சனிக்கிழமை, 13 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார.ஏசாயா 30:18 கடந்த காலத் தவறுகளுக்காய் உங்கள் குடும்பத்தினர் உங்களைக் கண்டிக்கும்போதும், தனிப்பட்ட பாவப் பழக்கங்களிலிருந்து விடுபட நீங்கள் போராடும்போதும், கடந்த காலத் தவறுகளினிமித்தம் நீங்கள் குற்ற மனசாட்சியால் வேதனைப்படும்போதும், இயேசுவிடம் வந்து உங்கள் வாழ்க்கையை ஒப்படைத்து, மனந்திரும்பி, அவரிடம் மன்னிப்புக் கேளுங்கள். உங்களை நீங்களே குற்றப்படுத்திக் கொள்ளாதீர்கள். உங்களை முழுவதுமாய் இயேசுவுக்கு ஒப்புக்கொடுங்கள். அவர் இரக்கத்தில் தயாளராய் இருக்கிறார். அவர் உங்களுக்குக் இரங்கும்படிக் காத்திருக்கிறார்.சிலுவையில் தம்முடைய ஜீவனைக் கொடுத்ததன் மூலம் உங்கள் பாவங்களுக்கான விலையைக் கிரயத்தைச் செலுத்தினார். அவர் உங்களுக்காக ஏற்கனவே இரட்சிப்பையும், விடுதலையையும் சம்பாதித்து வைத்திருக்கிறார். உங்கள் வாழ்க்கையை மாற்றும்படி அவர் ஏங்கிக் கொண்டிருக்கிறார். தைரியமாய் அவரிடம் வந்து, உங்கள் இன்னல்கள் எல்லாவற்றிலிருந்தும் விடுபடுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என்மேல் இரக்கமும் கிருபையுமாய் இரும். ஆமென்.
உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருக்கிறார்.
“ங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார.ஏசாயா 30:18 கடந்த காலத் தவறுகளுக்காய் உங்கள் குடும்பத்தினர் உங்களைக் கண்டிக்கும்போதும், தனிப்பட்ட பாவப் பழக்கங்களிலிருந்து விடுபட நீங்கள் போராடும்போதும், கடந்த காலத் தவறுகளினிமித்தம் நீங்கள் குற்ற மனசாட்சியால் வேதனைப்படும்போதும், இயேசுவிடம் வந்து உங்கள் வாழ்க்கையை ஒப்படைத்து, மனந்திரும்பி, அவரிடம் மன்னிப்புக் கேளுங்கள். உங்களை நீங்களே குற்றப்படுத்திக் கொள்ளாதீர்கள். உங்களை முழுவதுமாய் இயேசுவுக்கு ஒப்புக்கொடுங்கள். அவர் இரக்கத்தில் தயாளராய் இருக்கிறார். அவர் உங்களுக்குக் இரங்கும்படிக் காத்திருக்கிறார்.சிலுவையில் தம்முடைய ஜீவனைக் கொடுத்ததன் மூலம் உங்கள் பாவங்களுக்கான விலையைக் கிரயத்தைச் செலுத்தினார். அவர் உங்களுக்காக ஏற்கனவே இரட்சிப்பையும், விடுதலையையும் சம்பாதித்து வைத்திருக்கிறார். உங்கள் வாழ்க்கையை மாற்றும்படி அவர் ஏங்கிக் கொண்டிருக்கிறார். தைரியமாய் அவரிடம் வந்து, உங்கள் இன்னல்கள் எல்லாவற்றிலிருந்தும் விடுபடுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என்மேல் இரக்கமும் கிருபையுமாய் இரும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

