← செய்திகளுக்குத் திரும்பு
ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்.
படத்தைப் பதிவிறக்கு

ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி...

“செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். அப்போஸ்தலர் 1:8 * யோவான் புத்தகத்தில், இயேசு சீஷர்களிடம் தாம் பரலோகத்திற்குச் சென்ற பிறகு, அவர்களுடன் எப்பொழுதும் இருக்கும் பரிசுத்த ஆவியானவரை அனுப்புவதாக கூறினார்.* உலகம் முழுவதும் தம்முடைய சாட்சிகளாக இருக்க, பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பார் என்றும் கூறினார். * பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலர்களுக்கு மட்டுமல்ல, இயேசுவை தங்கள் சொந்த இரட்சகராகவும் ஆண்டவராகவும் ஏற்றுக்கொள்ளும் அனைவருக்கும் வாக்களிக்கப்பட்டிருக்கிறது.* இந்த தெய்வீக அதிகாரம் நமது அருகாமையிலும், உலகின் தொலைதூர மூலைகளிலும் நம்மூலம் தாக்கத்தை உண்டாக்க நம்மிடம் கிரியைச் செய்கிறது. பெந்தெகொஸ்தே நாளில் நடந்த சம்பவம் இந்த வாக்குறுதியை நிறைவேற்றியது. சீஷர்கள் எருசலேமில் கூடியிருந்தபோது, பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி வீடு முழுவதையும் நிரப்பிற்று. மேலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது. பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு வெவ்வேறு பாஷைகளிலே பேச, அதைக்கேட்டு, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஜனங்கள் அங்கே திரளாக கூடி வந்தனர். இந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வு பேதுருவை எழுந்து நின்று தைரியமாக நற்செய்தியைப் பேசுவதற்கு அதிகாரம் அளித்தது. அந்த நாளில், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டனர். இது ஆரம்பகால திருச்சபை உருவானதைக் குறிக்கிறது. * அதேபோல், கர்த்தர் உங்களையும் உலகத்தை மாற்றியமைப்பவராகவும், வரலாற்றை உருவாக்குபவராகவும் தெரிந்தெடுத்துள்ளார்.* அவர் உங்களை மிகவும் அசாதாரணமான காரியங்களைச் செய்ய தெரிந்தெடுத்திருக்கிறார்.* பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, உங்கள் வார்த்தைகள் மற்றும் செயல்கள் மூலம் அற்புதங்களைச் செய்ய அவருக்கு இடங்கொடுங்கள்.* நீங்கள் பலருக்கு ஆசீர்வாதமாக இருப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என்னை பரிசுத்த ஆவியால் நிரப்பி, உமது வல்லமைமிக்க சாட்சியாக இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். அப்போஸ்தலர் 1:8 * யோவான் புத்தகத்தில், இயேசு சீஷர்களிடம் தாம் பரலோகத்திற்குச் சென்ற பிறகு, அவர்களுடன் எப்பொழுதும் இருக்கும் பரிசுத்த ஆவியானவரை அனுப்புவதாக கூறினார்.* உலகம் முழுவதும் தம்முடைய சாட்சிகளாக இருக்க, பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பார் என்றும் கூறினார். * பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலர்களுக்கு மட்டுமல்ல, இயேசுவை தங்கள் சொந்த இரட்சகராகவும் ஆண்டவராகவும் ஏற்றுக்கொள்ளும் அனைவருக்கும் வாக்களிக்கப்பட்டிருக்கிறது.* இந்த தெய்வீக அதிகாரம் நமது அருகாமையிலும், உலகின் தொலைதூர மூலைகளிலும் நம்மூலம் தாக்கத்தை உண்டாக்க நம்மிடம் கிரியைச் செய்கிறது. பெந்தெகொஸ்தே நாளில் நடந்த சம்பவம் இந்த வாக்குறுதியை நிறைவேற்றியது. சீஷர்கள் எருசலேமில் கூடியிருந்தபோது, பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி வீடு முழுவதையும் நிரப்பிற்று. மேலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது. பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு வெவ்வேறு பாஷைகளிலே பேச, அதைக்கேட்டு, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஜனங்கள் அங்கே திரளாக கூடி வந்தனர். இந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வு பேதுருவை எழுந்து நின்று தைரியமாக நற்செய்தியைப் பேசுவதற்கு அதிகாரம் அளித்தது. அந்த நாளில், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டனர். இது ஆரம்பகால திருச்சபை உருவானதைக் குறிக்கிறது. * அதேபோல், கர்த்தர் உங்களையும் உலகத்தை மாற்றியமைப்பவராகவும், வரலாற்றை உருவாக்குபவராகவும் தெரிந்தெடுத்துள்ளார்.* அவர் உங்களை மிகவும் அசாதாரணமான காரியங்களைச் செய்ய தெரிந்தெடுத்திருக்கிறார்.* பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, உங்கள் வார்த்தைகள் மற்றும் செயல்கள் மூலம் அற்புதங்களைச் செய்ய அவருக்கு இடங்கொடுங்கள்.* நீங்கள் பலருக்கு ஆசீர்வாதமாக இருப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என்னை பரிசுத்த ஆவியால் நிரப்பி, உமது வல்லமைமிக்க சாட்சியாக இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.