← செய்திகளுக்குத் திரும்பு
தீமையை வெறுத்து, நன்மையைப்பற்றிக்கொண்டிருங்கள்.
படத்தைப் பதிவிறக்கு

தீமையை வெறுத்து, நன்மையைப்பற்றிக்கொண்டிருங்கள்.

“சனிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக; தீமையை வெறுத்து, நன்மையைப்பற்றிக்கொண்டிருங்கள். ரோமர் 12:9 மத்தேயு நற்செய்தியில் இயேசு எருசலேம் தேவாலயத்தை சுத்திகரிப்பதைப் பற்றி படிக்கிறோம். அந்த நேரம் பஸ்கா பண்டிகை‌ என்பதால் ஆலயத்தில் பணிந்துக்கொள்ள மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் வந்திருந்தனர். தேவாலயம் ஜெபவீடாயிருப்பதற்குப்‌ பதிலாக வியாபார ஸ்தலமாக மாற்றப்பட்டிருப்பதை இயேசு கண்டார். ஆடுகள், மாடுகள், புறாக்கள் விற்கிறதையும், காசுக் காரர்களுடையப் காசு பரிமாற்றத்தையும் பார்த்தார். தேவாலயத்தின் இந்த சீர்கேட்டை இயேசு கண்டபோது, அவர் பக்தி வைராக்கியத்தால் கோபமடைந்து, வியாபாரிகளை விரட்டியடித்து மேசைகளை கவிழ்த்துப் போட்டார். * தவறான காரியங்களுக்கு எதிராக எப்படி நாம் மிகவும் வலிமையாக இருக்க வேண்டும் என்பதை இயேசு காட்டினார்.* எல்லாவற்றுக்கும் மேலாக, உண்மையாக நாம் அவரைத் தொழுது கொண்டு, பயபக்தியோடு அவருக்கு முன்னுரிமைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும், நாம் பின்பற்றுவதற்கு ஒரு முன்மாதிரியை காட்டினார்.* நீங்கள் பரிசுத்த தேவனுடைய ஆலயம் என்று வேதாகமம் கூறுகிறது. * அதைப் பரிசுத்தமாகக் காத்துக் கொள்வதும், உங்கள் உள்ளத்தில் இருந்து தொடர்ந்து துதியும் ஜெபமும் ஏறெடுக்கப்ப்படுவதை உறுதி செய்வதும் உங்களின் மேலான பொறுப்பு ஆகும்.* இயேசுவின் மீதான விசுவாசத்தில் நாம் உண்மையானவர்களாக இருக்க வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். இந்த உலகமும் அதை எதிர்பார்க்கிறது.* போலியான வாழ்க்கை வாழ வேண்டாம்.* கர்த்தர் எல்லா வகையான மாயமாலத்திற்கும் எதிரானவர்.* இந்த உலகத்திற்கு அவருடைய அன்பைக் காட்டுவதில் உண்மையாக இருப்போம், பரிசுத்தமாக வாழ்ந்து, கர்த்தரின் பார்வையில் சரியானதைச் செய்வோம். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் விசுவாச வாழ்க்கையில் உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்கவும், இந்த உலகில் உமக்கான வல்லமை வாய்ந்த சாட்சியாக இருக்கவும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

சனிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக; தீமையை வெறுத்து, நன்மையைப்பற்றிக்கொண்டிருங்கள். ரோமர் 12:9 மத்தேயு நற்செய்தியில் இயேசு எருசலேம் தேவாலயத்தை சுத்திகரிப்பதைப் பற்றி படிக்கிறோம். அந்த நேரம் பஸ்கா பண்டிகை‌ என்பதால் ஆலயத்தில் பணிந்துக்கொள்ள மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் வந்திருந்தனர். தேவாலயம் ஜெபவீடாயிருப்பதற்குப்‌ பதிலாக வியாபார ஸ்தலமாக மாற்றப்பட்டிருப்பதை இயேசு கண்டார். ஆடுகள், மாடுகள், புறாக்கள் விற்கிறதையும், காசுக் காரர்களுடையப் காசு பரிமாற்றத்தையும் பார்த்தார். தேவாலயத்தின் இந்த சீர்கேட்டை இயேசு கண்டபோது, அவர் பக்தி வைராக்கியத்தால் கோபமடைந்து, வியாபாரிகளை விரட்டியடித்து மேசைகளை கவிழ்த்துப் போட்டார். * தவறான காரியங்களுக்கு எதிராக எப்படி நாம் மிகவும் வலிமையாக இருக்க வேண்டும் என்பதை இயேசு காட்டினார்.* எல்லாவற்றுக்கும் மேலாக, உண்மையாக நாம் அவரைத் தொழுது கொண்டு, பயபக்தியோடு அவருக்கு முன்னுரிமைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும், நாம் பின்பற்றுவதற்கு ஒரு முன்மாதிரியை காட்டினார்.* நீங்கள் பரிசுத்த தேவனுடைய ஆலயம் என்று வேதாகமம் கூறுகிறது. * அதைப் பரிசுத்தமாகக் காத்துக் கொள்வதும், உங்கள் உள்ளத்தில் இருந்து தொடர்ந்து துதியும் ஜெபமும் ஏறெடுக்கப்ப்படுவதை உறுதி செய்வதும் உங்களின் மேலான பொறுப்பு ஆகும்.* இயேசுவின் மீதான விசுவாசத்தில் நாம் உண்மையானவர்களாக இருக்க வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். இந்த உலகமும் அதை எதிர்பார்க்கிறது.* போலியான வாழ்க்கை வாழ வேண்டாம்.* கர்த்தர் எல்லா வகையான மாயமாலத்திற்கும் எதிரானவர்.* இந்த உலகத்திற்கு அவருடைய அன்பைக் காட்டுவதில் உண்மையாக இருப்போம், பரிசுத்தமாக வாழ்ந்து, கர்த்தரின் பார்வையில் சரியானதைச் செய்வோம். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் விசுவாச வாழ்க்கையில் உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்கவும், இந்த உலகில் உமக்கான வல்லமை வாய்ந்த சாட்சியாக இருக்கவும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.