வியாழக்கிழமை, 8 ஆகஸ்ட் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். கலாத்தியர் 6:9 நன்மை தீமை என நாம் செய்யும் செயல்கள் அனைத்திற்கும் தேவன் பலன் அளிக்கிறார். நற் கிரியைகளை விதைத்தால் நல்லதையே அறுவடை செய்யலாம். தீய செயல்களை விதைத்தால் தீயதையே அறுவடை செய்வீர்கள். விளையும் காலமானது பயிருக்குப் பயிர் மாறுபடும். சில பயிர்கள் விதைத்த அடுத்த நாளே முளைக்கும், மற்றவை அதிக நேரம் எடுக்கலாம். தேவன் உங்கள் வாழ்வை ஆசீர்வதிக்கும்போது, அதை நீங்கள் இந்த உலகில், நன்மைக்காக மீண்டும் விதைக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். பகிர்தல் மற்றும் கொடுப்பது என்பது விதைப்பதற்கான வெவ்வேறு வழிகள். நீங்கள் மற்றவர்களுக்கு நன்மை செய்யும்போது, பயன்பெறுவோர் மறு முகத்தைக் காட்டுகிறார்கள் என்பதற்காய் விட்டுவிடாதீர்கள். தொடர்ந்து தேவனுக்கு உண்மையாய் இருந்து மற்றவர்களுக்கு நன்மை செய்யுங்கள். நீங்கள் தொடர்ந்து நன்மையை விதைக்கிறீர்களா என்று கர்த்தர் கவனித்துக்கொண்டிருக்கிறார். நன்மை செய்தால், கர்த்தர் ஏற்ற காலத்தில் உங்களுக்கு ஏராளமான ஆசீர்வாதத்தின் அறுவடையைத் தருவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, சூழ்நிலையைப் பொருட்படுத்தாது நன்மை செய்ய எனக்கு உதவி செய்யும். உம்முடைய நேரத்தில் ஆசீர்வாதத்தை நான் அறுவடைச் செய்ய எனக்கு கிருபை தாரும். ஆமென்.
மனம் தளராதீர்கள்; ஏற்ற காலத்தில் நீங்கள் ஆசீர்வாதத்தை அறுவடை...
“வியாழக்கிழமை, 8 ஆகஸ்ட் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். கலாத்தியர் 6:9 நன்மை தீமை என நாம் செய்யும் செயல்கள் அனைத்திற்கும் தேவன் பலன் அளிக்கிறார். நற் கிரியைகளை விதைத்தால் நல்லதையே அறுவடை செய்யலாம். தீய செயல்களை விதைத்தால் தீயதையே அறுவடை செய்வீர்கள். விளையும் காலமானது பயிருக்குப் பயிர் மாறுபடும். சில பயிர்கள் விதைத்த அடுத்த நாளே முளைக்கும், மற்றவை அதிக நேரம் எடுக்கலாம். தேவன் உங்கள் வாழ்வை ஆசீர்வதிக்கும்போது, அதை நீங்கள் இந்த உலகில், நன்மைக்காக மீண்டும் விதைக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். பகிர்தல் மற்றும் கொடுப்பது என்பது விதைப்பதற்கான வெவ்வேறு வழிகள். நீங்கள் மற்றவர்களுக்கு நன்மை செய்யும்போது, பயன்பெறுவோர் மறு முகத்தைக் காட்டுகிறார்கள் என்பதற்காய் விட்டுவிடாதீர்கள். தொடர்ந்து தேவனுக்கு உண்மையாய் இருந்து மற்றவர்களுக்கு நன்மை செய்யுங்கள். நீங்கள் தொடர்ந்து நன்மையை விதைக்கிறீர்களா என்று கர்த்தர் கவனித்துக்கொண்டிருக்கிறார். நன்மை செய்தால், கர்த்தர் ஏற்ற காலத்தில் உங்களுக்கு ஏராளமான ஆசீர்வாதத்தின் அறுவடையைத் தருவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, சூழ்நிலையைப் பொருட்படுத்தாது நன்மை செய்ய எனக்கு உதவி செய்யும். உம்முடைய நேரத்தில் ஆசீர்வாதத்தை நான் அறுவடைச் செய்ய எனக்கு கிருபை தாரும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

