← செய்திகளுக்குத் திரும்பு
உங்கள் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், சுகமும் இருக்கும்
படத்தைப் பதிவிறக்கு

உங்கள் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், சுகமும் இருக்கும்

“செவ்வாய்க்கிழமை, 27 பிப்ரவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக.சங்கீதம் 122:7 எல்லாப் புத்திக்கும் மேலான தம்முடைய சமாதானத்தைத் தமது சீஷர்களுக்குக் கொடுப்பதாக இயேசு வாக்குக் கொடுத்தார். அவர் அவர்களுக்குப் பாதுகாப்பை உறுதியளித்தார். மேலும், உலகத்தின் முடிவுபரியந்தம் அவர்களை ஒருபொழுதும் கைவிடுவதில்லை, மறப்பதில்லை என்று அவர்களுக்கு வாக்குக் கொடுத்தார். அவருடைய சீஷராய் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்ற, நீங்கள் உங்களை வெறுத்து, உங்கள் சிலுவையை அனுதினமும் சுமக்க வேண்டும். இது சவாலானதாக இருக்கலாம். ஆனால் விடாமுயற்சியும் கவனமுமே இங்கு திறவுகோல்களாகும். மேலும், எல்லாப் புத்திக்கும் மேலான அவருடைய சமாதானத்தையும், அவரது தெய்வீகப் பாதுகாப்பின் கீழ் பாதுகாப்பானதொரு வாழ்க்கையையும் நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணமும் உங்களைக் கண்காணிக்கும்படி அவர் தம் தூதர்களுக்குக் கட்டளையிடுவார். உங்கள் முழு இருதயத்தோடும் இயேசுவைப் பின்பற்றி அவரது உண்மையான சீஷராய் மாற நீங்கள் ஆயத்தமா? ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, உம் உண்மையுள்ள சீஷனாய் / சீஷியாய் உம்மைப் பின்பற்றி, உம்முடைய தெய்வீக சமாதானத்தையும் பாதுகாப்பையும் அனுபவிக்க எனக்கு உதவியருளும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய்க்கிழமை, 27 பிப்ரவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக.சங்கீதம் 122:7 எல்லாப் புத்திக்கும் மேலான தம்முடைய சமாதானத்தைத் தமது சீஷர்களுக்குக் கொடுப்பதாக இயேசு வாக்குக் கொடுத்தார். அவர் அவர்களுக்குப் பாதுகாப்பை உறுதியளித்தார். மேலும், உலகத்தின் முடிவுபரியந்தம் அவர்களை ஒருபொழுதும் கைவிடுவதில்லை, மறப்பதில்லை என்று அவர்களுக்கு வாக்குக் கொடுத்தார். அவருடைய சீஷராய் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்ற, நீங்கள் உங்களை வெறுத்து, உங்கள் சிலுவையை அனுதினமும் சுமக்க வேண்டும். இது சவாலானதாக இருக்கலாம். ஆனால் விடாமுயற்சியும் கவனமுமே இங்கு திறவுகோல்களாகும். மேலும், எல்லாப் புத்திக்கும் மேலான அவருடைய சமாதானத்தையும், அவரது தெய்வீகப் பாதுகாப்பின் கீழ் பாதுகாப்பானதொரு வாழ்க்கையையும் நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணமும் உங்களைக் கண்காணிக்கும்படி அவர் தம் தூதர்களுக்குக் கட்டளையிடுவார். உங்கள் முழு இருதயத்தோடும் இயேசுவைப் பின்பற்றி அவரது உண்மையான சீஷராய் மாற நீங்கள் ஆயத்தமா? ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, உம் உண்மையுள்ள சீஷனாய் / சீஷியாய் உம்மைப் பின்பற்றி, உம்முடைய தெய்வீக சமாதானத்தையும் பாதுகாப்பையும் அனுபவிக்க எனக்கு உதவியருளும். ஆமென்.