புதன்கிழமை, 4 டிசம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது. நீதிமொழிகள் 13:19 நம் ஆசைகளும் கனவுகளும் நிறைவேறுவதற்கு நெடுங்காலம் காத்திருப்பது சவாலானதும், வறட்சி உணர்வை நம் வாழ்வில் கொண்டுவரக்கூடியதுமாய் இருக்கலாம். இந்த நீட்டிக்கப்பட்ட காத்திருப்பு, முன்னோக்கிச் செல்வதற்கான நமது ஊக்கத்தையும், நேர்மையாய் முயற்சி செய்வதையும் அடிக்கடி பாதிக்கிறது. இது நமது பொறுமையைச் சோதித்து, நமது இலக்குகளை அடைவதற்கான குறுக்குவழிகள் மற்றும் நெறிமுறையற்ற வழிகளைக் கருத்தில் கொள்ளும்படி நம்மைத் தூண்டுகிறது. எவ்வாறாயினும், நம்முடைய பரலோகத் தகப்பன் நம்முடைய போராட்டங்களை அறிந்திருக்கிறார் என்பதையும், அவர் நீதியுள்ள நியாயாதிபதி என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவர் சர்வ வல்லவர். ஊழல் போன்ற காரியங்களுக்கு நாம் மறுப்புச் சொல்ல வேண்டும். எல்லோரும் இதைக் கடைபிடித்தால், நம் நாட்டை இந்தச் சமூக அச்சுறுத்தலில் இருந்து விடுவிக்க முடியும். எனவே, தேவனுக்காகக் காத்திருக்கவும், அவரைச் செயல்பட அனுமதிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு என்ன தேவை, என்றும் அதை எப்பொழுது கொடுக்க வேண்டும் என்றும் அவருக்குத் தெரியும். அவர் சகலத்தையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாய்ச் செய்கிறார். அவர் தரும்பொழுது, அது உங்கள் ஆத்துமாவைத் திருப்தியாக்கும் ஆசீர்வாதமாய் இருக்கும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்வில் உம்முடைய ஆசீர்வாதத்திற்காகக் காத்திருக்கவும், பொறுமையாக இருப்பதற்கும் எனக்குக் கிருபை தாரும். ஆமென்.
வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது.
“நீதிமொழிகள் 13:19 நம் ஆசைகளும் கனவுகளும் நிறைவேறுவதற்கு நெடுங்காலம் காத்திருப்பது சவாலானதும், வறட்சி உணர்வை நம் வாழ்வில் கொண்டுவரக்கூடியதுமாய் இருக்கலாம். இந்த நீட்டிக்கப்பட்ட காத்திருப்பு, முன்னோக்கிச் செல்வதற்கான நமது ஊக்கத்தையும், நேர்மையாய் முயற்சி செய்வதையும் அடிக்கடி பாதிக்கிறது. இது நமது பொறுமையைச் சோதித்து, நமது இலக்குகளை அடைவதற்கான குறுக்குவழிகள் மற்றும் நெறிமுறையற்ற வழிகளைக் கருத்தில் கொள்ளும்படி நம்மைத் தூண்டுகிறது. எவ்வாறாயினும், நம்முடைய பரலோகத் தகப்பன் நம்முடைய போராட்டங்களை அறிந்திருக்கிறார் என்பதையும், அவர் நீதியுள்ள நியாயாதிபதி என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவர் சர்வ வல்லவர். ஊழல் போன்ற காரியங்களுக்கு நாம் மறுப்புச் சொல்ல வேண்டும். எல்லோரும் இதைக் கடைபிடித்தால், நம் நாட்டை இந்தச் சமூக அச்சுறுத்தலில் இருந்து விடுவிக்க முடியும். எனவே, தேவனுக்காகக் காத்திருக்கவும், அவரைச் செயல்பட அனுமதிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு என்ன தேவை, என்றும் அதை எப்பொழுது கொடுக்க வேண்டும் என்றும் அவருக்குத் தெரியும். அவர் சகலத்தையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாய்ச் செய்கிறார். அவர் தரும்பொழுது, அது உங்கள் ஆத்துமாவைத் திருப்தியாக்கும் ஆசீர்வாதமாய் இருக்கும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்வில் உம்முடைய ஆசீர்வாதத்திற்காகக் காத்திருக்கவும், பொறுமையாக இருப்பதற்கும் எனக்குக் கிருபை தாரும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

