ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்.ஏசாயா 25:4 புதிய நோய்களின் தோற்றத்தினாலும், வேகமாய்ப் பரவும் நோய்த்தொற்றுக்கள் காரணமாயும் நாம் அதிக அளவிலான மன அழுத்தத்திற்குள்ளாகிறோம். உலகெங்கிலும் உள்ள ஜனங்கள் பலரை மரண பயம் ஆட்கொண்டுள்ளது. பெரும்பாலான நோயாளிகளின் உடல்நிலை மோசமடைவதற்குப் பதற்றமே முதன்மைக் காரணம் என மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தொற்றுக் கிருமி உங்களுக்கு உள்ளதென்று கண்டறியப்பட்டாலும், பதற்றமடையாதிருப்பது அவசியம். நீங்களோ அல்லது உங்கள் அன்புக்குரியவர்களோ இத்தகைய வேதனையை அனுபவித்தால், நம்பிக்கையை விட்டுவிடாதீர்கள் என்று நான் உங்களை ஊக்குவிக்க விரும்புகிறேன். தேவனுடைய அனுமதியின்றி எந்தத் தீங்கும் நடக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதும், பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதும் அவசியம். மேலும், இது போன்ற நேரங்களில் தேவன் நமக்கு அடைக்கலமும், உறைவிடமும் நிழலுமானவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர் நம்மை ஒருபொழுதும் கைவிடமாட்டார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எங்களுக்கு அடைக்கலமும், உறைவிடமும், நிழலுமுமாக இருந்து எங்கள் ஜீவனைப் பாதுகாத்தருளும். ஆமென்.
தேவன் உங்களுக்கு அடைக்கலமும், உறைவிடமும் நிழலுமாயிருக்கிறார்.
“ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்.ஏசாயா 25:4 புதிய நோய்களின் தோற்றத்தினாலும், வேகமாய்ப் பரவும் நோய்த்தொற்றுக்கள் காரணமாயும் நாம் அதிக அளவிலான மன அழுத்தத்திற்குள்ளாகிறோம். உலகெங்கிலும் உள்ள ஜனங்கள் பலரை மரண பயம் ஆட்கொண்டுள்ளது. பெரும்பாலான நோயாளிகளின் உடல்நிலை மோசமடைவதற்குப் பதற்றமே முதன்மைக் காரணம் என மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தொற்றுக் கிருமி உங்களுக்கு உள்ளதென்று கண்டறியப்பட்டாலும், பதற்றமடையாதிருப்பது அவசியம். நீங்களோ அல்லது உங்கள் அன்புக்குரியவர்களோ இத்தகைய வேதனையை அனுபவித்தால், நம்பிக்கையை விட்டுவிடாதீர்கள் என்று நான் உங்களை ஊக்குவிக்க விரும்புகிறேன். தேவனுடைய அனுமதியின்றி எந்தத் தீங்கும் நடக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதும், பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதும் அவசியம். மேலும், இது போன்ற நேரங்களில் தேவன் நமக்கு அடைக்கலமும், உறைவிடமும் நிழலுமானவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர் நம்மை ஒருபொழுதும் கைவிடமாட்டார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எங்களுக்கு அடைக்கலமும், உறைவிடமும், நிழலுமுமாக இருந்து எங்கள் ஜீவனைப் பாதுகாத்தருளும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

