திங்கட்கிழமை, 24 ஜூன் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள். மத்தேயு 10:31 உங்கள் குடும்பத்திலோ அல்லது பணியிடத்திலோ பிறரால் புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டதாய் உணருகிறீர்களா? உங்களைச் சுற்றியுள்ளவர்களால் நீங்கள் தொடர்ந்து பரியாசம் செய்யப்பட்டு அவமானப்படுத்தப்படுகிறீர்களா? நீங்கள் தாழ்வு மனப்பான்மையுடன் காணப்படுகிறீர்களா? மற்றவர்கள் உங்களை விட அதிக செல்வந்தர்களாகவும், அறிவாளிகளாகவும், வெற்றிகரமாகவும் இருக்கிறார்கள் என்பது உண்மையாயிருக்கலாம், ஆனால், அது உங்களை தேவனின் பார்வையில் மதிப்புக் குறைந்தோராய் ஆக்காது. எனவே, பிறரது வெற்றியைக் கண்டு பயப்படவோ பொறாமைப்படவோ வேண்டாம். வளர்ச்சி மற்றும் கற்றலுக்கான வாய்ப்புகளாகச் சவால்களை ஏற்றுக் கொள்ளுங்கள். எவ்வளவு சிறிதாக இருந்தாலும் சரி உங்கள் வெற்றிகளைக் கொண்டாடுங்கள், உங்கள் பின்னடைவுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் ஒரு தெய்வீக நோக்கம் உள்ளது. உங்களுக்கும் உங்கள் கொள்கைகளுக்கும் உண்மையாய் இருப்பதன் மூலம், இந்த உலகில் நீங்கள் ஒரு நேர்மையான தாக்கத்தை ஏற்படுத்துவீர்கள். தேவன் உங்களை அடைக்கலான் குருவிகளை விட விசேஷித்தவர்களாய்க் கருதுகிறார். மேலும் அவருடைய சாயலில் உங்களைத் தனித்துவமாய் உருவாக்கியுள்ளார் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, அடைக்கலான் குருவிகளைக் காட்டிலும் நீர் என்னை விசேஷமாய்க் கருதுவதற்காக நான் நன்றியுள்ளவனா(ளா)யிருக்கிறேன். பலங்கொண்டு திடமனதாயிருக்க இருக்கத் தயவுகூர்ந்து எனக்கு உதவி செய்யும். ஆமென்.
பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும்...
“மத்தேயு 10:31 உங்கள் குடும்பத்திலோ அல்லது பணியிடத்திலோ பிறரால் புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டதாய் உணருகிறீர்களா? உங்களைச் சுற்றியுள்ளவர்களால் நீங்கள் தொடர்ந்து பரியாசம் செய்யப்பட்டு அவமானப்படுத்தப்படுகிறீர்களா? நீங்கள் தாழ்வு மனப்பான்மையுடன் காணப்படுகிறீர்களா? மற்றவர்கள் உங்களை விட அதிக செல்வந்தர்களாகவும், அறிவாளிகளாகவும், வெற்றிகரமாகவும் இருக்கிறார்கள் என்பது உண்மையாயிருக்கலாம், ஆனால், அது உங்களை தேவனின் பார்வையில் மதிப்புக் குறைந்தோராய் ஆக்காது. எனவே, பிறரது வெற்றியைக் கண்டு பயப்படவோ பொறாமைப்படவோ வேண்டாம். வளர்ச்சி மற்றும் கற்றலுக்கான வாய்ப்புகளாகச் சவால்களை ஏற்றுக் கொள்ளுங்கள். எவ்வளவு சிறிதாக இருந்தாலும் சரி உங்கள் வெற்றிகளைக் கொண்டாடுங்கள், உங்கள் பின்னடைவுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் ஒரு தெய்வீக நோக்கம் உள்ளது. உங்களுக்கும் உங்கள் கொள்கைகளுக்கும் உண்மையாய் இருப்பதன் மூலம், இந்த உலகில் நீங்கள் ஒரு நேர்மையான தாக்கத்தை ஏற்படுத்துவீர்கள். தேவன் உங்களை அடைக்கலான் குருவிகளை விட விசேஷித்தவர்களாய்க் கருதுகிறார். மேலும் அவருடைய சாயலில் உங்களைத் தனித்துவமாய் உருவாக்கியுள்ளார் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, அடைக்கலான் குருவிகளைக் காட்டிலும் நீர் என்னை விசேஷமாய்க் கருதுவதற்காக நான் நன்றியுள்ளவனா(ளா)யிருக்கிறேன். பலங்கொண்டு திடமனதாயிருக்க இருக்கத் தயவுகூர்ந்து எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

