வெள்ளிக்கிழமை, 22 செப்டம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள். மத்தேயு 5:7 பரிசுத்த வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டில், தனது சகோதரர்களுடைய பொறாமையால் மிகவும் துன்பப்பட்ட யோசேப்புப் பற்றி வாசிக்கிறோம். அவர்கள் அவரை ஒரு குழியில் எறிந்து, பின்பு எகிப்துக்கு அடிமையாக விற்றனர். அவரது எதிர்காலம் நிச்சயமற்றதாக மாறியது. என்றாலும், கர்த்தர் சூழ்நிலையை யோசேப்புக்கு சாதகமாக மாற்றினார். யோசேப்பின் சொப்பனங்களை விளக்கம் வரம் எகிப்தின் அதிபதியான பார்வோனின் கவனத்தை ஈர்த்தது. யோசப்பின் ஞானமும் தலைமைத்துவமும் எகிப்துதேசம் முழுமைக்கும் அதிகாரி என்ற பதவியைப் பெற்றுத் தந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, கடுமையான பஞ்சத்தின் போது, யோசேப்பின் சகோதரர்கள் உணவைத் தேடி எகிப்துக்கு வந்தனர். அவர்கள் உணவுக்காக யோசேப்பை சந்திக்க வேண்டியிருந்தது. யோசேப்பு அவர்களை அடையாளம் கண்டுகொண்டாலும், அவர்கள் அவரை அடையாளம் காணவில்லை. கடந்த காலத்தில் அவர்கள் செய்த துரோகத்திற்கு பழிவாங்குவதற்குப் பதிலாக, யோசேப்பு இரக்கத்தைக் காட்டினார். அவர் தனது குடும்பத்திற்கு உணவு வழங்கி, அவர் யார் என்று அவர்களிடம் கூறினார், மேலும் மகிழ்ச்சியின் கண்ணீருடன் தனது சகோதரர்களைக் கட்டிப்பிடித்தபோது அவர்களை மன்னித்தார். சிந்திக்க: 1. நீங்கள் எப்பொழுதாவது மற்றவர்கள் உங்களுக்கு துரோகம் செய்த சூழ்நிலையையோ அல்லது உங்களைத் தவறாக நடத்தின சூழ்நிலையையோ சந்தித்திருக்கிறீர்களா?; அந்த நேரத்தில் நீங்கள் எவ்வாறு நடந்து கொண்டீர்கள்? 2. நீங்கள் மற்றவர்களிடம் இரக்கம் காட்டினபோது அல்லது நீங்கள் இரக்கம் பெற்றபோது உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றி சிந்தியுங்கள். இந்த இரக்கச் செயல் உங்கள் உறவிலும் உங்கள் சொந்த நல்வாழ்விலும் எப்படித் தாக்கத்தை ஏற்படுத்தியது? * இந்த கதை இரக்கம் மற்றும் மன்னிப்பின் மறுரூபமாக்குதலையும், சமரசத்தினால் ஏற்பட்ட மகிழ்ச்சியையும், எதிர்பாராத ஆசீர்வாதங்களையும் எடுத்துக்காட்டுகிறது. * குறிப்பாக இயேசு நம்மை மன்னித்தது போல் நாமும் மற்றவர்களை மன்னிப்போம், இரக்கமுள்ளவர்களாயிருப்போம். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னைச் சுற்றியுள்ள மற்றவர்களிடம் இரக்கம் காட்ட எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.
“மத்தேயு 5:7 பரிசுத்த வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டில், தனது சகோதரர்களுடைய பொறாமையால் மிகவும் துன்பப்பட்ட யோசேப்புப் பற்றி வாசிக்கிறோம். அவர்கள் அவரை ஒரு குழியில் எறிந்து, பின்பு எகிப்துக்கு அடிமையாக விற்றனர். அவரது எதிர்காலம் நிச்சயமற்றதாக மாறியது. என்றாலும், கர்த்தர் சூழ்நிலையை யோசேப்புக்கு சாதகமாக மாற்றினார். யோசேப்பின் சொப்பனங்களை விளக்கம் வரம் எகிப்தின் அதிபதியான பார்வோனின் கவனத்தை ஈர்த்தது. யோசப்பின் ஞானமும் தலைமைத்துவமும் எகிப்துதேசம் முழுமைக்கும் அதிகாரி என்ற பதவியைப் பெற்றுத் தந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, கடுமையான பஞ்சத்தின் போது, யோசேப்பின் சகோதரர்கள் உணவைத் தேடி எகிப்துக்கு வந்தனர். அவர்கள் உணவுக்காக யோசேப்பை சந்திக்க வேண்டியிருந்தது. யோசேப்பு அவர்களை அடையாளம் கண்டுகொண்டாலும், அவர்கள் அவரை அடையாளம் காணவில்லை. கடந்த காலத்தில் அவர்கள் செய்த துரோகத்திற்கு பழிவாங்குவதற்குப் பதிலாக, யோசேப்பு இரக்கத்தைக் காட்டினார். அவர் தனது குடும்பத்திற்கு உணவு வழங்கி, அவர் யார் என்று அவர்களிடம் கூறினார், மேலும் மகிழ்ச்சியின் கண்ணீருடன் தனது சகோதரர்களைக் கட்டிப்பிடித்தபோது அவர்களை மன்னித்தார். சிந்திக்க: 1. நீங்கள் எப்பொழுதாவது மற்றவர்கள் உங்களுக்கு துரோகம் செய்த சூழ்நிலையையோ அல்லது உங்களைத் தவறாக நடத்தின சூழ்நிலையையோ சந்தித்திருக்கிறீர்களா?; அந்த நேரத்தில் நீங்கள் எவ்வாறு நடந்து கொண்டீர்கள்? 2. நீங்கள் மற்றவர்களிடம் இரக்கம் காட்டினபோது அல்லது நீங்கள் இரக்கம் பெற்றபோது உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றி சிந்தியுங்கள். இந்த இரக்கச் செயல் உங்கள் உறவிலும் உங்கள் சொந்த நல்வாழ்விலும் எப்படித் தாக்கத்தை ஏற்படுத்தியது? * இந்த கதை இரக்கம் மற்றும் மன்னிப்பின் மறுரூபமாக்குதலையும், சமரசத்தினால் ஏற்பட்ட மகிழ்ச்சியையும், எதிர்பாராத ஆசீர்வாதங்களையும் எடுத்துக்காட்டுகிறது. * குறிப்பாக இயேசு நம்மை மன்னித்தது போல் நாமும் மற்றவர்களை மன்னிப்போம், இரக்கமுள்ளவர்களாயிருப்போம். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னைச் சுற்றியுள்ள மற்றவர்களிடம் இரக்கம் காட்ட எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

