← செய்திகளுக்குத் திரும்பு
திக்கற்ற பிள்ளைகளுக்கு உதவி
படத்தைப் பதிவிறக்கு

திக்கற்ற பிள்ளைகளுக்கு உதவி

“சனிக்கிழமை, 16 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்; திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே. சங்கீதம் 10:14 தேவன் அன்பாகவே இருக்கிறார். அவருடைய அன்பிற்கு எல்லை இல்லை. அவரை முழுவதுமாய் நம்புவோர்க்கு அவர் நிலையான ஆதரவையும், ஆறுதலையும் தருகிறார். திக்கற்றோர்கள் மற்றும் பலவீனமாய் இருப்பவர்களின் தேவைகளுக்கு இயேசு தனிப்பட்ட கவனம் செலுத்துகிறார். அவர்களுக்கு இரங்கி உதவி செய்கிறார். அவரது ஊழியம் முழுவதும், பலவீனமானோர் மற்றும் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டோரின் அவலநிலைக்கு உணர்வுபூர்வமாய் உதவி செய்தார். நோயுற்றவர்களைக் குணப்படுத்தி, தேவையுள்ளோர்க்குக் கொடுத்து, துயரப்படுவோர்க்கு ஆறுதல் அளித்து தமது அன்பை வெளிப்படுத்தினார். தகப்பனின் அன்பிற்காக ஏங்கினால், இயேசுவிடம் வாருங்கள். அவர் தம்முடைய அன்பினால் உங்களைச் சூழ்ந்துக் கொள்வார், அவருடைய கிருபையால் உங்களை மூடுவார். உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும் உங்களை வழிநடத்துவார். அவர் உங்களைக் கவனித்து, எல்லாச் சேதங்களிலிருந்தும் உங்களைப் பாதுகாப்பார். எல்லா நேரங்களிலும் உங்களை வழிநடத்தவும், தேவைகளை சந்திக்கவும், பாதுகாக்கவும் தம்முடைய தூதர்களை அனுப்புவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, ஒரு அன்பான தகப்பனாய் நீர் எங்களைக் கவனித்துக்கொள்கிறீர் என்று அளித்திருக்கிற உறுதிக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

சனிக்கிழமை, 16 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்; திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே. சங்கீதம் 10:14 தேவன் அன்பாகவே இருக்கிறார். அவருடைய அன்பிற்கு எல்லை இல்லை. அவரை முழுவதுமாய் நம்புவோர்க்கு அவர் நிலையான ஆதரவையும், ஆறுதலையும் தருகிறார். திக்கற்றோர்கள் மற்றும் பலவீனமாய் இருப்பவர்களின் தேவைகளுக்கு இயேசு தனிப்பட்ட கவனம் செலுத்துகிறார். அவர்களுக்கு இரங்கி உதவி செய்கிறார். அவரது ஊழியம் முழுவதும், பலவீனமானோர் மற்றும் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டோரின் அவலநிலைக்கு உணர்வுபூர்வமாய் உதவி செய்தார். நோயுற்றவர்களைக் குணப்படுத்தி, தேவையுள்ளோர்க்குக் கொடுத்து, துயரப்படுவோர்க்கு ஆறுதல் அளித்து தமது அன்பை வெளிப்படுத்தினார். தகப்பனின் அன்பிற்காக ஏங்கினால், இயேசுவிடம் வாருங்கள். அவர் தம்முடைய அன்பினால் உங்களைச் சூழ்ந்துக் கொள்வார், அவருடைய கிருபையால் உங்களை மூடுவார். உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும் உங்களை வழிநடத்துவார். அவர் உங்களைக் கவனித்து, எல்லாச் சேதங்களிலிருந்தும் உங்களைப் பாதுகாப்பார். எல்லா நேரங்களிலும் உங்களை வழிநடத்தவும், தேவைகளை சந்திக்கவும், பாதுகாக்கவும் தம்முடைய தூதர்களை அனுப்புவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, ஒரு அன்பான தகப்பனாய் நீர் எங்களைக் கவனித்துக்கொள்கிறீர் என்று அளித்திருக்கிற உறுதிக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஆமென்.