் காரியங்களிலும், தேவன் உங்கள் நன்மைக்காகக் கிரியை...

“திங்கட்கிழமை, 27 மே 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.ரோமர் 8:28 * உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட எதிர்பாராத நெருக்கடியால் நீங்கள் வருத்தப்படுகிறீர்களா?* நேர்மையாய் இருப்பதற்கு நீங்கள் எடுத்த சிறந்த முயற்சிகளின் மத்தியிலும் காரியங்கள் மோசமடைவதைப் பற்றி கவலைப்படுகிறீர்களா?* உங்கள் அன்பும் அக்கறையும் கொண்ட செயல்களுக்கு மத்தியிலும் உங்களைக் குற்றம் சாட்டுபவர்களால் நீங்கள் புண்படுகிறீர்களா? * தேவனுடைய அனுமதி இல்லாமல் உங்கள் வாழ்க்கையில் ஒன்றும் நடக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.* நீங்கள் தேவனை நேசிப்பீர்களானால், உங்கள் வாழ்க்கையில் தேவன் அனுமதிக்கும் அனைத்தும் இறுதியில் உங்கள் நன்மைக்காகவே இருக்கும் என்பதில் உறுதியாய் இருங்கள். ஏனென்றால், எல்லாவற்றையும் அவர் உங்களை விட நன்றாய் அறிந்திருக்கிறார்.* உங்களின் தற்போதைய நிலை வேதனையாயிருந்தாலும், விளைவு சாதகமாகவும் நன்மையாகவும் இருக்கும். கவலைப்படாதீர்கள். உற்சாகமாய் இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, அமைதியாய் பயமின்றி உம்மை நம்பியிருக்க எனக்கு உதவி செய்யும். எனது வேதனையான தருணங்கள் மகிழ்ச்சியான தருணங்களாய் மாறட்டும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

திங்கட்கிழமை, 27 மே 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.ரோமர் 8:28 * உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட எதிர்பாராத நெருக்கடியால் நீங்கள் வருத்தப்படுகிறீர்களா?* நேர்மையாய் இருப்பதற்கு நீங்கள் எடுத்த சிறந்த முயற்சிகளின் மத்தியிலும் காரியங்கள் மோசமடைவதைப் பற்றி கவலைப்படுகிறீர்களா?* உங்கள் அன்பும் அக்கறையும் கொண்ட செயல்களுக்கு மத்தியிலும் உங்களைக் குற்றம் சாட்டுபவர்களால் நீங்கள் புண்படுகிறீர்களா? * தேவனுடைய அனுமதி இல்லாமல் உங்கள் வாழ்க்கையில் ஒன்றும் நடக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.* நீங்கள் தேவனை நேசிப்பீர்களானால், உங்கள் வாழ்க்கையில் தேவன் அனுமதிக்கும் அனைத்தும் இறுதியில் உங்கள் நன்மைக்காகவே இருக்கும் என்பதில் உறுதியாய் இருங்கள். ஏனென்றால், எல்லாவற்றையும் அவர் உங்களை விட நன்றாய் அறிந்திருக்கிறார்.* உங்களின் தற்போதைய நிலை வேதனையாயிருந்தாலும், விளைவு சாதகமாகவும் நன்மையாகவும் இருக்கும். கவலைப்படாதீர்கள். உற்சாகமாய் இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, அமைதியாய் பயமின்றி உம்மை நம்பியிருக்க எனக்கு உதவி செய்யும். எனது வேதனையான தருணங்கள் மகிழ்ச்சியான தருணங்களாய் மாறட்டும். ஆமென்.