திங்கட்கிழமை, 11 மார்ச் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்.யோபு 19:25 நீங்கள் தற்போது உங்கள் வாழ்வின் கடினமான காலகட்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் தொழிலிலோ அல்லது வியாபாரத்திலோ நீங்கள் சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கலாம், அல்லது உங்களுக்கு மன அழுத்தத்தையும் கவலையையும் ஏற்படுத்தும் தனிப்பட்ட போராட்டங்களை நீங்கள் கையாண்டுக் கொண்டிருக்கலாம். சூழ்நிலை எதுவாயிருந்தாலும், கடினமான காலங்களில் தேவன் எங்கே இருக்கிறார் என்று ஆச்சரியப்படுவது இயல்புதான். இருப்பினும், நம்பிக்கையில் உறுதியாய் இருப்பது அவசியம். ஒரு விசுவாசியாகிய நீங்கள், தமது ஜனங்களை ஒருபொழுதும் கைவிடாத, என்றென்றும் இருக்கின்ற ஜீவனுள்ள தேவனுக்குச் சேவை செய்கிறீர்கள். உங்கள் போராட்டங்களில் நீங்கள் தனிமையில் இருப்பதைப் போல உணர்ந்தாலும், ஒவ்வொரு அடியிலும் தேவன் உங்களுடன் இருக்கிறார் என்பதை நினைவிற்கொள்ளுங்கள். உண்மையில், உங்களை ஒரு சிறந்த நபராய் உருமாற்றிப் பலப்படுத்த இந்தச் சவால்களை அவர் அனுமதித்திருக்கலாம். உங்கள் சூழ்நிலை எவ்வளவு கடினமாகத் தோன்றினாலும், இந்தத் தடைகளைத் தாண்டத் தேவன் உங்களுக்கு கிருபையையும் பலத்தையும் தருவார் என்று நீங்கள் விசுவாசிக்க வேண்டும். ஒரு அன்புத் தகப்பனாகிய அவர் தமது பிள்ளைகளுக்குச் சிறந்ததைத் தர விரும்புகிறார். உங்கள் போராட்டங்களைத் தனியாக எதிர்கொள்ள உங்களை ஒருபொழுதும் விட்டுவிட மாட்டார். அவர் உங்கள் மீட்பர், அவர் என்றென்றும் உயிருடன் இருக்கிறார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, சவாலான சூழ்நிலைகளை வெற்றியுடன் கடக்க எனக்குக் கிருபையையும், நம்பிக்கையையும் தந்தருளும். ஆமென்.
உங்கள் மீட்பர் உயிரோடிருக்கிறார்.
“திங்கட்கிழமை, 11 மார்ச் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்.யோபு 19:25 நீங்கள் தற்போது உங்கள் வாழ்வின் கடினமான காலகட்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் தொழிலிலோ அல்லது வியாபாரத்திலோ நீங்கள் சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கலாம், அல்லது உங்களுக்கு மன அழுத்தத்தையும் கவலையையும் ஏற்படுத்தும் தனிப்பட்ட போராட்டங்களை நீங்கள் கையாண்டுக் கொண்டிருக்கலாம். சூழ்நிலை எதுவாயிருந்தாலும், கடினமான காலங்களில் தேவன் எங்கே இருக்கிறார் என்று ஆச்சரியப்படுவது இயல்புதான். இருப்பினும், நம்பிக்கையில் உறுதியாய் இருப்பது அவசியம். ஒரு விசுவாசியாகிய நீங்கள், தமது ஜனங்களை ஒருபொழுதும் கைவிடாத, என்றென்றும் இருக்கின்ற ஜீவனுள்ள தேவனுக்குச் சேவை செய்கிறீர்கள். உங்கள் போராட்டங்களில் நீங்கள் தனிமையில் இருப்பதைப் போல உணர்ந்தாலும், ஒவ்வொரு அடியிலும் தேவன் உங்களுடன் இருக்கிறார் என்பதை நினைவிற்கொள்ளுங்கள். உண்மையில், உங்களை ஒரு சிறந்த நபராய் உருமாற்றிப் பலப்படுத்த இந்தச் சவால்களை அவர் அனுமதித்திருக்கலாம். உங்கள் சூழ்நிலை எவ்வளவு கடினமாகத் தோன்றினாலும், இந்தத் தடைகளைத் தாண்டத் தேவன் உங்களுக்கு கிருபையையும் பலத்தையும் தருவார் என்று நீங்கள் விசுவாசிக்க வேண்டும். ஒரு அன்புத் தகப்பனாகிய அவர் தமது பிள்ளைகளுக்குச் சிறந்ததைத் தர விரும்புகிறார். உங்கள் போராட்டங்களைத் தனியாக எதிர்கொள்ள உங்களை ஒருபொழுதும் விட்டுவிட மாட்டார். அவர் உங்கள் மீட்பர், அவர் என்றென்றும் உயிருடன் இருக்கிறார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, சவாலான சூழ்நிலைகளை வெற்றியுடன் கடக்க எனக்குக் கிருபையையும், நம்பிக்கையையும் தந்தருளும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

