← செய்திகளுக்குத் திரும்பு
சிலரை இரட்சிக்கும்படிக்கு எல்லாருக்கும் எல்லாமுமாகுங்கள்.
படத்தைப் பதிவிறக்கு

சிலரை இரட்சிக்கும்படிக்கு எல்லாருக்கும் எல்லாமுமாகுங்கள்.

“புதன்கிழமை, 2 ஆகஸ்ட் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன்; எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன். 1 கொரிந்தியர் 9:22 * இந்த வசனம், அப்போஸ்தலனாகிய பவுலின் அளவற்ற இரக்கத்தையும், மற்றவர்களோடு ஒத்துப்போகும் தன்மையையும், மக்களைச் சந்தித்து அவர்களுடன் அடையாளம் காணுவதையும் காட்டுகிறது.* அவர் தம்முடைய கிறிஸ்தவ அடையாளத்தை பாதிக்காமல் மக்களுடன் பழகினார்.* மக்களை அழிவிலிருந்துக் காப்பாற்றி கர்த்தருடைய ராஜ்யத்திற்குள் கொண்டுவருவதே அவருடைய முக்கிய நோக்கமாக இருந்தது.* அதேபோல, இயேசு, ஏழைகள், ஆதரவற்றவர்கள் மற்றும் பாவிகளுடன் நடமாடுவதைக் காண முடிந்தது. ஆதியாகமம் 37-50ல் உள்ள யோசேப்பின் அனுபவம், பல்வேறு சூழ்நிலைகளில் அவரது ஒத்துப்போகும் திறனைக் காட்டுகிறது. யோசேப்பு, அடிமையாக விற்கப்படுவதிலிருந்து தவறாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது வரை கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து, தொடர்ந்து தன் சூழ்நிலைகளுக்கு ஏற்பத் தன்னை மாற்றிக் கொண்டார். கர்த்தர் இந்த அனுபவங்களைப் பயன்படுத்தி அவரை எகிப்தின் அதிபதியாகவும், இரட்சகராகவும் மாற்றினார். * உங்கள் தற்போதைய வாழ்க்கைப் பயணம், ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கலாம். மேலும், பல்வேறு கலாச்சாரங்கள், மதக் கொள்கைகள், பல்வேறு வாழ்க்கை முறைகளைச் சேர்ந்த நபர்களுடன் பழக வேண்டிய சூழ்நிலையிலும் இருக்கலாம் .* கிறிஸ்துவில் உங்கள் அடையாளத்திற்கு உண்மையாக இருக்கும் போது நிலைமைகள் மற்றும் சவால்களுக்கு ஏற்ப உங்களை‌ மாற்றியமைக்கும் தன்மைக்கு எடுத்துக்காட்டாக நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்.* அந்த வழியில், நீங்கள் கிறிஸ்துவின் இயல்பை வெளிப்படுத்தலாம், அது கர்த்தருக்கு ஒரு வலுவான சாட்சியாக இருக்கும். * மற்றவர்களை அவர்கள் யார் என்பதற்காக ஒருபோதும் கண்டனம் செய்யாதீர்கள்; மாறாக, அவர்களிடன் அன்புக்காட்டக் கற்றுக்கொள்ளுங்கள் மற்றும் உங்களில் கிறிஸ்துவின் அன்பையும் நன்மையையும் அனுபவிக்க அவர்களுக்கு உதவுங்கள்.* உங்கள் வார்த்தைகளை விட உங்கள் செயல்கள் சத்தமாக பேசட்டும். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, எல்லாருக்கும் எல்லாமுமாயிருந்து, சத்தியத்தை விட்டுக்கொடுக்காமல் உமது இரக்கத்தையும், புரிதலையும் அவர்களுக்குக் காண்பிக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

புதன்கிழமை, 2 ஆகஸ்ட் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன்; எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன். 1 கொரிந்தியர் 9:22 * இந்த வசனம், அப்போஸ்தலனாகிய பவுலின் அளவற்ற இரக்கத்தையும், மற்றவர்களோடு ஒத்துப்போகும் தன்மையையும், மக்களைச் சந்தித்து அவர்களுடன் அடையாளம் காணுவதையும் காட்டுகிறது.* அவர் தம்முடைய கிறிஸ்தவ அடையாளத்தை பாதிக்காமல் மக்களுடன் பழகினார்.* மக்களை அழிவிலிருந்துக் காப்பாற்றி கர்த்தருடைய ராஜ்யத்திற்குள் கொண்டுவருவதே அவருடைய முக்கிய நோக்கமாக இருந்தது.* அதேபோல, இயேசு, ஏழைகள், ஆதரவற்றவர்கள் மற்றும் பாவிகளுடன் நடமாடுவதைக் காண முடிந்தது. ஆதியாகமம் 37-50ல் உள்ள யோசேப்பின் அனுபவம், பல்வேறு சூழ்நிலைகளில் அவரது ஒத்துப்போகும் திறனைக் காட்டுகிறது. யோசேப்பு, அடிமையாக விற்கப்படுவதிலிருந்து தவறாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது வரை கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து, தொடர்ந்து தன் சூழ்நிலைகளுக்கு ஏற்பத் தன்னை மாற்றிக் கொண்டார். கர்த்தர் இந்த அனுபவங்களைப் பயன்படுத்தி அவரை எகிப்தின் அதிபதியாகவும், இரட்சகராகவும் மாற்றினார். * உங்கள் தற்போதைய வாழ்க்கைப் பயணம், ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கலாம். மேலும், பல்வேறு கலாச்சாரங்கள், மதக் கொள்கைகள், பல்வேறு வாழ்க்கை முறைகளைச் சேர்ந்த நபர்களுடன் பழக வேண்டிய சூழ்நிலையிலும் இருக்கலாம் .* கிறிஸ்துவில் உங்கள் அடையாளத்திற்கு உண்மையாக இருக்கும் போது நிலைமைகள் மற்றும் சவால்களுக்கு ஏற்ப உங்களை‌ மாற்றியமைக்கும் தன்மைக்கு எடுத்துக்காட்டாக நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்.* அந்த வழியில், நீங்கள் கிறிஸ்துவின் இயல்பை வெளிப்படுத்தலாம், அது கர்த்தருக்கு ஒரு வலுவான சாட்சியாக இருக்கும். * மற்றவர்களை அவர்கள் யார் என்பதற்காக ஒருபோதும் கண்டனம் செய்யாதீர்கள்; மாறாக, அவர்களிடன் அன்புக்காட்டக் கற்றுக்கொள்ளுங்கள் மற்றும் உங்களில் கிறிஸ்துவின் அன்பையும் நன்மையையும் அனுபவிக்க அவர்களுக்கு உதவுங்கள்.* உங்கள் வார்த்தைகளை விட உங்கள் செயல்கள் சத்தமாக பேசட்டும். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, எல்லாருக்கும் எல்லாமுமாயிருந்து, சத்தியத்தை விட்டுக்கொடுக்காமல் உமது இரக்கத்தையும், புரிதலையும் அவர்களுக்குக் காண்பிக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.