செவ்வாய், 30 ஜனவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள். ரோமர் 12:12 நம்பிக்கையில் சந்தோஷமாய் இருப்பதென்பது வாழ்க்கையில் நேர்மையான கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பதும், நல்ல விஷயங்கள் வரும் என்றும் நம்புவதுமாகும். இது, ஒரு பிரகாசமான எதிர்காலத்தை நாம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது, தற்போதைய சூழ்நிலையிலும் மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் இருக்க உதவிச் செய்யும். மேலும், நம்முடைய தற்காலச் சூழ்நிலைகளுக்கு அப்பாற்பட்டுப் பார்க்கவும் சாத்தியக்கூறுகளில் கவனம் செலுத்தவும், நம்பிக்கை வழிசெய்கிறது. இயேசுவின் மீது நம்பிக்கை வைப்பதே இவ்வுலகில் உள்ள எவருக்கும் இருக்கக்கூடிய மிகப் பாதுகாப்பான விஷயம் ஆகும். இவ்வுலகில் உள்ள மற்ற அனைத்தும், நம் கண்களுக்கு எவ்வளவு வலிமையாகவும் நெகிழ்ச்சியாகவும் தோன்றினாலும், அவை பாதுகாப்பானதும், நிரந்தரமானதும் அல்ல. சூழ்நிலைகள் கடினமானதாகத் தோன்றினாலும், நம்மைத் தனியே விட்டுவிடமாட்டேன் என்று இயேசு வாக்களித்திருப்பதால், சவால்களை எதிர்கொண்டு முன்னேறிச் செல்வதற்கு அந்த நம்பிக்கை நமக்கு பலத்தையும், வல்லமையையும் அளிக்கிறது. முக்கியமாக, நம்பிக்கையில் சந்தோஷமாய் இருப்பதென்பது எதிர்காலத்தில் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான நம்பிக்கையையும் நேர்மையான உணர்வையும் முழுச் சிந்தையோடு வளர்த்துக்கொள்வதாகும். இது, வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளை நாம் கடந்துச் செல்ல உதவிச் செய்யும். இயேசு கிறிஸ்து ஜீவனோடு இன்னும் சிங்காசனத்தில் அமர்ந்திருப்பதால், தேவ பிள்ளைகளாகிய நாம் கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையில் சந்தோஷமாய் இருப்பதற்கு எல்லாக் காரணங்களும் உள்ளன. ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, உம்மை நம்பி, உம்மில் நான் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பற்றிச் சந்தோஷமாய் இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
கிறிஸ்துவில் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையில் சந்தோஷமாய்...
“செவ்வாய், 30 ஜனவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள். ரோமர் 12:12 நம்பிக்கையில் சந்தோஷமாய் இருப்பதென்பது வாழ்க்கையில் நேர்மையான கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பதும், நல்ல விஷயங்கள் வரும் என்றும் நம்புவதுமாகும். இது, ஒரு பிரகாசமான எதிர்காலத்தை நாம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது, தற்போதைய சூழ்நிலையிலும் மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் இருக்க உதவிச் செய்யும். மேலும், நம்முடைய தற்காலச் சூழ்நிலைகளுக்கு அப்பாற்பட்டுப் பார்க்கவும் சாத்தியக்கூறுகளில் கவனம் செலுத்தவும், நம்பிக்கை வழிசெய்கிறது. இயேசுவின் மீது நம்பிக்கை வைப்பதே இவ்வுலகில் உள்ள எவருக்கும் இருக்கக்கூடிய மிகப் பாதுகாப்பான விஷயம் ஆகும். இவ்வுலகில் உள்ள மற்ற அனைத்தும், நம் கண்களுக்கு எவ்வளவு வலிமையாகவும் நெகிழ்ச்சியாகவும் தோன்றினாலும், அவை பாதுகாப்பானதும், நிரந்தரமானதும் அல்ல. சூழ்நிலைகள் கடினமானதாகத் தோன்றினாலும், நம்மைத் தனியே விட்டுவிடமாட்டேன் என்று இயேசு வாக்களித்திருப்பதால், சவால்களை எதிர்கொண்டு முன்னேறிச் செல்வதற்கு அந்த நம்பிக்கை நமக்கு பலத்தையும், வல்லமையையும் அளிக்கிறது. முக்கியமாக, நம்பிக்கையில் சந்தோஷமாய் இருப்பதென்பது எதிர்காலத்தில் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான நம்பிக்கையையும் நேர்மையான உணர்வையும் முழுச் சிந்தையோடு வளர்த்துக்கொள்வதாகும். இது, வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளை நாம் கடந்துச் செல்ல உதவிச் செய்யும். இயேசு கிறிஸ்து ஜீவனோடு இன்னும் சிங்காசனத்தில் அமர்ந்திருப்பதால், தேவ பிள்ளைகளாகிய நாம் கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையில் சந்தோஷமாய் இருப்பதற்கு எல்லாக் காரணங்களும் உள்ளன. ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, உம்மை நம்பி, உம்மில் நான் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பற்றிச் சந்தோஷமாய் இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

