வெள்ளிக்கிழமை, 4 ஆகஸ்ட் 2023இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி; என் வசனங்களுக்கு உன் செவியைச் சாய். அவைகள் உன் கண்களை விட்டுப்பிரியாதிருப்பதாக; அவைகளை உன் இருதயத்துக்குள்ளே காத்துக்கொள்.நீதிமொழிகள் 4:20-21 * வேதாகம வரலாற்றில் சாமுவேல் மிகச் சிறந்த தீர்க்கதரிசிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். சாமுவேல் ஒரு சிறுவனாக சீலோவில் உள்ள கர்த்தருடைய ஆலயத்துக்கு அழைத்து வரப்பட்டார், அங்கு அவர் ஆசாரியன் ஏலியினிடத்தில் பணியாற்றினார். ஒரு நாள் இரவு ஆலயத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது, சாமுவேலுக்கு யாரோ தன் பெயரைக் கூப்பிடும் சத்தம் கேட்டது. சாமுவேல் ஏலி கூப்பிடுகிறார் என்று நினைத்து ஓடி ஏலியிடம் சென்றார் , ஆனால் ஏலி அவரை அழைக்கவில்லை என்று கூறினார். கர்த்தர் சாமுவேலை கூப்பிடுகிறார் என்று ஏலி அறிந்துக் கொள்ளும் வரை இது மூன்று முறை நடந்தது. அதன்பிறகு ஏலி சாமுவேலிடம், “நீ போய்ப்படுத்துக்கொள்; மீண்டும் உன்னைக் கூப்பிட்டால், அப்பொழுது நீ: கர்த்தாவே சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்று சொல் என்றான்”. கர்த்தர் மறுபடியும் சாமுவேலைக் கூப்பிட்டபோது, சாமுவேல் அதன் படியே செய்தார். கர்த்தர் சாமுவேலோடு பேசினார். * இது சாமுவேலின் வாழ்க்கையை மாற்றிய தருணமாகும்; அப்பொழுதிலிருந்து, கர்த்தரின் சத்தத்தைக் கண்டறியும் அறிவில் அவர் வளர்ந்தார்.* சாமுவேலைப் போலவே, நாமும் கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டு, கீழ்ப்படியவும், அவருக்கு பதிலளிக்க தயாராக இருக்கவும் அழைக்கப்பட்டுள்ளோம்.* கவனச்சிதறல்களும் சத்தமும் நிறைந்த இந்த உலகில், கர்த்தருடைய வார்த்தைகளுக்கு கவனம் செலுத்தும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்வது இன்றியமையாதது. * நாம் அவருடன் நெருங்கி இருக்கும்போது, நம் வாழ்க்கைக்கான வழிக்காட்டுதலையும், கஷ்ட காலங்களில் ஆறுதலையும், அவருடைய வழிகளில் நடப்பதற்கான பலத்தையும் பெற்றுக் கொள்ளலாம்.* தினமும் இயேசுவுடன் நேரத்தை செலவிடுங்கள், உங்கள் கவலைகளை அவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள், அவரைத் துதியுங்கள், அவருடைய வார்த்தைகளைக் கவனித்துக் கேளுங்கள்.* உங்கள் வாழ்க்கையில் இனி முன்பு போல் இராமல் மாற்றம் உண்டாகும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது வார்த்தைகளைக் கவனிக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
கர்த்தருடைய வார்த்தைகளுக்கு கவனமாயிருங்கள்.
“வெள்ளிக்கிழமை, 4 ஆகஸ்ட் 2023இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி; என் வசனங்களுக்கு உன் செவியைச் சாய். அவைகள் உன் கண்களை விட்டுப்பிரியாதிருப்பதாக; அவைகளை உன் இருதயத்துக்குள்ளே காத்துக்கொள்.நீதிமொழிகள் 4:20-21 * வேதாகம வரலாற்றில் சாமுவேல் மிகச் சிறந்த தீர்க்கதரிசிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். சாமுவேல் ஒரு சிறுவனாக சீலோவில் உள்ள கர்த்தருடைய ஆலயத்துக்கு அழைத்து வரப்பட்டார், அங்கு அவர் ஆசாரியன் ஏலியினிடத்தில் பணியாற்றினார். ஒரு நாள் இரவு ஆலயத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது, சாமுவேலுக்கு யாரோ தன் பெயரைக் கூப்பிடும் சத்தம் கேட்டது. சாமுவேல் ஏலி கூப்பிடுகிறார் என்று நினைத்து ஓடி ஏலியிடம் சென்றார் , ஆனால் ஏலி அவரை அழைக்கவில்லை என்று கூறினார். கர்த்தர் சாமுவேலை கூப்பிடுகிறார் என்று ஏலி அறிந்துக் கொள்ளும் வரை இது மூன்று முறை நடந்தது. அதன்பிறகு ஏலி சாமுவேலிடம், "நீ போய்ப்படுத்துக்கொள்; மீண்டும் உன்னைக் கூப்பிட்டால், அப்பொழுது நீ: கர்த்தாவே சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்று சொல் என்றான்". கர்த்தர் மறுபடியும் சாமுவேலைக் கூப்பிட்டபோது, சாமுவேல் அதன் படியே செய்தார். கர்த்தர் சாமுவேலோடு பேசினார். * இது சாமுவேலின் வாழ்க்கையை மாற்றிய தருணமாகும்; அப்பொழுதிலிருந்து, கர்த்தரின் சத்தத்தைக் கண்டறியும் அறிவில் அவர் வளர்ந்தார்.* சாமுவேலைப் போலவே, நாமும் கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டு, கீழ்ப்படியவும், அவருக்கு பதிலளிக்க தயாராக இருக்கவும் அழைக்கப்பட்டுள்ளோம்.* கவனச்சிதறல்களும் சத்தமும் நிறைந்த இந்த உலகில், கர்த்தருடைய வார்த்தைகளுக்கு கவனம் செலுத்தும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்வது இன்றியமையாதது. * நாம் அவருடன் நெருங்கி இருக்கும்போது, நம் வாழ்க்கைக்கான வழிக்காட்டுதலையும், கஷ்ட காலங்களில் ஆறுதலையும், அவருடைய வழிகளில் நடப்பதற்கான பலத்தையும் பெற்றுக் கொள்ளலாம்.* தினமும் இயேசுவுடன் நேரத்தை செலவிடுங்கள், உங்கள் கவலைகளை அவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள், அவரைத் துதியுங்கள், அவருடைய வார்த்தைகளைக் கவனித்துக் கேளுங்கள்.* உங்கள் வாழ்க்கையில் இனி முன்பு போல் இராமல் மாற்றம் உண்டாகும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது வார்த்தைகளைக் கவனிக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

