← செய்திகளுக்குத் திரும்பு
தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.
படத்தைப் பதிவிறக்கு

தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து...

“வெள்ளிக்கிழமை, 28 ஜூலை 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன். ஏசாயா 41:13 * பயம் என்பது தடைகள் மற்றும் நிச்சயமற்ற சூழ்நிலைகளை சந்திக்கும் போது நம் இருதயத்தை பற்றிக்கொள்ளும் ஒரு இயல்பான உணர்ச்சியாகும்.* பயம் விசுவாசத்திற்கு எதிரானது. பயமும், விசுவாசமும் நம் மனதில் தொடர்ந்து முரண்படுகின்றன.* உங்கள் எதிரிகளுக்கும், வாழ்க்கையின் திருப்பம் மற்றும், மாறுதல்களுக்கும் நீங்கள் பயப்படுகிறீர்களோ?* பயப்படாதேயுங்கள். 2 நாளாகமம் 20ல், யோசபாத் ராஜாவைப் பற்றி நீங்கள் படிக்கலாம், அவருக்கு எதிராக ஒரு வலிமைமிக்க எதிரியின் கூட்டணி யுத்தம் செய்ய நின்றபோது, மிகவும் பயந்தார். அவரது துன்பத்தில், வழிகாட்டுதலுக்காகவும், உதவிக்காகவும் கர்த்தரிடம் முறையிட்டார். கர்த்தர் ஒரு தீர்க்கதரிசி மூலம் யோசபாத்திடம் பேசினார், "யுத்தம் அவருடையது அல்ல, கர்த்தருடையது என்பதை அவருக்கு நினைவூட்டினார்". இயற்கைக்கு அப்பாற்பட்ட இந்த உதவியின் வாக்குறுதியால் யோசபாத்தும் அவனுடைய மக்களும் தங்கள் எதிரிகளின் முன் கர்த்தரைத் துதித்து மகிமைப்படுத்தினர். கர்த்தருடைய வாக்குறுதியின்படி யோசபாத்தின் வீரர்கள் ஆயுதம் ஏந்தாமலே எதிரிகளின் கூட்டணியைத் தோற்கடிக்கும்படி கர்த்தர் தலையிட்டார். * இக்கதை, துன்பக் காலங்களில் கர்த்தர் நமக்கு அடைக்கலம் என்பதை நினைவூட்டுகிறது.* அவருடைய பலத்தை நீங்கள் நம்பினால் பயம் நீங்கும், வாழ்வின் தடைகளை உறுதியுடன் மேற்கொள்ளலாம்.* யுத்தத்தில் யோசபாத்தின் கையை கர்த்தர் தாங்கி உயர்த்தியது போல், வாழ்க்கையின் சோதனைகள் மற்றும் நிச்சயமற்ற நிலைகளில் நீங்கள் செல்லும்போது, உங்களையும் தாங்குவார். * உங்கள் சோதனைகள் மற்றும் துன்பங்களில் நீங்கள் தனியாக இல்லை என்று கர்த்தர் உங்களுக்கு உறுதியளிக்கிறார்.* அவர் தேவைப்படும் நேரங்களில் எல்லாம் உதவிச் செய்யும் உதவியாளர். மேலும் எப்பொழுதும் உதவிக்கரம் நீட்ட தயாராக இருக்கிறார்.* ஒருபொழுதும் பயப்பட வேண்டாம். இயேசு எப்பொழுதும் உங்கள் பக்கத்தில் இருக்கிறார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னுடைய எல்லா சவாலான நேரங்களிலும் உமது உதவி மற்றும் பலத்தின் உறுதியினால் என் இருதயத்தை நிரப்பும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வெள்ளிக்கிழமை, 28 ஜூலை 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன். ஏசாயா 41:13 * பயம் என்பது தடைகள் மற்றும் நிச்சயமற்ற சூழ்நிலைகளை சந்திக்கும் போது நம் இருதயத்தை பற்றிக்கொள்ளும் ஒரு இயல்பான உணர்ச்சியாகும்.* பயம் விசுவாசத்திற்கு எதிரானது. பயமும், விசுவாசமும் நம் மனதில் தொடர்ந்து முரண்படுகின்றன.* உங்கள் எதிரிகளுக்கும், வாழ்க்கையின் திருப்பம் மற்றும், மாறுதல்களுக்கும் நீங்கள் பயப்படுகிறீர்களோ?* பயப்படாதேயுங்கள். 2 நாளாகமம் 20ல், யோசபாத் ராஜாவைப் பற்றி நீங்கள் படிக்கலாம், அவருக்கு எதிராக ஒரு வலிமைமிக்க எதிரியின் கூட்டணி யுத்தம் செய்ய நின்றபோது, மிகவும் பயந்தார். அவரது துன்பத்தில், வழிகாட்டுதலுக்காகவும், உதவிக்காகவும் கர்த்தரிடம் முறையிட்டார். கர்த்தர் ஒரு தீர்க்கதரிசி மூலம் யோசபாத்திடம் பேசினார், “யுத்தம் அவருடையது அல்ல, கர்த்தருடையது என்பதை அவருக்கு நினைவூட்டினார்”. இயற்கைக்கு அப்பாற்பட்ட இந்த உதவியின் வாக்குறுதியால் யோசபாத்தும் அவனுடைய மக்களும் தங்கள் எதிரிகளின் முன் கர்த்தரைத் துதித்து மகிமைப்படுத்தினர். கர்த்தருடைய வாக்குறுதியின்படி யோசபாத்தின் வீரர்கள் ஆயுதம் ஏந்தாமலே எதிரிகளின் கூட்டணியைத் தோற்கடிக்கும்படி கர்த்தர் தலையிட்டார். * இக்கதை, துன்பக் காலங்களில் கர்த்தர் நமக்கு அடைக்கலம் என்பதை நினைவூட்டுகிறது.* அவருடைய பலத்தை நீங்கள் நம்பினால் பயம் நீங்கும், வாழ்வின் தடைகளை உறுதியுடன் மேற்கொள்ளலாம்.* யுத்தத்தில் யோசபாத்தின் கையை கர்த்தர் தாங்கி உயர்த்தியது போல், வாழ்க்கையின் சோதனைகள் மற்றும் நிச்சயமற்ற நிலைகளில் நீங்கள் செல்லும்போது, உங்களையும் தாங்குவார். * உங்கள் சோதனைகள் மற்றும் துன்பங்களில் நீங்கள் தனியாக இல்லை என்று கர்த்தர் உங்களுக்கு உறுதியளிக்கிறார்.* அவர் தேவைப்படும் நேரங்களில் எல்லாம் உதவிச் செய்யும் உதவியாளர். மேலும் எப்பொழுதும் உதவிக்கரம் நீட்ட தயாராக இருக்கிறார்.* ஒருபொழுதும் பயப்பட வேண்டாம். இயேசு எப்பொழுதும் உங்கள் பக்கத்தில் இருக்கிறார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னுடைய எல்லா சவாலான நேரங்களிலும் உமது உதவி மற்றும் பலத்தின் உறுதியினால் என் இருதயத்தை நிரப்பும். ஆமென்.