சனிக்கிழமை, 10 ஆகஸ்ட் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை.1 யோவான் 3:6 இயேசுவை உங்கள் தனிப்பட்ட இரட்சகராய் ஏற்றுக்கொள்வது வாழ்க்கையில் ஒரு புதிய பயணத்தின் ஆரம்பம். மனந்திரும்புதல் மற்றும் மன்னிப்பு பெறுதல் ஆகியவை ஆரம்பப் புள்ளிகள் மட்டுமே. சாத்தான் கெர்ச்சிக்கிற சிங்கத்தைப் போல் யாரையாவது, குறிப்பாய்த் தேவனுடைய பிள்ளைகளை விழுங்க வேண்டுமென்று வகை தேடி அலைகிறான். இத்தகைய பாதகமான சூழ்நிகைகளில் நாம் எவ்வாறு நம்மைப் பாவத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வது? இயேசுவே பதில். இயேசுவோடு நெருங்கிய உறவை வளர்த்துக்கொள்வதும், அவருடைய வழிகளில் நடப்பதுமே சோதனையிலிருந்து தப்பிக்கொள்வதற்கான திறவுகோலாகும். நீங்கள் இயேசுவிடம் எவ்வளவு நெருக்கமாய் இருக்கிறீர்களோ, அவ்வளவு பாதுகாப்பாய் இருப்பீர்கள். இயேசுவுடனான உங்கள் நெருக்கம் உங்களை அவரைப் போல் மாற்றும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, பரிசுத்தமாய் வாழ எனக்குக் கிருபை செய்யும் . ஆமென்.
இயேசுவில் தொடர்ந்து நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை
“சனிக்கிழமை, 10 ஆகஸ்ட் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை.1 யோவான் 3:6 இயேசுவை உங்கள் தனிப்பட்ட இரட்சகராய் ஏற்றுக்கொள்வது வாழ்க்கையில் ஒரு புதிய பயணத்தின் ஆரம்பம். மனந்திரும்புதல் மற்றும் மன்னிப்பு பெறுதல் ஆகியவை ஆரம்பப் புள்ளிகள் மட்டுமே. சாத்தான் கெர்ச்சிக்கிற சிங்கத்தைப் போல் யாரையாவது, குறிப்பாய்த் தேவனுடைய பிள்ளைகளை விழுங்க வேண்டுமென்று வகை தேடி அலைகிறான். இத்தகைய பாதகமான சூழ்நிகைகளில் நாம் எவ்வாறு நம்மைப் பாவத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வது? இயேசுவே பதில். இயேசுவோடு நெருங்கிய உறவை வளர்த்துக்கொள்வதும், அவருடைய வழிகளில் நடப்பதுமே சோதனையிலிருந்து தப்பிக்கொள்வதற்கான திறவுகோலாகும். நீங்கள் இயேசுவிடம் எவ்வளவு நெருக்கமாய் இருக்கிறீர்களோ, அவ்வளவு பாதுகாப்பாய் இருப்பீர்கள். இயேசுவுடனான உங்கள் நெருக்கம் உங்களை அவரைப் போல் மாற்றும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, பரிசுத்தமாய் வாழ எனக்குக் கிருபை செய்யும் . ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

