← செய்திகளுக்குத் திரும்பு
உங்கள் உதவி கர்த்தரிடமிருந்து வருகிறது
படத்தைப் பதிவிறக்கு

உங்கள் உதவி கர்த்தரிடமிருந்து வருகிறது

“வியாழன், 24 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும். சங்கீதம் 121:2 தேவைப்படும் சமயங்களில், உதவி மற்றும் ஆதரவை எங்கு தேடுகிறீர்கள்? மனித உதவியென்பது கணிக்க முடியாதது. மக்கள் காலப்போக்கில் தங்கள் சூழ்நிலைகளைப் பொறுத்து மாறுபடலாம். சில சமயங்களில், உண்மையாய் உதவுவோரும் கூட உதவ முடியாமலும் போகலாம். ஆனால் தேவன் வரம்புகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். எனவே, எப்போதும் உதவி செய்யத் தகுதியும் விருப்பமும் உள்ள தேவனைச் சார்ந்திருப்பது மட்டுமே விவேகம் ஆகும். அவர் உங்கள் உணர்ச்சி மற்றும் சரீரத் தேவைகளைச் சந்திப்பதற்கு நம்பகமானவரும், அனுதாபம் கொண்டவரும் ஆவார். அவர் இரக்கமுள்ளவர். நீங்கள் உங்கள் இருதயத்தை அவரிடம் ஊற்றும்போது அவர் உங்களை ஒருபொழுதும் கண்டிக்க மாட்டார். உங்கள் பிரச்சனைகளைக் கேட்டு அவர் சோர்வடைய மாட்டார். அவர் தூங்குவதுமில்லை; உறங்குகிறதுமில்லை. நீங்கள் அவரை நோக்கிக் கூப்பிடும் போதெல்லாம், அவர் எப்போதும் ஒத்தாசையாய் இருப்பார். திடன்கொள்ளுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, மற்றவர்களை விட உம்மையே சார்ந்திருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வியாழன், 24 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும். சங்கீதம் 121:2 தேவைப்படும் சமயங்களில், உதவி மற்றும் ஆதரவை எங்கு தேடுகிறீர்கள்? மனித உதவியென்பது கணிக்க முடியாதது. மக்கள் காலப்போக்கில் தங்கள் சூழ்நிலைகளைப் பொறுத்து மாறுபடலாம். சில சமயங்களில், உண்மையாய் உதவுவோரும் கூட உதவ முடியாமலும் போகலாம். ஆனால் தேவன் வரம்புகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். எனவே, எப்போதும் உதவி செய்யத் தகுதியும் விருப்பமும் உள்ள தேவனைச் சார்ந்திருப்பது மட்டுமே விவேகம் ஆகும். அவர் உங்கள் உணர்ச்சி மற்றும் சரீரத் தேவைகளைச் சந்திப்பதற்கு நம்பகமானவரும், அனுதாபம் கொண்டவரும் ஆவார். அவர் இரக்கமுள்ளவர். நீங்கள் உங்கள் இருதயத்தை அவரிடம் ஊற்றும்போது அவர் உங்களை ஒருபொழுதும் கண்டிக்க மாட்டார். உங்கள் பிரச்சனைகளைக் கேட்டு அவர் சோர்வடைய மாட்டார். அவர் தூங்குவதுமில்லை; உறங்குகிறதுமில்லை. நீங்கள் அவரை நோக்கிக் கூப்பிடும் போதெல்லாம், அவர் எப்போதும் ஒத்தாசையாய் இருப்பார். திடன்கொள்ளுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, மற்றவர்களை விட உம்மையே சார்ந்திருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.