← செய்திகளுக்குத் திரும்பு
தேவன் உங்கள் வாழ்க்கையில் அதிசயங்களைச் செய்வார்.
படத்தைப் பதிவிறக்கு

தேவன் உங்கள் வாழ்க்கையில் அதிசயங்களைச் செய்வார்.

“வியாழன், 11 ஜனவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.யோபு 9:10 * வாழ்க்கையில் முன்னேற முடியாமல் சிக்கித் தவிக்கிறீர்களா?* உங்கள் எதிர்காலத்தைக் குறித்து நம்பிக்கையிழந்து, ஒரு அதிசயம் நிகழாமல் இனிமேலும் உங்கள் கஷ்டத்திலிருந்து தப்பிக்க முடியாது என்று எண்ணுகிறீர்களா?* நீங்கள் ஒரு கடினமான நேரத்தில் கடந்து செல்லுகிறீர்களென்றால், உங்களுக்கு நம்பிக்கையும் உதவியும் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.* இயேசு கிறிஸ்து அதிசயங்களைச் செய்யும் தேவன்; அவரால் முடியாதது எதுவுமில்லை.* அவரே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறார். அவர் உங்களை ஒரு சிறந்த எதிர்காலத்தை நோக்கி அழைத்துச் செல்ல முடியும். * இயேசுவை உங்கள் வாழ்க்கையில் வரவேற்றிடுங்கள்.* தமது நாமத்தை நோக்கிக் கூப்பிடுபவர்களுக்கு உதவ அவர் எப்பொழுதும் தயாராயிருக்கிறார்.* நீங்கள் அவரை முழு மனதுடன் நம்பி, உங்கள் வாழ்க்கையை அவரிடம் ஒப்படைத்தால், நினைத்துப் பார்க்க முடியாத அதிசயங்களையும் அற்புதங்களையும் அவர் உங்களுக்குச் செய்யக்கூடும்.* அவருடைய வழிகாட்டுதல்களைப் பின்பற்ற விசுவாசமும் தைரியமும் தேவை. நீங்கள் அப்படிச் செய்யும்போது உங்கள் வாழ்க்கையில் அவருடைய நன்மையும், வல்லமையும் வெளிப்படுவதைக் காண்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் இன்று உம்மிடம் வந்து என் வாழ்க்கையை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். எனது இந்த சூழ்நிலையில் உமது இடைப்படுதலையும் வழிகாட்டலையும் நான் வேண்டுகிறேன். நீரே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறீர் என்று விசுவாசித்து, உம்மை முழு மனதுடனும் நம்புகிறேன். தயவுகூர்ந்து என்னைக் காப்பாற்ற அற்புதங்களைச் செய்து, ஒரு நல்ல எதிர்காலத்தை நோக்கி என்னை அழைத்துச் செல்லும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வியாழன், 11 ஜனவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.யோபு 9:10 * வாழ்க்கையில் முன்னேற முடியாமல் சிக்கித் தவிக்கிறீர்களா?* உங்கள் எதிர்காலத்தைக் குறித்து நம்பிக்கையிழந்து, ஒரு அதிசயம் நிகழாமல் இனிமேலும் உங்கள் கஷ்டத்திலிருந்து தப்பிக்க முடியாது என்று எண்ணுகிறீர்களா?* நீங்கள் ஒரு கடினமான நேரத்தில் கடந்து செல்லுகிறீர்களென்றால், உங்களுக்கு நம்பிக்கையும் உதவியும் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.* இயேசு கிறிஸ்து அதிசயங்களைச் செய்யும் தேவன்; அவரால் முடியாதது எதுவுமில்லை.* அவரே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறார். அவர் உங்களை ஒரு சிறந்த எதிர்காலத்தை நோக்கி அழைத்துச் செல்ல முடியும். * இயேசுவை உங்கள் வாழ்க்கையில் வரவேற்றிடுங்கள்.* தமது நாமத்தை நோக்கிக் கூப்பிடுபவர்களுக்கு உதவ அவர் எப்பொழுதும் தயாராயிருக்கிறார்.* நீங்கள் அவரை முழு மனதுடன் நம்பி, உங்கள் வாழ்க்கையை அவரிடம் ஒப்படைத்தால், நினைத்துப் பார்க்க முடியாத அதிசயங்களையும் அற்புதங்களையும் அவர் உங்களுக்குச் செய்யக்கூடும்.* அவருடைய வழிகாட்டுதல்களைப் பின்பற்ற விசுவாசமும் தைரியமும் தேவை. நீங்கள் அப்படிச் செய்யும்போது உங்கள் வாழ்க்கையில் அவருடைய நன்மையும், வல்லமையும் வெளிப்படுவதைக் காண்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் இன்று உம்மிடம் வந்து என் வாழ்க்கையை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். எனது இந்த சூழ்நிலையில் உமது இடைப்படுதலையும் வழிகாட்டலையும் நான் வேண்டுகிறேன். நீரே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறீர் என்று விசுவாசித்து, உம்மை முழு மனதுடனும் நம்புகிறேன். தயவுகூர்ந்து என்னைக் காப்பாற்ற அற்புதங்களைச் செய்து, ஒரு நல்ல எதிர்காலத்தை நோக்கி என்னை அழைத்துச் செல்லும். ஆமென்.