← செய்திகளுக்குத் திரும்பு
பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.
படத்தைப் பதிவிறக்கு

பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.

“செவ்வாய், 26 மார்ச் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள். கொலோசெயர் 3:2 எண்ணற்ற கவனச்சிதறல்கள், வேதனைகள், ஊழல்கள் மற்றும் குழப்பங்கள் ஆகியவற்றால் உலகம் சீர்கேடடைந்துக் காணப்படுகிறது. நீங்களும் அவற்றிற்குள் இழுக்கப்பட்டிருப்பதாய் உணர்ந்தால், நீங்கள் எவற்றிற்கு முன்னுரிமை கொடுக்கிறீர்கள் என்பதை சற்று ஆராய்ந்துப் பார்க்க வேண்டும். உங்கள் கவனத்தை தேவன் மீது செலுத்துங்கள். தெய்வீகக் காரியங்களில் கவனம் செலுத்துவதன் மூலம், நீங்கள் ஒரு புதிய கண்ணோட்டத்தைப் பெற்று, இந்த உலகிற்கு அப்பால் உள்ள அர்த்தத்தையும், நோக்கத்தையும் கண்டுகொள்ள முடியும். பொருள், மற்றும் செல்வங்களைப் பின்தொடர்ந்து செல்வது பயனற்றதாய் மாறிவிடும். ஆனால் ஆவிக்குரிய செல்வங்களைத் தேடுவது மெய்யயான நிறைவையும், மகிழ்ச்சியையும் தரும்.முதலாவது அவருடைய ராஜ்யத்தையும், நீதியையும் தேடுவதன் மூலம் தேவன் உங்கள் மீது மகிழ்ச்சியடைகிறார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் செயல்கள், எண்ணங்கள் மற்றும் இலக்குகளை தேவனுடைய சித்தத்துடன் சீரமைத்து அவருடைய போதனைகளின்படி வாழுங்கள். அவ்வாறு செய்வது, நீங்கள் தேவனைக் கனம்பண்ணும் ஒரு வாழ்க்கை வாழ்கிறீர்கள் என்கிற சமாதானத்தையும், மனநிறைவையும் தரும். நீங்கள் தேவனுக்கு முன்னுரிமை அளித்து, அவருடைய ராஜ்யத்தையும் நீதியையும் தேடும்போது, மற்ற அனைத்தும் சரியாய் நடந்தேறும். உண்மையான அன்பு, மகிழ்ச்சி மற்றும் சமாதானம் உட்பட, வேண்டிய அனைத்தையும் நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, பரலோகக் காரியங்களில் என் எண்ணங்களை நிலைநிறுத்த எனக்குக் கிருபை தாரும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய், 26 மார்ச் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள். கொலோசெயர் 3:2 எண்ணற்ற கவனச்சிதறல்கள், வேதனைகள், ஊழல்கள் மற்றும் குழப்பங்கள் ஆகியவற்றால் உலகம் சீர்கேடடைந்துக் காணப்படுகிறது. நீங்களும் அவற்றிற்குள் இழுக்கப்பட்டிருப்பதாய் உணர்ந்தால், நீங்கள் எவற்றிற்கு முன்னுரிமை கொடுக்கிறீர்கள் என்பதை சற்று ஆராய்ந்துப் பார்க்க வேண்டும். உங்கள் கவனத்தை தேவன் மீது செலுத்துங்கள். தெய்வீகக் காரியங்களில் கவனம் செலுத்துவதன் மூலம், நீங்கள் ஒரு புதிய கண்ணோட்டத்தைப் பெற்று, இந்த உலகிற்கு அப்பால் உள்ள அர்த்தத்தையும், நோக்கத்தையும் கண்டுகொள்ள முடியும். பொருள், மற்றும் செல்வங்களைப் பின்தொடர்ந்து செல்வது பயனற்றதாய் மாறிவிடும். ஆனால் ஆவிக்குரிய செல்வங்களைத் தேடுவது மெய்யயான நிறைவையும், மகிழ்ச்சியையும் தரும்.முதலாவது அவருடைய ராஜ்யத்தையும், நீதியையும் தேடுவதன் மூலம் தேவன் உங்கள் மீது மகிழ்ச்சியடைகிறார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் செயல்கள், எண்ணங்கள் மற்றும் இலக்குகளை தேவனுடைய சித்தத்துடன் சீரமைத்து அவருடைய போதனைகளின்படி வாழுங்கள். அவ்வாறு செய்வது, நீங்கள் தேவனைக் கனம்பண்ணும் ஒரு வாழ்க்கை வாழ்கிறீர்கள் என்கிற சமாதானத்தையும், மனநிறைவையும் தரும். நீங்கள் தேவனுக்கு முன்னுரிமை அளித்து, அவருடைய ராஜ்யத்தையும் நீதியையும் தேடும்போது, மற்ற அனைத்தும் சரியாய் நடந்தேறும். உண்மையான அன்பு, மகிழ்ச்சி மற்றும் சமாதானம் உட்பட, வேண்டிய அனைத்தையும் நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, பரலோகக் காரியங்களில் என் எண்ணங்களை நிலைநிறுத்த எனக்குக் கிருபை தாரும். ஆமென்