← செய்திகளுக்குத் திரும்பு
அவரோடுகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடுகூட ஆளுகையும் செய்வோம்.
படத்தைப் பதிவிறக்கு

அவரோடுகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடுகூட ஆளுகையும் செய்வோம்.

“2 தீமோத்தேயு 2:12 (TIRV) * கர்த்தருடையப் பிள்ளைகளுக்கு இந்தப் பூமியில் வாழ்வது நிச்சயமாக சவாலானது.* என்றாலும், நம் வாழ்வில் உள்ள சவால்கள் நம்மை அழிக்காமல், நம்மை பலப்படுத்தவும், தெய்வீக குணங்கள் நம்மில் உருவாகவும் கர்த்தர் அவற்றை அனுமதிக்கிறார்.* சகிப்புத்தன்மை என்பது சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியில் நமது விசுவாசத்தின் அளவை வரையறுக்கும் ஒரு குணம். * கருத்தரித்தல் முதல் பிரசவம் வரை, மேலும் கல்வி மற்றும் அது தொடர்பான தேர்வுகள், பட்டங்கள் மற்றும் வேலைகளுக்குத் தகுதி பெறுதல், பதவி உயர்வுகளை அடைவதற்காக வேலையில் கடினமான நேரங்களைக் கடப்பது போன்ற காரியங்களில் சகிப்புத்தன்மையுள்ளவர்களாய் பலநேரங்களில் இருக்க வேண்டியிருக்கிறது. யோசேப்பின் கதையைப் பாருங்கள். யோசேப்பின் பயணம் கடினமாக இருந்தது, அவருடைய சொந்த சகோதரர்கள் அவரை அடிமையாக விற்றுப்போட்டது முதல், பொய்யான குற்றச்சாட்டுகள் மற்றும் நியாயமற்ற சிறைவாசம் வரை அவன் சந்திக்க நேர்ந்தது. அப்படிப்பட்ட சவால்கள் இருந்தபோதிலும், அவன் கர்த்தரிடம் உள்ள நம்பிக்கையில் உறுதியாக இருந்தான். விசுவாசத்தின் மூலம் சோதனைகளைச் சகித்துக் கொண்டதன் மூலம், அவன் இறுதியில் எகிப்தில் பிரபலமடைந்து, பார்வோனின் நம்பகமான ஆலோசகராக ஆனான். யோசேப்பின் சகிப்புத்தன்மை, அதிகாரம் மற்றும் செல்வாக்கோடு ஆட்சி செய்யும் வளர்ச்சிக்கு வழிவகுத்தது, அங்கு பஞ்சத்தின் போது பலரைக் காப்பாற்ற முடிந்தது. * விசுவாசத்தில் நிலைத்திருப்பவர்களுக்கு, வரப்போகும் நித்திய மகிமையோடு ஒப்பிடுகையில் இந்தப் பூமியில் நாம் சந்திக்கும் சோதனைகள் அற்பமானவை.* கடினமான சூழ்நிலைகளை சகித்துக்கொள்வது சுலபமாக இருக்காது, ஆனால் அது கர்த்தரிடத்தில் நாம் வைத்திருக்கும் விசுவாசத்திற்கு ஒரு சான்றாகும்.* வாழ்க்கையின் சவால்களை நீங்கள் மேற்கொள்ளும் போது, உங்கள் விசுவாசம் நிறைந்த சகிப்புத்தன்மை, கிறிஸ்துவுடைய ராஜ்யத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும் திறமையைக் கொண்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் விசுவாசத்தை கைவிடாமல் சவால்களை தாங்கிக்கொள்ள எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வியாழன், 24 ஆகஸ்ட் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவரோடுகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடுகூட ஆளுகையும் செய்வோம். 2 தீமோத்தேயு 2:12 (TIRV) * கர்த்தருடையப் பிள்ளைகளுக்கு இந்தப் பூமியில் வாழ்வது நிச்சயமாக சவாலானது.* என்றாலும், நம் வாழ்வில் உள்ள சவால்கள் நம்மை அழிக்காமல், நம்மை பலப்படுத்தவும், தெய்வீக குணங்கள் நம்மில் உருவாகவும் கர்த்தர் அவற்றை அனுமதிக்கிறார்.* சகிப்புத்தன்மை என்பது சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியில் நமது விசுவாசத்தின் அளவை வரையறுக்கும் ஒரு குணம். * கருத்தரித்தல் முதல் பிரசவம் வரை, மேலும் கல்வி மற்றும் அது தொடர்பான தேர்வுகள், பட்டங்கள் மற்றும் வேலைகளுக்குத் தகுதி பெறுதல், பதவி உயர்வுகளை அடைவதற்காக வேலையில் கடினமான நேரங்களைக் கடப்பது போன்ற காரியங்களில் சகிப்புத்தன்மையுள்ளவர்களாய் பலநேரங்களில் இருக்க வேண்டியிருக்கிறது. யோசேப்பின் கதையைப் பாருங்கள். யோசேப்பின் பயணம் கடினமாக இருந்தது, அவருடைய சொந்த சகோதரர்கள் அவரை அடிமையாக விற்றுப்போட்டது முதல், பொய்யான குற்றச்சாட்டுகள் மற்றும் நியாயமற்ற சிறைவாசம் வரை அவன் சந்திக்க நேர்ந்தது. அப்படிப்பட்ட சவால்கள் இருந்தபோதிலும், அவன் கர்த்தரிடம் உள்ள நம்பிக்கையில் உறுதியாக இருந்தான். விசுவாசத்தின் மூலம் சோதனைகளைச் சகித்துக் கொண்டதன் மூலம், அவன் இறுதியில் எகிப்தில் பிரபலமடைந்து, பார்வோனின் நம்பகமான ஆலோசகராக ஆனான். யோசேப்பின் சகிப்புத்தன்மை, அதிகாரம் மற்றும் செல்வாக்கோடு ஆட்சி செய்யும் வளர்ச்சிக்கு வழிவகுத்தது, அங்கு பஞ்சத்தின் போது பலரைக் காப்பாற்ற முடிந்தது. * விசுவாசத்தில் நிலைத்திருப்பவர்களுக்கு, வரப்போகும் நித்திய மகிமையோடு ஒப்பிடுகையில் இந்தப் பூமியில் நாம் சந்திக்கும் சோதனைகள் அற்பமானவை.* கடினமான சூழ்நிலைகளை சகித்துக்கொள்வது சுலபமாக இருக்காது, ஆனால் அது கர்த்தரிடத்தில் நாம் வைத்திருக்கும் விசுவாசத்திற்கு ஒரு சான்றாகும்.* வாழ்க்கையின் சவால்களை நீங்கள் மேற்கொள்ளும் போது, உங்கள் விசுவாசம் நிறைந்த சகிப்புத்தன்மை, கிறிஸ்துவுடைய ராஜ்யத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும் திறமையைக் கொண்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் விசுவாசத்தை கைவிடாமல் சவால்களை தாங்கிக்கொள்ள எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.