புதன், 31 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவர், திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறடிக்கப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகினார். மத்தேயு 9:36 நம் தேவன் மனதுருக்கமுள்ளவர். தமது பூமிக்குரிய ஊழியம் முழுவதும், இயேசு மனதுருக்கத்தைக் காட்டினார். அவர் மனதுருக்கத்தால் உந்தப்பட்ட போதெல்லாம் அற்புதங்களைச் செய்தார். வாழ்க்கையில் போராடும் மற்றவர்களிடம் நீங்கள் எவ்வளவு மனதுருக்கமாய் இருக்கிறீர்கள்? இன்றைய தன்னலச் சமூகத்தில் மனதுருக்கம் ஒருவரை தனித்து நிற்க வைக்கிறது. தன்னலமற்ற சேவையைப் பிறருக்கு தரும்படி, இது ஒரு நபரைத் தூண்டி விடுகிறது. உண்மையான இரக்கம் இயேசுவின் அன்பின் மூலம் வருகிறது. - உங்களைத் தமது அன்பினால் நிரப்பும்படித் தேவனிடம் கேளுங்கள்.- சில சமயங்களில், தேவன் தமது பிள்ளைகளை இரக்கமுடையோர் ஆக்குவதற்காக அவர்களின் ஆவியில் நொறுக்கப்பட அனுமதிக்கிறார்.- அப்படிப்பட்ட வேதனையான பாதைகளில் நீங்கள் சென்றால் மனச்சோர்வடைய வேண்டாம்.- அப்படிப்பட்டோரின் ஜெபங்களை அவர் புறக்கணிக்க முடியாது. நிச்சயமாய் உங்களைப் பிறரை ஆசீர்வதிக்கும் வாய்க்காலாய் மாற்றுவார்.- உங்கள் வாழ்க்கையில் தேவ திட்டத்தை நிறைவேற்ற உறுதியாய் இருங்கள்.- அவர் உங்களை இரக்கமுள்ள நபராய் மாற்றுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என் இருதயத்தை உமது அன்பினால் நிரப்பி, வேதனையிலும் வியாகுலத்திலும் உள்ளவர்களிடம் மனதுருக்கத்தைக் காட்ட எனக்கு உதவி செய்யும். ஆமென்.
அவர் திரளான ஜனங்களைக் கண்டபோது அவர்கள்மேல் மனதுருகினார்
“புதன், 31 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவர், திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறடிக்கப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகினார். மத்தேயு 9:36 நம் தேவன் மனதுருக்கமுள்ளவர். தமது பூமிக்குரிய ஊழியம் முழுவதும், இயேசு மனதுருக்கத்தைக் காட்டினார். அவர் மனதுருக்கத்தால் உந்தப்பட்ட போதெல்லாம் அற்புதங்களைச் செய்தார். வாழ்க்கையில் போராடும் மற்றவர்களிடம் நீங்கள் எவ்வளவு மனதுருக்கமாய் இருக்கிறீர்கள்? இன்றைய தன்னலச் சமூகத்தில் மனதுருக்கம் ஒருவரை தனித்து நிற்க வைக்கிறது. தன்னலமற்ற சேவையைப் பிறருக்கு தரும்படி, இது ஒரு நபரைத் தூண்டி விடுகிறது. உண்மையான இரக்கம் இயேசுவின் அன்பின் மூலம் வருகிறது. - உங்களைத் தமது அன்பினால் நிரப்பும்படித் தேவனிடம் கேளுங்கள்.- சில சமயங்களில், தேவன் தமது பிள்ளைகளை இரக்கமுடையோர் ஆக்குவதற்காக அவர்களின் ஆவியில் நொறுக்கப்பட அனுமதிக்கிறார்.- அப்படிப்பட்ட வேதனையான பாதைகளில் நீங்கள் சென்றால் மனச்சோர்வடைய வேண்டாம்.- அப்படிப்பட்டோரின் ஜெபங்களை அவர் புறக்கணிக்க முடியாது. நிச்சயமாய் உங்களைப் பிறரை ஆசீர்வதிக்கும் வாய்க்காலாய் மாற்றுவார்.- உங்கள் வாழ்க்கையில் தேவ திட்டத்தை நிறைவேற்ற உறுதியாய் இருங்கள்.- அவர் உங்களை இரக்கமுள்ள நபராய் மாற்றுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என் இருதயத்தை உமது அன்பினால் நிரப்பி, வேதனையிலும் வியாகுலத்திலும் உள்ளவர்களிடம் மனதுருக்கத்தைக் காட்ட எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

