ஞாயிற்றுக்கிழமை, 24 மார்ச் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தேவனே, எங்களைச் சோதித்தீர்; வெள்ளியைப் புடமிடுகிறதுபோல எங்களைப் புடமிட்டீர். சங்கீதம் 66:10 பரிசுத்தம் இல்லாமல் தேவனைத் தரிசிக்க முடியாது என்று வேதாகமம் கூறுகிறது. பரிசுத்தமாக்கப்படுவதற்கு, ஒருவர் கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட வேண்டும். பரிசுத்த ஆவியானவர் நமக்குள் கிரியை செய்து நம்மைப் பரிசுத்தமாயிருக்க உணர்த்துகிறார். சில சமயங்களில் தேவன், பரிசுத்தத்திற்கான உள்ளார்ந்த வாஞ்சையைக் கொண்டுவர, வேதனை, விரக்தி, தோல்வி, துக்கம் மற்றும் இன்னல்களை எல்லாம் அனுமதிக்கிறார். வேதனையின் தருணங்களில் நடக்கும்போது மனம்சோர்ந்துபோக வேண்டாம். தாழ்மையான இருதயத்துடன் அதைச் சகித்துக்கொள்ளுங்கள். சரியான நடவடிக்கைகளை எடுக்கத் தேவ வழிகாட்டுதலையும் ஞானத்தையும் நாடுங்கள். பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதலுக்கு நீங்கள் செவிகொடுக்கும்போது, நீங்கள் சுத்த பொன்னாய்ப் புடமிடப்படுவீர்கள். ஜெபம்: அன்புள்ள இயேசுவே, உமது சுத்திகரிப்பின் செயல்முறையைத் தாங்கிக்கொண்டு, பரிசுத்தமாகவும் உமக்குப் பிரியமானதாகவும் வெளிவர எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
தேவன் உங்களைப் புடமிட்டிருக்கிறார்.
“ஞாயிற்றுக்கிழமை, 24 மார்ச் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தேவனே, எங்களைச் சோதித்தீர்; வெள்ளியைப் புடமிடுகிறதுபோல எங்களைப் புடமிட்டீர். சங்கீதம் 66:10 பரிசுத்தம் இல்லாமல் தேவனைத் தரிசிக்க முடியாது என்று வேதாகமம் கூறுகிறது. பரிசுத்தமாக்கப்படுவதற்கு, ஒருவர் கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட வேண்டும். பரிசுத்த ஆவியானவர் நமக்குள் கிரியை செய்து நம்மைப் பரிசுத்தமாயிருக்க உணர்த்துகிறார். சில சமயங்களில் தேவன், பரிசுத்தத்திற்கான உள்ளார்ந்த வாஞ்சையைக் கொண்டுவர, வேதனை, விரக்தி, தோல்வி, துக்கம் மற்றும் இன்னல்களை எல்லாம் அனுமதிக்கிறார். வேதனையின் தருணங்களில் நடக்கும்போது மனம்சோர்ந்துபோக வேண்டாம். தாழ்மையான இருதயத்துடன் அதைச் சகித்துக்கொள்ளுங்கள். சரியான நடவடிக்கைகளை எடுக்கத் தேவ வழிகாட்டுதலையும் ஞானத்தையும் நாடுங்கள். பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதலுக்கு நீங்கள் செவிகொடுக்கும்போது, நீங்கள் சுத்த பொன்னாய்ப் புடமிடப்படுவீர்கள். ஜெபம்: அன்புள்ள இயேசுவே, உமது சுத்திகரிப்பின் செயல்முறையைத் தாங்கிக்கொண்டு, பரிசுத்தமாகவும் உமக்குப் பிரியமானதாகவும் வெளிவர எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

