← செய்திகளுக்குத் திரும்பு
உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுகிறார்.
படத்தைப் பதிவிறக்கு

உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுகிறார்.

“உங்களுக்காக யுத்தம்பண்ணுகிறார். யோசுவா 23:10 உங்கள் யுத்தத்தில் உங்களுக்காகப் போராட யாருமில்லை என்று நீங்கள் தனியாய் உணர்கிறீர்களா?உங்கள் வாழ்க்கையின் அர்த்தத்தைக் கண்டறிய நீங்கள் சிரமப்படுகிறீர்களா? மற்றவர்கள் உங்களை விரும்பவில்லை என்று நினைக்கிறீர்களா? அப்படியானால், அது உண்மையல்ல என்பதை நீங்கள் அறிய விரும்புகிறேன். இயேசு எப்பொழுதும் உங்களுக்காக இருக்கிறார்; அவர் ஏற்கனவே உங்களை மீட்டுத் தமக்குச் சொந்தமாக்கிக்கொண்டார். நீங்கள் அவருக்கு முக்கியம், அவர் உங்களைப் பற்றிக் கவனமாயிருக்கிறார். உங்கள் சுமைகளை நீங்கள் தனியாய்ச் சுமக்க வேண்டியதில்லை. உங்கள் பாரங்களனைத்தையும் நீங்கள் இயேசுவின் மேல் வைத்துவிட்டு, அவருடைய பிரசன்னத்தில் இளைப்பாறக் கற்றுக்கொள்ளுங்கள். அவர் உங்களைக் கவனித்து, எல்லாப் புத்திகும் மேலான சமாதானத்தை உங்களுக்கு தருவார். அவர் உங்களை ஒருபொழுதும் தனிமையில் விடமாட்டார், உங்களுக்காக யுத்தம் செய்வார். உங்கள் பட்சத்தில் இயேசு இருக்கும்பொழுது, நீங்கள் உங்கள் சேனைக்குள் பாய்ந்தோடி ஜெயத்தின்மேல் ஜெயத்தை அனுபவிக்க முடியும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் உம்மையே முழுமையாக சார்ந்திருக்கிறேன். எனக்காக யுத்தம்பண்ணி எனக்கு வெற்றியைத் தந்தருளும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

திங்கட்கிழமை, 25 மார்ச் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி, அவர் தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணுகிறார். யோசுவா 23:10 உங்கள் யுத்தத்தில் உங்களுக்காகப் போராட யாருமில்லை என்று நீங்கள் தனியாய் உணர்கிறீர்களா?உங்கள் வாழ்க்கையின் அர்த்தத்தைக் கண்டறிய நீங்கள் சிரமப்படுகிறீர்களா? மற்றவர்கள் உங்களை விரும்பவில்லை என்று நினைக்கிறீர்களா? அப்படியானால், அது உண்மையல்ல என்பதை நீங்கள் அறிய விரும்புகிறேன். இயேசு எப்பொழுதும் உங்களுக்காக இருக்கிறார்; அவர் ஏற்கனவே உங்களை மீட்டுத் தமக்குச் சொந்தமாக்கிக்கொண்டார். நீங்கள் அவருக்கு முக்கியம், அவர் உங்களைப் பற்றிக் கவனமாயிருக்கிறார். உங்கள் சுமைகளை நீங்கள் தனியாய்ச் சுமக்க வேண்டியதில்லை. உங்கள் பாரங்களனைத்தையும் நீங்கள் இயேசுவின் மேல் வைத்துவிட்டு, அவருடைய பிரசன்னத்தில் இளைப்பாறக் கற்றுக்கொள்ளுங்கள். அவர் உங்களைக் கவனித்து, எல்லாப் புத்திகும் மேலான சமாதானத்தை உங்களுக்கு தருவார். அவர் உங்களை ஒருபொழுதும் தனிமையில் விடமாட்டார், உங்களுக்காக யுத்தம் செய்வார். உங்கள் பட்சத்தில் இயேசு இருக்கும்பொழுது, நீங்கள் உங்கள் சேனைக்குள் பாய்ந்தோடி ஜெயத்தின்மேல் ஜெயத்தை அனுபவிக்க முடியும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் உம்மையே முழுமையாக சார்ந்திருக்கிறேன். எனக்காக யுத்தம்பண்ணி எனக்கு வெற்றியைத் தந்தருளும். ஆமென்