புதன், 7 ஆகஸ்ட் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீங்கள் எதையும் செய்யாமல் அமைதியாக இருந்தால் போதும், கர்த்தர் உங்களுக்காகப் போரிடுவார் என்றான். யாத்திராகமம் 14:14 (TA-ERV). உங்கள் சத்துருக்களின் அடக்குமுறையால் நீங்கள் இக்கட்டில் உட்பட்டிருக்கிறீர்களா? அவர்களின் கண்ணிகளில் சிக்கி, எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டிருக்கிறீர்களா?இவ் வேதனையின் நேரத்தில் தேவன் எங்கே இருக்கிறார், உங்களைக் காப்பாற்றுவதற்குப் பதிலாய் அவர் என்ன செய்கிறார் என்று நீங்கள் கேள்வி கேட்கிறீர்களா?எதிரிகளின் ஒடுக்குமுறைகள், காயங்கள் மற்றும் வேதனைகளுடன் நீங்கள் போராடும்போது அவர்களின் கை மேலோங்கி இருப்பதாய் உணருகிறீர்களா? மனம் தளர்ந்து விடாதீர்கள். இது, உங்கள் வாழ்க்கையில் தேவன் அனுமதித்த ஒரு தற்காலிகக் கட்டம். உங்கள் கூக்குரலைக் கேட்டுக்கொண்டிருக்கிற கர்த்தர் உங்களுக்காகப் போரிடுவார். உங்களைக் கைவிடுவதில்லை என்று வாக்குப்பண்ணி இருக்கிறார். நீங்கள் தனியே இல்லை. அவர் மேலுள்ள உங்கள் நம்பிக்கையை மட்டும் பற்றிக் கொள்ளுங்கள். மாம்சத்தின் ரீதியாக பழிவாங்க வேண்டாம். மாறாக, எல்லாவற்றையும் தேவனுடைய கரங்களில் ஒப்படைத்துவிட்டு அமைதியாயிருங்கள். யுத்தம் கர்த்தருடையது, வெற்றி உங்களுடையது. அவர் உங்கள் புலம்பலை ஆனந்தக் களிப்பாய் மாற்றுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னுடைய எல்லாக் கஷ்டங்களையும், துன்பங்களையும் உமது கரங்களில் ஒப்புக்கொடுக்கிறேன். தயவுகூர்ந்து எனக்காக யுத்தம் செய்யும். ஆமென்.
அமைதலாயிருங்கள்; கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்வார்
“புதன், 7 ஆகஸ்ட் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீங்கள் எதையும் செய்யாமல் அமைதியாக இருந்தால் போதும், கர்த்தர் உங்களுக்காகப் போரிடுவார் என்றான். யாத்திராகமம் 14:14 (TA-ERV). உங்கள் சத்துருக்களின் அடக்குமுறையால் நீங்கள் இக்கட்டில் உட்பட்டிருக்கிறீர்களா? அவர்களின் கண்ணிகளில் சிக்கி, எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டிருக்கிறீர்களா?இவ் வேதனையின் நேரத்தில் தேவன் எங்கே இருக்கிறார், உங்களைக் காப்பாற்றுவதற்குப் பதிலாய் அவர் என்ன செய்கிறார் என்று நீங்கள் கேள்வி கேட்கிறீர்களா?எதிரிகளின் ஒடுக்குமுறைகள், காயங்கள் மற்றும் வேதனைகளுடன் நீங்கள் போராடும்போது அவர்களின் கை மேலோங்கி இருப்பதாய் உணருகிறீர்களா? மனம் தளர்ந்து விடாதீர்கள். இது, உங்கள் வாழ்க்கையில் தேவன் அனுமதித்த ஒரு தற்காலிகக் கட்டம். உங்கள் கூக்குரலைக் கேட்டுக்கொண்டிருக்கிற கர்த்தர் உங்களுக்காகப் போரிடுவார். உங்களைக் கைவிடுவதில்லை என்று வாக்குப்பண்ணி இருக்கிறார். நீங்கள் தனியே இல்லை. அவர் மேலுள்ள உங்கள் நம்பிக்கையை மட்டும் பற்றிக் கொள்ளுங்கள். மாம்சத்தின் ரீதியாக பழிவாங்க வேண்டாம். மாறாக, எல்லாவற்றையும் தேவனுடைய கரங்களில் ஒப்படைத்துவிட்டு அமைதியாயிருங்கள். யுத்தம் கர்த்தருடையது, வெற்றி உங்களுடையது. அவர் உங்கள் புலம்பலை ஆனந்தக் களிப்பாய் மாற்றுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னுடைய எல்லாக் கஷ்டங்களையும், துன்பங்களையும் உமது கரங்களில் ஒப்புக்கொடுக்கிறேன். தயவுகூர்ந்து எனக்காக யுத்தம் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

