சனிக்கிழமை, 10 பிப்ரவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி, உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன்; உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள். ஆதியாகமம் 17:6 முழு இருதயத்தோடும் தேவனுக்குக் கீழ்ப்படிந்த விசுவாசமுள்ள மனிதரான ஆபிரகாமுக்குத் தேவன் கொடுத்த வாக்குத்தத்தைப் பற்றி, ஆதியாகமப் புத்தகத்தில் நாம் கற்றுக்கொள்கிறோம். தேவன் அவரை ஒரு பெரிய ஜாதியாய்ப் பெருகச் செய்வதாக வாக்குத்தத்தம் அளித்து அவரது சந்ததியார் மூலம் அதை நிறைவேற்றினார். தேவன் நம்மையும் ஆசீர்வதித்து, நாம் பலுகிப் பெருக உதவிச் செய்ய விரும்புகிறார் என்பதை ஆபிரகாமின் கதை நமக்குக் கற்பிக்கிறது. இருப்பினும், இதை அடைய, ஆபிரகாம் செய்ததுபோல், தேவனின் அறிவுரைகளையெல்லாம் பின்பற்றுவதில் நாம் உறுதியாகவும் ஒழுக்கமாகவும் இருக்க வேண்டும். நாம் அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்போது, இவ்வுலகில் நாம் செழித்திருக்க அவர் நம்மைப் பலப்படுத்தித் தகுதிப்படுத்துகிறார். நாம் கையிட்டுச் செய்யும் அனைத்திலும் அவர் பெருக்கத்தைக் கட்டளையிடுகிறார். மேலும் நம் சந்ததியினரையும் ஆசீர்வதிக்கிறார். தேவனின் ஆசீர்வாதங்கள் ஒரு தலைமுறைக்கு மட்டுமல்ல, அவை எதிர்காலச் சந்ததியினருக்கும் நீட்டிக்கப்படுகின்றன. எனவே, உங்கள் சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் கர்த்தரை நம்புவதில் உறுதியாயிருந்து அவருடைய வழிமுறைகளை எப்பொழுதும் பின்பற்றுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எங்களை ஆசீர்வதித்துப் பலுகிப் பெருகச் செய்வதாக தந்த வாக்குத்தத்தங்களுக்கு நன்றி. உம்முடைய வழிமுறைகளையெல்லாம் பின்பற்றுவதற்கான உறுதியையும் ஒழுக்கத்தையும் எனக்குத் தந்தருளும். ஆமென்.
தேவன் உங்களை மிகவும் பலுகப்பண்ணுவார்
“சனிக்கிழமை, 10 பிப்ரவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி, உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன்; உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள். ஆதியாகமம் 17:6 முழு இருதயத்தோடும் தேவனுக்குக் கீழ்ப்படிந்த விசுவாசமுள்ள மனிதரான ஆபிரகாமுக்குத் தேவன் கொடுத்த வாக்குத்தத்தைப் பற்றி, ஆதியாகமப் புத்தகத்தில் நாம் கற்றுக்கொள்கிறோம். தேவன் அவரை ஒரு பெரிய ஜாதியாய்ப் பெருகச் செய்வதாக வாக்குத்தத்தம் அளித்து அவரது சந்ததியார் மூலம் அதை நிறைவேற்றினார். தேவன் நம்மையும் ஆசீர்வதித்து, நாம் பலுகிப் பெருக உதவிச் செய்ய விரும்புகிறார் என்பதை ஆபிரகாமின் கதை நமக்குக் கற்பிக்கிறது. இருப்பினும், இதை அடைய, ஆபிரகாம் செய்ததுபோல், தேவனின் அறிவுரைகளையெல்லாம் பின்பற்றுவதில் நாம் உறுதியாகவும் ஒழுக்கமாகவும் இருக்க வேண்டும். நாம் அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்போது, இவ்வுலகில் நாம் செழித்திருக்க அவர் நம்மைப் பலப்படுத்தித் தகுதிப்படுத்துகிறார். நாம் கையிட்டுச் செய்யும் அனைத்திலும் அவர் பெருக்கத்தைக் கட்டளையிடுகிறார். மேலும் நம் சந்ததியினரையும் ஆசீர்வதிக்கிறார். தேவனின் ஆசீர்வாதங்கள் ஒரு தலைமுறைக்கு மட்டுமல்ல, அவை எதிர்காலச் சந்ததியினருக்கும் நீட்டிக்கப்படுகின்றன. எனவே, உங்கள் சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் கர்த்தரை நம்புவதில் உறுதியாயிருந்து அவருடைய வழிமுறைகளை எப்பொழுதும் பின்பற்றுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எங்களை ஆசீர்வதித்துப் பலுகிப் பெருகச் செய்வதாக தந்த வாக்குத்தத்தங்களுக்கு நன்றி. உம்முடைய வழிமுறைகளையெல்லாம் பின்பற்றுவதற்கான உறுதியையும் ஒழுக்கத்தையும் எனக்குத் தந்தருளும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

