சனிக்கிழமை, 6 ஜனவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தர் தம்முடைய ஜனத்தின்மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார். சங்கீதம் 149:4 * கர்த்தர் உங்களை அதிக ஆழமாய் நேசிக்கிறார். அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதற்கான உங்கள் முடிவில் அவர் மகிழ்ச்சியடைகிறார்.* உங்கள் வாழ்க்கையின் ஆசீர்வாதங்கள் அனைத்துக்கும் அவர் ஆதாரமாயிருக்கிறார். மேலும் இந்த உலகில் உங்களைச் செழிக்கச் செய்ய அவர் விரும்புகிறார்.* தேவனின் பிள்ளையாய் இருப்பதன் மிக முக்கியமான அம்சம், அவரைச் சார்ந்திருப்பதும், அவருடைய வழிகளில் நம்பிக்கை வைப்பதும், அவருடைய அறிவுரைகளுக்குக் கீழ்ப்படிவதும் ஆகும். * வாழ்க்கையின் சவால்களில் மூழ்குவது எளிது. என்றாலும் நீங்கள் தேவன்மீது உங்கள் நம்பிக்கையை வைக்கும்போது, அவர் ஒவ்வொரு சூழ்நிலையிலும் உங்களை வழிநடத்துவார்.* தாழ்மையுடன் இருந்து உங்கள் திட்டங்களைத் தேவனிடம் ஒப்புக்கொடுங்கள். அவர் உங்களை விரும்பிய இலக்கை நோக்கி அழைத்துச் செல்வார்.* அப்படிச் செய்தால் நீங்கள் அவருக்கு மகிழ்ச்சியைத் தருவீர்கள். * நீங்கள் கர்த்தரைப் பிரியப்படுத்த முற்படும்போது, அவருடைய ஆசீர்வாதங்களைப் பூரணமாய் அனுபவிக்க உங்களை ஒப்புக் கொடுக்கிறீர்கள்.* அவருடைய வழிகாட்டுதல்களைக் கவனமாகப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் முயற்சிகளெல்லாவற்றிலும் வெற்றி பெறுவீர்கள்.* உற்சாகம் கொள்ளுங்கள். ஆச்சரியமான ஆசீர்வாதங்களுக்காய் நீங்கள் குறிக்கப்பட்டிருக்கிறீர்கள்.* நீங்கள் தொடர்ந்து விசுவாசத்தில் நடக்கும்போது, உங்கள் வாழ்க்கையில் அவருடைய கரம் கிரியை செய்வதைக் காண்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்மை முழுமையாய் நம்பவும், உமக்குப் பிரியமான நபராயிருக்கவும் எனக்கு உதவிச் செய்யும். உமது சித்தம் என் வாழ்வில் நிறைவேறட்டும், நான் எப்பொழுதும் உம்மைப் பிரியப்படுத்த முற்படுவேன். ஆமென்.
கர்த்தர் தம்முடைய ஜனத்தின்மேல் பிரியம் வைக்கிறார்.
“சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார். சங்கீதம் 149:4 * கர்த்தர் உங்களை அதிக ஆழமாய் நேசிக்கிறார். அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதற்கான உங்கள் முடிவில் அவர் மகிழ்ச்சியடைகிறார்.* உங்கள் வாழ்க்கையின் ஆசீர்வாதங்கள் அனைத்துக்கும் அவர் ஆதாரமாயிருக்கிறார். மேலும் இந்த உலகில் உங்களைச் செழிக்கச் செய்ய அவர் விரும்புகிறார்.* தேவனின் பிள்ளையாய் இருப்பதன் மிக முக்கியமான அம்சம், அவரைச் சார்ந்திருப்பதும், அவருடைய வழிகளில் நம்பிக்கை வைப்பதும், அவருடைய அறிவுரைகளுக்குக் கீழ்ப்படிவதும் ஆகும். * வாழ்க்கையின் சவால்களில் மூழ்குவது எளிது. என்றாலும் நீங்கள் தேவன்மீது உங்கள் நம்பிக்கையை வைக்கும்போது, அவர் ஒவ்வொரு சூழ்நிலையிலும் உங்களை வழிநடத்துவார்.* தாழ்மையுடன் இருந்து உங்கள் திட்டங்களைத் தேவனிடம் ஒப்புக்கொடுங்கள். அவர் உங்களை விரும்பிய இலக்கை நோக்கி அழைத்துச் செல்வார்.* அப்படிச் செய்தால் நீங்கள் அவருக்கு மகிழ்ச்சியைத் தருவீர்கள். * நீங்கள் கர்த்தரைப் பிரியப்படுத்த முற்படும்போது, அவருடைய ஆசீர்வாதங்களைப் பூரணமாய் அனுபவிக்க உங்களை ஒப்புக் கொடுக்கிறீர்கள்.* அவருடைய வழிகாட்டுதல்களைக் கவனமாகப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் முயற்சிகளெல்லாவற்றிலும் வெற்றி பெறுவீர்கள்.* உற்சாகம் கொள்ளுங்கள். ஆச்சரியமான ஆசீர்வாதங்களுக்காய் நீங்கள் குறிக்கப்பட்டிருக்கிறீர்கள்.* நீங்கள் தொடர்ந்து விசுவாசத்தில் நடக்கும்போது, உங்கள் வாழ்க்கையில் அவருடைய கரம் கிரியை செய்வதைக் காண்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்மை முழுமையாய் நம்பவும், உமக்குப் பிரியமான நபராயிருக்கவும் எனக்கு உதவிச் செய்யும். உமது சித்தம் என் வாழ்வில் நிறைவேறட்டும், நான் எப்பொழுதும் உம்மைப் பிரியப்படுத்த முற்படுவேன். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

