புதன்கிழமை, 13 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார். மத்தேயு 8:17 வியாதியில் இருந்து தீர்வு இல்லாமல் நெடுங்காலமாய் வேதனையை அனுபவிக்கிறீர்களா? உங்களின் தற்போதைய உடல்நலச் சவால்களால் எதிர்காலம் என்னவாகும் என்பதைப் பற்றி நீங்கள் கலங்கி வேதனைப்படுகிறீர்களா?* உங்கள் வழக்கமான உணவின் ஒரு பகுதியாய், உங்கள் மருந்துகளை தினமும் எடுத்துக்கொண்டிருக்கிறீர்களா? * மனம் தளராதீர்கள்; இயேசு கிறிஸ்துவுக்குள் உங்களுக்கு விடுதலை இருக்கிறது.* சிலுவையில், அவர் நம்முடைய நோய்களையும் பாடுகளையும் மனப்பூர்வமாய் ஏற்றுக்கொண்டு, நாம் குணமாக்கப்படுவதாய் வாக்குறுதி அளித்திருக்கிறார்.* இந்த உண்மையை விசுவாசித்து, இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தில் நீங்கள் குணமடையும்படிக் கேளுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீரே என்னைக் குணமாக்குகிறவரும் என் அடைக்கலமுமானவர். எனக்காக என் நோய்களையும் பலவீனங்களையும் சிலுவையில் சுமந்தீர் என்று நான் நம்புகிறேன். நான் பரிபூரணமாய் வாழவும் உமக்குச் சேவை செய்யவும், என்னை குணமாக்கி, எனது உடல் நலனை மீட்டெடுக்கும்படித் தாழ்மையுடன் ஜெபிக்கிறேன். ஆமென்.
இயேசு உங்கள் நோய்களைத் தாமே சுமந்துகொண்டார்
“புதன்கிழமை, 13 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார். மத்தேயு 8:17 *வியாதியில் இருந்து தீர்வு இல்லாமல் நெடுங்காலமாய் வேதனையை அனுபவிக்கிறீர்களா?* உங்களின் தற்போதைய உடல்நலச் சவால்களால் எதிர்காலம் என்னவாகும் என்பதைப் பற்றி நீங்கள் கலங்கி வேதனைப்படுகிறீர்களா?* உங்கள் வழக்கமான உணவின் ஒரு பகுதியாய், உங்கள் மருந்துகளை தினமும் எடுத்துக்கொண்டிருக்கிறீர்களா? * மனம் தளராதீர்கள்; இயேசு கிறிஸ்துவுக்குள் உங்களுக்கு விடுதலை இருக்கிறது.* சிலுவையில், அவர் நம்முடைய நோய்களையும் பாடுகளையும் மனப்பூர்வமாய் ஏற்றுக்கொண்டு, நாம் குணமாக்கப்படுவதாய் வாக்குறுதி அளித்திருக்கிறார்.* இந்த உண்மையை விசுவாசித்து, இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தில் நீங்கள் குணமடையும்படிக் கேளுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீரே என்னைக் குணமாக்குகிறவரும் என் அடைக்கலமுமானவர். எனக்காக என் நோய்களையும் பலவீனங்களையும் சிலுவையில் சுமந்தீர் என்று நான் நம்புகிறேன். நான் பரிபூரணமாய் வாழவும் உமக்குச் சேவை செய்யவும், என்னை குணமாக்கி, எனது உடல் நலனை மீட்டெடுக்கும்படித் தாழ்மையுடன் ஜெபிக்கிறேன். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

