வியாழன், 21 செப்டம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாதிருப்பதாக; நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு, அவைகளை உன் இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள். அதினால் தேவனுடைய பார்வையிலும் மனுஷருடைய பார்வையிலும் தயையும் நற்புத்தியும் பெறுவாய். நீதிமொழிகள் 3:3-4 நீண்ட காலத்திற்கு முன்பு, பெத்லகேமை சேர்ந்த, நகோமி என்ற பெண் தொடர்ச்சியான துன்பங்களை சந்தித்துக் கொண்டிருந்தாள். அந்நிய தேசத்தில், அவள் தன் கணவனையும் இரண்டு மகன்களையும் இழந்திருந்தாள். ஆகவே, அவள் ஒரு விதவையாய் அவளுடைய மருமகள்களான ரூத் மற்றும் ஓர்பாவுடன் இருந்தாள். நகோமி தனது சொந்த நாட்டிற்குத் திரும்ப முடிவு செய்தபோது, விதவைகளான தனது மருமகள்களை அவர்களது சொந்த குடும்பங்களுடன் சென்று விடும்படி அறிவுறுத்தினாள். ஓர்பா கண்ணீருடன் விடைபெற்று சென்றுவிட்டாள், ஆனால் ரூத் நகோமியுடன் ஒட்டிக்கொண்டாள், அசைக்க முடியாத விசுவாசத்தை அவளிடம் காட்டினாள். அவள், “நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக்குறித்து, என்னோடே பேசவேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்.” ரூத்தின் உத்தமத்தை கர்த்தர் ஆசீர்வதித்தார். அவள் பரம்பரையில் இயேசு பிறந்ததைக் காண்கிறோம். தனிப்பட்ட பிரதிபலிப்புக்கான கேள்விகள்: 1. விசுவாசம் என்பதை எப்படி அர்த்தம் கொள்கிறீர்கள்?, உங்கள் தனிப்பட்ட உறவுகளிலும் அர்ப்பணிப்புகளிலும் அதை எவ்வாறு வெளிப்படுத்துகிறீர்கள்? 2. ரூத்தின் கதையில், அவளுடைய விசுவாசம் எதிர்பாராத ஆசீர்வாதங்களுக்கு வழிவகுத்தது. உங்களது விசுவாசம் அல்லது அர்ப்பணிப்பு ஒருவருக்கு அல்லது ஏதாவது ஒரு நேர்மறையான விளைவுகளையோ அல்லது தனிப்பட்ட வளர்ச்சியையோ ஏற்படுத்திய நேரத்தை உங்களால் நினைவுபடுத்த முடியுமா? நேர்மை மற்றும் விசுவாசமுள்ள நபராக இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமக்கும் தனிப்பட்ட மற்றும் பொது வாழ்க்கையிலும் என்னுடன் தொடர்புடையவர்களுக்கு உண்மையாக இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
அன்பும் விசுவாசமும் உங்களை விட்டு விலகாமல் இருக்கக்கடவது
“வியாழன், 21 செப்டம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாதிருப்பதாக; நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு, அவைகளை உன் இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள். அதினால் தேவனுடைய பார்வையிலும் மனுஷருடைய பார்வையிலும் தயையும் நற்புத்தியும் பெறுவாய். நீதிமொழிகள் 3:3-4 நீண்ட காலத்திற்கு முன்பு, பெத்லகேமை சேர்ந்த, நகோமி என்ற பெண் தொடர்ச்சியான துன்பங்களை சந்தித்துக் கொண்டிருந்தாள். அந்நிய தேசத்தில், அவள் தன் கணவனையும் இரண்டு மகன்களையும் இழந்திருந்தாள். ஆகவே, அவள் ஒரு விதவையாய் அவளுடைய மருமகள்களான ரூத் மற்றும் ஓர்பாவுடன் இருந்தாள். நகோமி தனது சொந்த நாட்டிற்குத் திரும்ப முடிவு செய்தபோது, விதவைகளான தனது மருமகள்களை அவர்களது சொந்த குடும்பங்களுடன் சென்று விடும்படி அறிவுறுத்தினாள். ஓர்பா கண்ணீருடன் விடைபெற்று சென்றுவிட்டாள், ஆனால் ரூத் நகோமியுடன் ஒட்டிக்கொண்டாள், அசைக்க முடியாத விசுவாசத்தை அவளிடம் காட்டினாள். அவள், "நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக்குறித்து, என்னோடே பேசவேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்." ரூத்தின் உத்தமத்தை கர்த்தர் ஆசீர்வதித்தார். அவள் பரம்பரையில் இயேசு பிறந்ததைக் காண்கிறோம். தனிப்பட்ட பிரதிபலிப்புக்கான கேள்விகள்: 1. விசுவாசம் என்பதை எப்படி அர்த்தம் கொள்கிறீர்கள்?, உங்கள் தனிப்பட்ட உறவுகளிலும் அர்ப்பணிப்புகளிலும் அதை எவ்வாறு வெளிப்படுத்துகிறீர்கள்? 2. ரூத்தின் கதையில், அவளுடைய விசுவாசம் எதிர்பாராத ஆசீர்வாதங்களுக்கு வழிவகுத்தது. உங்களது விசுவாசம் அல்லது அர்ப்பணிப்பு ஒருவருக்கு அல்லது ஏதாவது ஒரு நேர்மறையான விளைவுகளையோ அல்லது தனிப்பட்ட வளர்ச்சியையோ ஏற்படுத்திய நேரத்தை உங்களால் நினைவுபடுத்த முடியுமா? நேர்மை மற்றும் விசுவாசமுள்ள நபராக இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமக்கும் தனிப்பட்ட மற்றும் பொது வாழ்க்கையிலும் என்னுடன் தொடர்புடையவர்களுக்கு உண்மையாக இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

