← செய்திகளுக்குத் திரும்பு
தேவன் உங்களை விசாரிக்கிறார்.
படத்தைப் பதிவிறக்கு

தேவன் உங்களை விசாரிக்கிறார்.

“புதன்கிழமை, 14 பிப்ரவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். 1பேதுரு 5:7 * உங்களுக்கு என்ன நேரிடப்போகிறதோ என்று நீங்கள் கவலைப்படுகிறீர்களா?* உங்கள் பிள்ளைகளைப் பற்றி தொடர்ந்து மன அழுத்தத்திலும், கவலையிலும் இருக்கிறீர்களா?* கவலை உங்கள் உடல்நிலையைப் பாதித்து உங்கள் குடும்பத்தில் அமைதியின்மையை ஏற்படுத்துகிறதா?* அப்படியானால், உதவிக்காக இயேசுவிடம் திரும்புங்கள். * அவர் உங்களை நேசித்து, அன்பான தகப்பனாய் உங்களை விசாரித்து உங்களுக்கு உதவிச் செய்கிறவர்.* உங்கள் பாரங்கள் அனைத்தையும் தனியாய்ச் சுமக்க முயற்சிக்காதீர்கள்.* மாறாக, அவற்றை இயேசுவின் மேல் வைத்து விடுங்கள். அவர் அவற்றை உங்களுக்காய்க் கையாளுவார்.*அவர் அனைத்தையும் பார்த்துக்கொள்கிறார் என்பதையறிந்து, நீங்கள் சமாதானமாய் இருக்கலாம். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, என் கவலைகளையும், பாரத்தையும் உம்மீது வைக்கிறேன். தயவுகூர்ந்து அவற்றை சமாளிக்க எனக்கு உதவிச் செய்யும். உம் சமாதானத்தை எனக்குத் தாரும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

புதன்கிழமை, 14 பிப்ரவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். 1பேதுரு 5:7 * உங்களுக்கு என்ன நேரிடப்போகிறதோ என்று நீங்கள் கவலைப்படுகிறீர்களா?* உங்கள் பிள்ளைகளைப் பற்றி தொடர்ந்து மன அழுத்தத்திலும், கவலையிலும் இருக்கிறீர்களா?* கவலை உங்கள் உடல்நிலையைப் பாதித்து உங்கள் குடும்பத்தில் அமைதியின்மையை ஏற்படுத்துகிறதா?* அப்படியானால், உதவிக்காக இயேசுவிடம் திரும்புங்கள். * அவர் உங்களை நேசித்து, அன்பான தகப்பனாய் உங்களை விசாரித்து உங்களுக்கு உதவிச் செய்கிறவர்.* உங்கள் பாரங்கள் அனைத்தையும் தனியாய்ச் சுமக்க முயற்சிக்காதீர்கள்.* மாறாக, அவற்றை இயேசுவின் மேல் வைத்து விடுங்கள். அவர் அவற்றை உங்களுக்காய்க் கையாளுவார்.*அவர் அனைத்தையும் பார்த்துக்கொள்கிறார் என்பதையறிந்து, நீங்கள் சமாதானமாய் இருக்கலாம். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, என் கவலைகளையும், பாரத்தையும் உம்மீது வைக்கிறேன். தயவுகூர்ந்து அவற்றை சமாளிக்க எனக்கு உதவிச் செய்யும். உம் சமாதானத்தை எனக்குத் தாரும். ஆமென்.