← செய்திகளுக்குத் திரும்பு
அசுத்த மனசாட்சிகள்
படத்தைப் பதிவிறக்கு

அசுத்த மனசாட்சிகள்

“செவ்வாய், 30 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாயிருக்கும்; அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாயிராது; அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாயிருக்கும். தீத்து 1:15 உங்கள் மனசாட்சி எப்படி இருக்கிறது? நீங்கள் எப்பொழுதும் மற்றவர்களை விமர்சிக்கிறீர்களா? உங்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் மற்றும் விஷயங்களில் தவறுகளைக் கண்டுபிடிப்பதில் நீங்கள் பேர்போனவரா? மற்றவர்களின் நல்ல செயல்களைக் குறித்து எத்தனை முறை பாராட்டுகிறீர்கள்? சுயநீதியானது பெருமைக்கு வழிவகுத்து, நம்மை இறுமாப்புள்ளவர்களாய் ஆக்கும். மற்றவர்களைப் பற்றிய விமர்சனக் கருத்துக்களைக் கூறும்போது கவனமாயிருப்போம். நாம் பெருமை என்ற வலையில் வீழ்ந்து விடாதிருப்போமாக. அதற்குப் பதிலாய், நாம் தாழ்மையுடன் இருந்து, மற்றவர்களிடம் அன்பும் மனதுருக்கமும் நிறைந்தவர்களாய்க் காணப்பட்டு, தேவனுக்கும் ஜனங்களுக்கும் முன்பாகத் தெளிவான மனசாட்சி உடையோராயிருக்க முயற்சிப்போம். மற்றவர்களை தீர்ப்பளிப்பதற்கு பதிலாக, பரிவு காட்டித் தேவைப்படுவோர்க்கு உதவ முயற்சி செய்யுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, பிறரைக் குற்றப்படுத்தாமல் உதவியாய் இருக்கத் தயவுகூர்ந்து எனக்கு ஓர் சுத்தமான மனசாட்சியைத் தந்தருளும்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய், 30 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாயிருக்கும்; அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாயிராது; அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாயிருக்கும். தீத்து 1:15 உங்கள் மனசாட்சி எப்படி இருக்கிறது? நீங்கள் எப்பொழுதும் மற்றவர்களை விமர்சிக்கிறீர்களா? உங்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் மற்றும் விஷயங்களில் தவறுகளைக் கண்டுபிடிப்பதில் நீங்கள் பேர்போனவரா? மற்றவர்களின் நல்ல செயல்களைக் குறித்து எத்தனை முறை பாராட்டுகிறீர்கள்? சுயநீதியானது பெருமைக்கு வழிவகுத்து, நம்மை இறுமாப்புள்ளவர்களாய் ஆக்கும். மற்றவர்களைப் பற்றிய விமர்சனக் கருத்துக்களைக் கூறும்போது கவனமாயிருப்போம். நாம் பெருமை என்ற வலையில் வீழ்ந்து விடாதிருப்போமாக. அதற்குப் பதிலாய், நாம் தாழ்மையுடன் இருந்து, மற்றவர்களிடம் அன்பும் மனதுருக்கமும் நிறைந்தவர்களாய்க் காணப்பட்டு, தேவனுக்கும் ஜனங்களுக்கும் முன்பாகத் தெளிவான மனசாட்சி உடையோராயிருக்க முயற்சிப்போம். மற்றவர்களை தீர்ப்பளிப்பதற்கு பதிலாக, பரிவு காட்டித் தேவைப்படுவோர்க்கு உதவ முயற்சி செய்யுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, பிறரைக் குற்றப்படுத்தாமல் உதவியாய் இருக்கத் தயவுகூர்ந்து எனக்கு ஓர் சுத்தமான மனசாட்சியைத் தந்தருளும்.