← செய்திகளுக்குத் திரும்பு
உங்கள் கண்ணீர் அவர் துருத்தியில் இருக்கிறது
படத்தைப் பதிவிறக்கு

உங்கள் கண்ணீர் அவர் துருத்தியில் இருக்கிறது

“செவ்வாய்க்கிழமை, 12 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என் அலைச்சல்களை தேவரீர் எண்ணியிருக்கிறீர் ; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ எழுதியிருக்கிறது? சங்கீதம் 56:8 நீங்கள் மன உளைச்சலுக்குள்ளாகி, வாழ்க்கையில் நம்பிக்கை இழந்திருக்கிறீர்களா? உங்கள் கூப்பிடுதலுக்கும், அழுகைக்கும் தேவன் பதிலளிக்கவில்லை என்று நீங்கள் வருத்தப்படுகிறீர்களா? தேவன் உங்களைப் பற்றி கவலைப்படவில்லை என்று நினைத்து கலங்குகிறீர்களா? மனம் தளராதீர்கள். அவர் உங்களை எப்பொழுதும் கவனித்துக் கொண்டிருக்கிறார். அவர் உங்கள் வலியையும், வேதனைகளையும் புரிந்துகொள்கிறார். உண்மை என்னவென்றால், ஏற்றத் தாழ்வுகளின் இந்த சவாலான பயணத்தில் நீங்கள் தனியாக இல்லை. எப்பொழுதும் உங்களுடன் இருக்கிறவர் நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளைக் கடந்து வருகிறார். அவர் உங்கள் துன்பங்களைப் பற்றி அமைதியாகவோ, அலட்சியமாகவோ அல்லது காணாதவர்போல் இருப்பதாகவோ தோன்றலாம். ஆனால், அவர் உங்கள் எல்லாத் துயரங்களையும் கண்காணித்து, உங்கள் கண்ணீரை ஓர் துருத்தியில் சேர்த்து வைக்கிறார். அவர் நிச்சயமாய் உங்கள் கூப்பிடுதலுக்குப் பதிலளித்து உங்களுக்கு விடுதலை தருவார். அவர் உங்களை விடுவித்து உயரமான ஸ்தலங்களில் உங்களை ஏறியிருக்கப் பண்ணுவார். தேவன் உங்களையும் உங்கள் கண்ணீரையும் பார்க்கிறார் என்பதை அறிந்து, திடன் கொள்ளுங்கள். உங்களை நீங்களே ஆறுதல்படுத்துங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் கூக்குரலைக் கேட்டு, உமது சித்தம் மற்றும் நோக்கத்தின்படி என்னை விடுவித்தருளும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய்க்கிழமை, 12 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என் அலைச்சல்களை தேவரீர் எண்ணியிருக்கிறீர் ; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ எழுதியிருக்கிறது? சங்கீதம் 56:8 நீங்கள் மன உளைச்சலுக்குள்ளாகி, வாழ்க்கையில் நம்பிக்கை இழந்திருக்கிறீர்களா? உங்கள் கூப்பிடுதலுக்கும், அழுகைக்கும் தேவன் பதிலளிக்கவில்லை என்று நீங்கள் வருத்தப்படுகிறீர்களா? தேவன் உங்களைப் பற்றி கவலைப்படவில்லை என்று நினைத்து கலங்குகிறீர்களா? மனம் தளராதீர்கள். அவர் உங்களை எப்பொழுதும் கவனித்துக் கொண்டிருக்கிறார். அவர் உங்கள் வலியையும், வேதனைகளையும் புரிந்துகொள்கிறார். உண்மை என்னவென்றால், ஏற்றத் தாழ்வுகளின் இந்த சவாலான பயணத்தில் நீங்கள் தனியாக இல்லை. எப்பொழுதும் உங்களுடன் இருக்கிறவர் நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளைக் கடந்து வருகிறார். அவர் உங்கள் துன்பங்களைப் பற்றி அமைதியாகவோ, அலட்சியமாகவோ அல்லது காணாதவர்போல் இருப்பதாகவோ தோன்றலாம். ஆனால், அவர் உங்கள் எல்லாத் துயரங்களையும் கண்காணித்து, உங்கள் கண்ணீரை ஓர் துருத்தியில் சேர்த்து வைக்கிறார். அவர் நிச்சயமாய் உங்கள் கூப்பிடுதலுக்குப் பதிலளித்து உங்களுக்கு விடுதலை தருவார். அவர் உங்களை விடுவித்து உயரமான ஸ்தலங்களில் உங்களை ஏறியிருக்கப் பண்ணுவார். தேவன் உங்களையும் உங்கள் கண்ணீரையும் பார்க்கிறார் என்பதை அறிந்து, திடன் கொள்ளுங்கள். உங்களை நீங்களே ஆறுதல்படுத்துங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் கூக்குரலைக் கேட்டு, உமது சித்தம் மற்றும் நோக்கத்தின்படி என்னை விடுவித்தருளும். ஆமென்.