ஞாயிற்றுக்கிழமை, 25 பிப்ரவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார். 1 தெசலோனிக்கேயர் 5:24 தேவனின் உண்மை கிறிஸ்தவ நம்பிக்கையின் மூலைக்கல்லாகும். தேவன் எப்பொழுதும் தம் வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவதோடு, தம்முடைய ஜனங்கள் மீதான அன்பிலும் அக்கறையிலும் அவர் உறுதியாயிருக்கிறார் என்பதே இதன் பொருளாகும். வரலாறு முழுவதும் மனுக்குலம் உண்மையற்றதாயிருந்தபோதும், தேவன் தமது உண்மைத்தன்மையை மீண்டும் மீண்டும் காட்டியிருக்கிறார். ஆபிரகாமுடன் அவர் செய்த உடன்படிக்கை, தேவனுடைய உண்மைத்தன்மையின் மிக முக்கிய எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும். தேவன் ஆபிரகாமை திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாய் மாற்றுவதாய் வாக்களித்தார். அந்த அவருடைய வாக்குறுதியில் அவர் உண்மையாயிருந்தார். கீழ்ப்படியாமையின் மத்தியிலும், தேவன் இஸ்ரவேலரை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு வழிநடத்தியதிலும் அவரது உண்மை விளங்குகிறது. புதிய ஏற்பாட்டில், இயேசு கிறிஸ்துவில் தேவனுடைய உண்மையைக் காண்கிறோம். இயேசு தமது வாழ்க்கை, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம், மனுக்குலமனைத்திற்கும் தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தை நிறைவேற்றினார். இப்பொழுதும் கூட, இயேசு உண்மையுள்ளவராயிருந்து, பிதாவின் சமூகத்தில் நமக்காகப் பரிந்து பேசி அவருடைய மன்னிப்பை நமக்கு அருளிச் செய்து நம்மேல் கிருபையுள்ளவராய் இருக்கிறார் . * தேவனுடைய பிள்ளையாகிய நீங்கள் அவருடைய உண்மைத் தன்மையில் நம்பிக்கையுள்ளவர்களாய் இருக்க வேண்டும்.* எப்பொழுதும் உங்களுடன் இருப்பதாகவும் நம்முடைய நன்மைக்கேதுவாய்ச் சகலத்தையும் செய்வதாகவும் அவர் வாக்களித்துள்ளார்.* சோதனைகளுக்கும் கஷ்டங்களுக்கும் மத்தியிலும் தேவன் உண்மையுள்ளவர் என்றும், உங்களைப் பராமரிப்பார் என்பதிலும் நீங்கள் உறுதியாயிருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது உண்மைத்தன்மைக்கு நான் நன்றிசெலுத்துகிறேன். எனது வாழ்நாள் முழுவதும் உமக்கு உண்மையாயிருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர்.
“ஞாயிற்றுக்கிழமை, 25 பிப்ரவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார். 1 தெசலோனிக்கேயர் 5:24 தேவனின் உண்மை கிறிஸ்தவ நம்பிக்கையின் மூலைக்கல்லாகும். தேவன் எப்பொழுதும் தம் வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவதோடு, தம்முடைய ஜனங்கள் மீதான அன்பிலும் அக்கறையிலும் அவர் உறுதியாயிருக்கிறார் என்பதே இதன் பொருளாகும். வரலாறு முழுவதும் மனுக்குலம் உண்மையற்றதாயிருந்தபோதும், தேவன் தமது உண்மைத்தன்மையை மீண்டும் மீண்டும் காட்டியிருக்கிறார். ஆபிரகாமுடன் அவர் செய்த உடன்படிக்கை, தேவனுடைய உண்மைத்தன்மையின் மிக முக்கிய எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும். தேவன் ஆபிரகாமை திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாய் மாற்றுவதாய் வாக்களித்தார். அந்த அவருடைய வாக்குறுதியில் அவர் உண்மையாயிருந்தார். கீழ்ப்படியாமையின் மத்தியிலும், தேவன் இஸ்ரவேலரை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு வழிநடத்தியதிலும் அவரது உண்மை விளங்குகிறது. புதிய ஏற்பாட்டில், இயேசு கிறிஸ்துவில் தேவனுடைய உண்மையைக் காண்கிறோம். இயேசு தமது வாழ்க்கை, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம், மனுக்குலமனைத்திற்கும் தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தை நிறைவேற்றினார். இப்பொழுதும் கூட, இயேசு உண்மையுள்ளவராயிருந்து, பிதாவின் சமூகத்தில் நமக்காகப் பரிந்து பேசி அவருடைய மன்னிப்பை நமக்கு அருளிச் செய்து நம்மேல் கிருபையுள்ளவராய் இருக்கிறார் . * தேவனுடைய பிள்ளையாகிய நீங்கள் அவருடைய உண்மைத் தன்மையில் நம்பிக்கையுள்ளவர்களாய் இருக்க வேண்டும்.* எப்பொழுதும் உங்களுடன் இருப்பதாகவும் நம்முடைய நன்மைக்கேதுவாய்ச் சகலத்தையும் செய்வதாகவும் அவர் வாக்களித்துள்ளார்.* சோதனைகளுக்கும் கஷ்டங்களுக்கும் மத்தியிலும் தேவன் உண்மையுள்ளவர் என்றும், உங்களைப் பராமரிப்பார் என்பதிலும் நீங்கள் உறுதியாயிருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது உண்மைத்தன்மைக்கு நான் நன்றிசெலுத்துகிறேன். எனது வாழ்நாள் முழுவதும் உமக்கு உண்மையாயிருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

