செவ்வாய், 12 மார்ச் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நாம் கிரகிக்கக்கூடாத பெரிய காரியங்களை அவர் செய்கிறார். யோபு 37:5 நமது தேவன் மனித அறிவுக்கு அப்பாற்பட்டவர். அவரது வழிகளும் திட்டங்களும் வியப்பானவையும் முழுமையாகப் புரிந்துகொள்வதற்குக் கடினமானதுமாய் இருக்கிறது. அநித்தியமானவர்களாகிய நாம், நமது குறுகிய எண்ணங்களை உடையவர்களாக காணப்படுகிறோம். ஆனால், தேவ ஞானம் எல்லையற்றதும் அளவுகடந்ததுமாய் இருக்கிறது. மனித சக்திக்கு அப்பாற்பட்ட அற்புதங்களைச் செய்யும் வல்லமை தேவனுக்கு உண்டு. எப்பொழுதும் எல்லா இடங்களிலும் இருப்பவரும், அளவற்ற ஆற்றலை உடையவருமான அவர், இயற்கைக்கு அப்பாற்பட்டவர் ஆவார். அவர் தமது விருப்பத்திற்கும், சித்தத்திற்கும் ஏற்ப எதையும் செய்ய முடியும். ஆகவே, அவருடைய வழிகள் நம்முடையதை விட உயர்ந்தவை என்று நம்பி, தாழ்மையாய் அவரிடம் பணிந்து, அவருடைய கட்டளைகளை எப்பொழுதும் கடைபிடிக்க வேண்டும். நம்முடைய ஜெபங்களைக் கேட்க அவர் எப்பொழுதும் தயாராக இருக்கிறார் என்பதையறிந்து, நமக்குத் தேவையான எதையும் தேவனிடம் கேட்க வேண்டும். இருப்பினும், நாம் பொறுமையாயிருந்து அவரது நேரத்திற்காகக் காத்திருக்க வேண்டும். ஏனெனில் அவரது நேரம் எப்பொழுதும் சரியானது. நம்முடைய தேவைகள் எவ்வளவு பெரியதாய்த் தோன்றினாலும், தேவன் அவற்றை எப்பொழுதும் நன்மையும், பரிபூரணமாயும் இருக்கும் அவரது வழிகளில் நிறைவேற்றுவார் என்பதில் நாம் உறுதியாயிருக்க வேண்டும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என் வாழ்வில் அற்புதமான காரியங்களைச் செய்யும். ஆமென்.
உங்கள் புரிதலுக்கு அப்பாற்பட்ட பெரிய காரியங்களைத் தேவன்...
“செவ்வாய், 12 மார்ச் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நாம் கிரகிக்கக்கூடாத பெரிய காரியங்களை அவர் செய்கிறார். யோபு 37:5 நமது தேவன் மனித அறிவுக்கு அப்பாற்பட்டவர். அவரது வழிகளும் திட்டங்களும் வியப்பானவையும் முழுமையாகப் புரிந்துகொள்வதற்குக் கடினமானதுமாய் இருக்கிறது. அநித்தியமானவர்களாகிய நாம், நமது குறுகிய எண்ணங்களை உடையவர்களாக காணப்படுகிறோம். ஆனால், தேவ ஞானம் எல்லையற்றதும் அளவுகடந்ததுமாய் இருக்கிறது. மனித சக்திக்கு அப்பாற்பட்ட அற்புதங்களைச் செய்யும் வல்லமை தேவனுக்கு உண்டு. எப்பொழுதும் எல்லா இடங்களிலும் இருப்பவரும், அளவற்ற ஆற்றலை உடையவருமான அவர், இயற்கைக்கு அப்பாற்பட்டவர் ஆவார். அவர் தமது விருப்பத்திற்கும், சித்தத்திற்கும் ஏற்ப எதையும் செய்ய முடியும். ஆகவே, அவருடைய வழிகள் நம்முடையதை விட உயர்ந்தவை என்று நம்பி, தாழ்மையாய் அவரிடம் பணிந்து, அவருடைய கட்டளைகளை எப்பொழுதும் கடைபிடிக்க வேண்டும். நம்முடைய ஜெபங்களைக் கேட்க அவர் எப்பொழுதும் தயாராக இருக்கிறார் என்பதையறிந்து, நமக்குத் தேவையான எதையும் தேவனிடம் கேட்க வேண்டும். இருப்பினும், நாம் பொறுமையாயிருந்து அவரது நேரத்திற்காகக் காத்திருக்க வேண்டும். ஏனெனில் அவரது நேரம் எப்பொழுதும் சரியானது. நம்முடைய தேவைகள் எவ்வளவு பெரியதாய்த் தோன்றினாலும், தேவன் அவற்றை எப்பொழுதும் நன்மையும், பரிபூரணமாயும் இருக்கும் அவரது வழிகளில் நிறைவேற்றுவார் என்பதில் நாம் உறுதியாயிருக்க வேண்டும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என் வாழ்வில் அற்புதமான காரியங்களைச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

